இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 செப்டம்பர், 2013

தாய் சொல்லை தட்டியவன் நோயாளியாவான்

ஜானகி தன் மகன் ஜனகனை தாயாகவும் தந்தையாகவும் வளர்த்துவந்தாள். ஆமாம் இளம் விதவை அவள் . அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் ஜனகன் தான் . 

அவனுக்காகவே மறு திருமணம் கூட செய்யாமல் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருந்தால் பாடசாலைக்கு கூட்டி செல்வது முதல் சகல இடத்துக்கும் கோழி தன் குஞ்சை செட்டையில் வைத்து காப்பதுபோல் காத்து வந்தாள்.

காலம் வேகமாக ஓடியது ஜனகன் 18 வயது இளைஞனானான் இப்போ தாயில் சிறகுக்குள் இருந்து விலகதுடித்தான் .விலகினான் .நண்பர்களோடு அரட்டையும் ரவுடிததானமும் செய்தான்.புகைத்தான்மதுஅருந்தினான்..கிளப்புகளுக்கு போனான் பேதைக்கும் போதைக்கும் அடிமையானான் .

தான் அனுபவிப்பதே உலக இன்பம் என்று கண்மூடித்தனமாக நம்பினான் .தாயின் கனவையும் கருகவிட்டான் . தாயின் மரணவீட்டில் கூட போதையில் தான் தீமூட்டினான் .22வயதில் நோயாளியும் ஆகிவிட்டான் .

தாயின் படத்துக்கு முன்னாள் வந்து மண்டியிட்டு அழுதான் . தாயே என்னை விரைவாக கூப்பிடு 
கண்டதெல்லாம் கோலம் என்று வாழ்ந்து .இப்போ சிறுவயதில் நோயாளியாகி விட்டேன் ...!!!

இறக்கும் நிலையில் இருக்கும் நான் ஒன்றை சொல்கிறேன் ..."தந்தை சொல் கேட்காதவன் "
பொருளாதார கஸ்டத்தை அனுபவிப்பான் ."தாயின்சொல் கேட்காதவன் " நோயாளியாவான் .

(எனது ஒரு பக்க கதை )