Thursday, June 13, 2013

அவள் என்னை
பிரிந்து விட்டாள்
என்பது எனக்கு தெரியும்...!!!
பாவம்
இதயம் 
அவளின் பெயரை 
நினைத்துக் கொண்டிருக்கிறது 
அவளுக்காக துடித்துக்கொண்டும் ..
இருக்கிறது ...!!

நல்ல மழை
வரும் என்று கூறி 
வானிலை நிலைய ..
அதிகாரி ஏமாற்றினார் ...!!!

நதிநீர் கிடைக்கும் 
என்று ஏமாற்றிய 
நதிநீர் ஆணைக்குழு ...!!!

நல்ல விலை...
தருவதாய்ச் சொல்லி
ஏமாற்றும் அரசியல்
வாதிகள்..!

எல்லாவற்றையும் ..
நம்பி ஏமார்ந்த என் ..
குடும்பம் மரணத்தின் ..
விழிம்பில் ..
விவசாயியாக பிறந்தது ..
என் குற்றமா ...??
ஒரு நல்ல நண்பன் போதும்
நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!

ஆனால்...

ஒரு வாழ்க்கை போதாது
நம் நண்பர்களுடன்
வாழ்வதற்கு..!!!

காதலை சுவாசமாக ..
எடுத்துக்கொள் 
நட்பை இதயமாக ...
பார்த்துக்கொள் ....!!!

உன் காதல் தெரிகிறது ...

என் ஒவ்வொரு இதய துடிப்பும் 
உன்னையும் என்னையும் 
வானமும் நிலாவும் போல் 
அழகாக காட்டுகிறது ...

காதல் இல்லையென்றால் ..
வாழ்வதை விட ..
பிறந்திருக்காமல் ..
இருந்திருக்கலாம் ..
காதலுக்கு நிகர் ..
காதல் தான் ...!!!

உன் கண்ணில் என் காதல் ..
தெரிகிறது என் கண்ணில் ..
உன் காதல் தெரிகிறது ...
உண்மை காதல் யாரில் ..
யாரிருக்கிறார்கள் ..
எப்படி இருக்கிறார்கள் ..
என்றெல்லாம் 
கண்டுகொள்ள முடியாது ...!!!

இறைவா ...!!!
என் இதயத்தை ஏன்..?
மென்மையாக படைத்தாய் 
ஏளனம் செய்கிறார்கள் 
ஏமாற்றுகிறார்கள் 

கையால் ஆகாதவன் என்கிறார்கள் 
கோழை என்கிறார்கள் 
நான் மென்மையான 
இதயத்தில் பிறந்தது 
குற்றமா ..?-இல்லை 
மற்றவர்கள் -வன் இதயத்தை 
கொண்டவர்களா ...?


பொறுத்த மில்லாத -என் 
இதயத்தை மாற்று 
நானும் சமூகத்தில் 
இணைந்து வாழ்வதற்கு ....!!!
சிப்பிக்குள் விழுந்த 
மழைத்துளி போல் 
பத்திரப்படுத்தி விட்டேன் 
என்னுள் விழுந்த உன்னை! 
நிச்சயம் நீ என் காதல் முத்து ..!!!

**************
என் மனதோடு 
என் நினைவோடும் 
என்னவளின் நினைவை 
அவள் என்னை பிரிந்தாலும், 
என் உயிரை உள்ளவரை ...!!!
கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
நான் புகைப்படமாக‌
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
என் இதயத்தை பார்ப்பேன்
நீ சிரித்து பேசினால் நட்சத்திரம் மின்னும் 
நீ முறைத்து பேசினால் மேகம் கறுக்கும் 
நீ மறைத்து பேசினால் சூரியன் மறையும் 
நீ துன்பப்பட்டு பேசினால் இடி இடிக்கும் 
நீ உருக்கத்தோடு பேசினால் தென்றல் வீசும் 
நீ பேசாமல் இருந்தால் வானம் மப்பும் மந்தாரமுமாகும் 
நீ தான் என் பருவகாலமாயிற்றே

என் உள்ளத்தில் காதல்
வேண்டாம் ‍போதும்
அவஸ்தை
தயவு செய்து இன்னும்
கொஞ்சம் காயப்படுத்து
உன்னை நினைத்தபடி வாழ‌

என் ஒவ்வொரு இமை
சிமிட்டலும் உன்னை
நான் இழப்பதாகவே
வருந்துகிறேன் தயவு செய்து
கண்சிமிட்டும் நேரம் வராதே

காதல் என்பது
உடல் முழுவதும்
உள்ளமாக‌ மாறும்
இயற்கை நிகழ்வு

கஸல்;141
இதயத்தில் 
நினைவுகள் படிந்திருந்தன 
அவளோடு இருந்த பொழுதுகள் 
என்னுள் புதைந்திருந்தது 
****************

பார்வையோடு 
கண்ணீரும் கசிந்தன 
அவள் கண்ணீரோடு 
வாழ்நாளும் 
கரைந்துகொண்டிருந்தது

 உடைத்தது நீ (கஸல்)

என் மனம் உன் பார்வையால்
உடைந்து சுக்குனூராகிவிட்டது
கவலைப்படவில்லை
உடைத்தது நீ

என் காதலில் மின் சுழற்சியில்
வருவதுபோல் வருகிறாய்
எப்போது நிரந்தரமாக‌
வரப்போகிறாய் ...?

உன் அன்பு உன்னையும்
கடந்து என்மீது பட்டதால்தான்
இந்தவலி

கஸல் ;139
 உயிர் எழுத்தில் காதல் வரி..

அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாய்_இப்போ
ஈ ட்டிபோல் குற்றுகிறாய்..
உ ள்ளம் ஒன்றும்
ஊ மையில்லை பேசாமல் இருக்க‌
எ ல்லாம் செய்ததும் நீ
ஏ ளனம் செய்வதுன் நீ
ஐ ந்து பொறிகளும்தன்
ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌
ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் நான்
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்
அஃதும் வீணானது என் வாழ்வில் ...

வயலில் புற்கலாக‌
வளர்கின்றன‍
நான் பசுவாக‌ நின்று
மேய்கிறேன்

கண்சிமிட்டும் நேரம்
பார்த்துவந்தாய்
நான் புகைப்படமாக‌
உன்னை வைத்திருக்கிறேன்
இதயத்தில் கண்ணில்

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
என் இதயத்தை பார்ப்பேன்

(கஸல்) 140

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...