Tuesday, June 18, 2013

காதல் கவிதைகள்
உணர்ந்து உருகி
படைத்துவிட்டு
அவற்றின்
பொருளானவளைத்
தேடித் தவித்தல்
ஒரு சுகம்!
**********
தனிமையை உணர்த்தும்
மாரிக்கால மாலையில்
பேர் தெரியாத
ஒரு மழலை
சிந்திச் சென்ற
பிரியச் சிரிப்பு
ஒரு சுகம்!
*************
அவசரமாய் அலுவலகம்
செல்லும் காலை நேரம்
சாலையோரம்
பேருந்திற்காக காத்திருக்கும்
இளம்பெண்ணின்
மின்னல் பார்வை
ஒரு சுகம்!
***************
சிறுவயதில்
பொருள் தெரியாமலே
பரிச்சயமான
ஒரு கண்ணதாசன் பாடல்
இன்று அர்த்தம் விளங்குகையில்
ஒரு சுகம்!
**************
எதிர்பாராத தருணங்களில்
மொட்டவிழும்
சின்ன சின்ன சுகங்களின்
சுகந்தங்கள்!


நன்றி முகநூல் 
வெற்றியின் ரகசியம்... தமிழ் சிறு கதை

வெற்றி பெற்ற சிலர்தான் தங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். மெக்டொனால்ட்-இன் (HumBurger)அதிபர் ரேக்‌ராக், எத்தனையோ வேலைகள் பார்த்து, சிரமப்பட்டு மெக்டொனால்டை உருவாக்கி வெற்றி பெற்றார். அவர் பட்டியல் இட்ட தன் வெற்றி ரகசியங்கள்!!!

1. தன் இலட்சியங்களைக் கைவிடாமை
2. தொடர் முயற்சி
3. மறதி இன்மை

கென்டகி சிக்கன்(KFC) உரிமையாளர், காலோனல் ஹார்லன் சாண்டர்ஸ் 1009 முறை நிராகரிக்கப்பட்டுத் திரும்பியவர். வெற்றி பெற்ற பிறகு அவர் சொன்ன 
ரகசியங்கள்!!!

1. முயல்வதைக் கை விடாதீர்கள்
2. உங்களை நம்புங்கள்
3. பொறுமையாய் இருங்கள்
4. நம்பிக்கையோடு செயல்படுங்கள்.

பொருளாதார கவிதை 


விலையேற்றம்... விலையேற்றம் 
தலை சுற்றும்... விலையேற்றம் 
தலையை சற்று திரும்பி பார் 
விலையேற்றத்துக்கு நீ தான் காரணம் ..? 

உன் வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார்...!! 
உணவு சாலையில் கொட்டப்படும் சோற்றை பார்..!! 
திருமண வீட்டில் கொட்டப்படும் சோற்றை பார்..!!

சோற்றையே வீணாக்கும் உன் காலாச்சாரம் 
நீ கொண்டு வந்தாதால் விலையேற்றம் 
இந்த கலாச்சாரத்தை மாற்றாத வரை

விலையேற்றத்தை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது..! 
எல்லாவற்றையும் நுகரும் உலகமயம் 
உன்னையும் நுகர்ந்துகொண்டிருக்கிறது 
வீண்விரையத்தை குறை விலை குறையும்
உன் உடல் ஊனத்தை 
நான் கண்டு கொள்ளவில்லை 
உனக்கு உதவியாக இருப்பேன் .
என்று தான் 
உன்னை காதலித்தேன்
ஏன் அன்பே 
உலகத்தை விட்டு பிரிந்தாய் .
இப்போ 
என் உடலும் உளமும் ஊனமாகி விட்டது 
நானும் வருகிறேன்
உன்னிடத்துக்கு....!!!

கூலிக்கும் காதல் வரும்

கூலி வேலை செய்தேன்
உன் வீட்டில் 
யார் கண்டது நீ 
கண்ணில் படுவாய் -என்று ? 
கூலிக்கும் உன்மீது ஆசை .
உனக்கும் தான் . 
கூடி ஒருநாள்கூட போசமுடியாத -
தினக்கூலினான் . 
வீட்டுவேலை முடிந்ததும் -
முடிந்தது என் காதல் 
கண்ணே முடியவில்லை 
உன் நினைவுகளை மறக்க 
முடியவில்லை யாருக்கும் சொல்ல . 
கூலிக்கு தேவையா? 
இந்தக்காதல் என்பார்கள் . 
கூலிக்கும் இதயம் இருக்கு 
என்று ஏன் புரிவதில்லை 
இந்த உலகத்துக்கு ....
கூலிக்கும் காதல் வரும் -என்று 
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் போதும் ....
8. தொண்டர் 1 : “தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?”

தொண்டர் 2 : ” சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
‘எந்த வட்டத்தின் சார்பில போடுறே’ன்னு கேட்கிறாரு”
==========================================

9. “வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?”

“ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க”

“ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்”

“ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்”

“அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க”
==============================================

10. “இந்த ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?”

“பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னனு கேட்பார்”
===============================================

11. “டாக்டர், நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை”

“அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?”

“காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க டாக்டர்!”
===============================================

12. தொண்டர் 1: “தேர்தல்ல தோல்வி அடையாமல் இருக்க
என்ன வழி?”

தொண்டர் 2: “போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!”
==============================================

13. “சுவரில் எழுதாதே’ன்னு இருந்தது. நான் போயி…”

“என்ன செய்தே?”

” ‘சரி எழுதலை’ன்னு எழுதிட்டு வந்திட்டேன்”

=============================================

14. ஆசிரியை : “ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா
பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?”

மாணவன்: “ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்
விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்”
=============================================

15. “ஏனப்பா கால் கை நல்லாத்தானே இருக்கு, இப்படி உட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா?”

” ‘உடம்பை ரொம்ப அலட்டக்கூடாது’னு டாக்டர் சொல்லிட்டார் சார்”
=============================================

16. “இந்த விவாக மேடையில் மணமக்களையே காணோமே?”

“இது விவாக மேடை இல்லை தலைவரே; ‘விவாத மேடை’

நன்றி ;முழுமுதலோன்
6. ஒருவர்: “தாமஸ் ஆல்வா எடிசன் பல புதிய
கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்காமலிருந்தால்
என்னவாயிருக்கும்?”

மற்றவர்: “வேற ஒருத்தர் கண்டுபிடிச்சிருப்பார்”
==========================================

7. நீதிபதி : ” அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன்
திருடினாய்?”

திருடன்: “என்னோட சாவி எதுவுமே அந்தப்
பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டை
உடைக்க வேண்டியதாப் போச்சிங்க”
வாங்க சிரிக்கலாம்…


1. “உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?”

“எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!”
==========================================

2. “அந்தக் கட்சிக் கூட்டத்தில எல்லோரும் சேர்ந்து
அழறாங்களே , ஏன்?”

“அங்கே ‘துயர் மட்டக் குழு கூட்டம்’ நடக்குதாம்”
==========================================

3. “இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்”

“அவ்வளவு பிசி ஒர்க்கா?”

“இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை”
=========================================

4. “தொழில் படுத்திடுச்சின்னீ ங்களே , என்ன தொழில்?”

“பாய் வியாபாரம்!”
=========================================

5. டாக்டர்: “நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்”

நோயாளி: “டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்”

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...