Monday, June 24, 2013

அன்பே! 
பிரிவென்ற வலைக்குள் 
நாம் சிக்கிக்கொண்ட போதும் 
நினைக்க நினைக்க இனிக்கும் 
உன் நினைவுகளில் தான் 
நான் இன்னமும் உயிர் வாழ்கிறேன்...! 

கடல் ஆவியாகி 
மலை இடிந்து விழுந்து 
பாலைவனம் பற்றி 
எரிந்து போனாலும் 
அழியாது காதல் ஒன்றுதான் ..!! 
அதிலும் நிலையானது நம் .. 
நினைவுகள் தான் ...!!!


மலருக்கும் ஆசை 
மண்ணில் விழாமல் இருக்க...! 

நிலவுக்கும் ஆசை ... 
அமாவாசையில் மறையாமல் 
இருக்க .. 

எனக்கும் ஆசை 
நீ என்னை மறவாமல் இருக்க...!

_________
காற்றும் இசை ஆகும்
நீ அதை சுவாசித்தால்...
வார்த்தைகளும் கவிதை ஆகும்
நீ அதை வாசித்தால்...
இந்த உலகமே உனதாகும்
நீ உன்னை நேசித்தால்...
முடிந்தால் என்னை
காதலித்துப்பார் ....
முடியாது என்றால் ...
மீண்டும் முயற்சித்துப்பார் ....!!!

என்பார்வை தந்து .. 
இதயத்தில் பூவாய் மலர்ந்து 
உன் கொஞ்சும் தமிழ் 
பேச்சினில் எனை மயக்கி .. 
என்னை பித்தனாக்கியவளே ... 
உனக்காக கவிதை 
படைக்கிறேன். 

உன் ஓரப்பார்வையால் 
உள்ளம் கிளர்ந்து 
உடல் சிலிர்த்து.... 
உன் வசமாகிறேன்... 
நித்தமும் தேவி தரிசனம் .. 
பக்கனுக்கு கிடைக்க ... 
காதல் தேவதையே ... 
நில்லாத வரம் தா ...!!!

கண்ணுக்கு இமை அழகு 
விண்ணுக்கு இறை அழகு 
பல்லுக்கு வெண்மை அழகு 
சொல்லுக்கு உண்மை அழகு 
பொருளுக்கு மதிப்பு அழகு 
புலிக்கு வீரம் அழகு 
உனக்கு நானே அழகு 
எனக்கு நீயே அழகு

நான் 
சிறு சண்டைக்கு உன்னை.. 
வேண்டுமென்றே இழுத்து.... 
பேசுகின்ற பொழுதெல்லாம்.... 
கொண்டுவிடுவேன் என்று... 
அடிக்கடி சொல்கின்றாயே...!!! 

காதலியால் கொல்லப்படுவது .. 
எத்துணை சந்தோசம் எனக்கு .. 

அன்பே.... 
நீ மட்டும் என்னை 
கொல்வாயானால் நான் 
நான் எத்தனைமுறையும் 
இறக்க தயார் ...!!! 

காதலில் இப்படி பேசுவது .. 
ஒன்றும் புதிரில்லை ...!!!
திருக்குறள் சென்ரியூ -50
அறத்துப்பால் 
இல் வாழ்க்கை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும் 

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...50
****************************** 

சிறந்த இல்தலைவன்
போற்றப்படுவான் 
+தேவர்ற்கும் மேல் + 

திருக்குறள் சென்ரியூ -49
அறத்துப்பால் 
இல் வாழ்க்கை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
அறன்எனப் பட்டதே இல் வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று 
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...49
****************************** 

இருவகை அறம்
சிறப்பு இல்லறம் 
+பிறர் பழி கேளாமை +

திருக்குறள் சென்ரியூ -48
அறத்துப்பால் 
இல் வாழ்க்கை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை 
நோற்பாரின் நோன்மை உடைத்து 
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...48
****************************** 

அறவாழ்க்கைக்கு பிறர் அழைப்பு 
தன் வாழ்க்கை அறவாழ்க்கை 
+தேவர்களில் மேலானவன் +

திருக்குறள் சென்ரியூ -47
அறத்துப்பால் 
இல் வாழ்க்கை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
முயல்வாருள் எல்லாம் தலை 
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...47
****************************** 

முறையான இல்லற தலைவன் 
முறையற்று வாழ்பவனுக்கு 
+சீர் தலைவன் +


சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
+நிலத்துக்கு முத்தம் +

******************
காதுகளை கௌவும்
காற்றின் ஆவிகள் 
+இசை+

*********************
சிந்தனை கதவை
திறக்கும் சாவி
+அறிவு +

********************
இருட்டு குடிசை 
விரட்டும்பேய் 
+ஒளி +

*********************

உயிரின் கதவை
இறுக்கும் பூட்டு.
+சாவு +
***************
வீணாய்ப்போகிறது மழை.
குறுக்கும் நெடுக்குமாய்
+ வெள்ளம் +
*****************--------

இந்த சுகம் போதும் அன்பே 


அதிகாலை வேளை....
அகிலமே அமைதியாய் ...
இரு விழியை அகன்றேன் ...
வான் குருவிகள் வானிசை ..
சில்லென்ற காற்று உடல் பட ...
எனைமறந்து உன்னை நினைத்தேன் ...

(இந்த சுகம் போதும் அன்பே ...)

தண்ணிரை மோர்ந்தேன் ....
பன்னீரை போல் உன் மென்மை..
ஒருதுளி உடலில் பட ...
இணைந்துவிட்டேன் உன் ...
நினைவில் ......

(இந்த சுகம் போதும் அன்பே ...)

ஒற்றையடி பாதையிலே 
ஓற்றைசடை முடி தேடி ...
பற்றைக்குள் பதுங்கி இருக்க ...
பற்றை செடிகள் ஆடியது ...
காற்று அசைக்க வில்லை ..
என் இதய துடிப்பு அசைத்தத்தடி ...!!

(இந்த சுகம் போதும் அன்பே ...)

கண் மூடினால் கனவாய் ..
கண் திறந்தால் நினையாய் ...
கனவில் வந்து நினைவை இழப்பதா ...?
நினைவில் வந்து கனவை இழப்பதா ...?
வந்தது உன் குறுஞ்செய்தி ...
நான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..?
கனவில் வர நான் தயார் என்று ...!!!

(இந்த சுகம் போதும் அன்பே ...)

துன்பத்தில் சுகம் ..
தருகிறது ...!!!உன் கண் புருவத்தின் ..
ஒவ்வொரு முடியும் ..
எனக்கு ஒவ்வொரு ..
கவிதைகள் ....

உன் கண் இமைகள் ..
ஒவ்வொன்றும்
கறுப்பு வானவில் ...

கண்ணீரால் -நீ
தரும் துன்பம் ..
கூட இன்பத்தை ..
தராவிட்டாலும் ..
துன்பத்தில் சுகம் ..
தருகிறது ...!!!

கஸல் 170

அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!


இறைவா என் காதலியை ..
மன்னித்துவிடு ...
அவள் எனக்கு ;;;
வலிதரவேண்டும்
என்று தருவதில்லை ...

சிறுவயதில் கண்ட கனவில்
முகம் தெரியாமல் ..
முழித்ததுபோல் ...
உன் நினைவு..
 இடைஇடையே ...
வந்து போகிறது ....

போக்கு வரத்து நெரிசல்
எனக்கு பிடிக்கும் ..
அதில் தான் உன்னை ..
அதிக நேரம் பார்க்கிறேன் ...!!!

கஸல் ;169

கல்லறைக்கே சென்றுவிடுகிறேன் ...


கண்ணீர் என்னும் நீரால் ...
காதல் என்னும் மரம் ..
வளர்கிறது ....
உதிரும் இலைகள் கூட ..
உன் பெயரையே உச்சரிக்கிறது .....

உன்னை நினைக்கும் போது 
வரும் கண்ணீரை விட 
உன்னை மறக்கும் போது வரும் 
கண்ணீர் குறைவுதான் ...

உன் கண்கள் என்னை 
கடக்கும் போது -நான் 
கல்லறைக்கே சென்றுவிடுகிறேன் ...

கஸல் ;168

எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)

சோகம் தணிக்கும் தோழன் தோள்கள் ...
கண்ணீர் துடைக்கும் தோழியின் விரல்கள் ...

நானாக கோபம் தணிக்கும் தருணம் ...
தனியாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...
வியப்பாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...

வியப்பை ஏற்படுத்தும் வெற்றிகள் ....
சற்றும் எதிர் பாராத இழப்புக்கள் ....
விட்டுக்கொடுத்த தோல்விகள் ....
விடை தெரிந்தும் எழுதாத வினாக்கள் ...

(தொடரும் ....)

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...