Translate மொழி பெயர்ப்பு

Sunday, July 7, 2013

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...60

திருக்குறள் சென்ரியூ -60
அறத்துப்பால் 
வாழ்க்கை துணைநலம் 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
மங்கலம் என்ப மனைமாட்சி மாற்றுஅதன் 
நன்கலம் நன்மக்கட் பேறு 

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...60
****************************** 
நல்ல இல்லறமே மங்களம் 
நற் மக்களே அணிகலன் 
+மூத்தோர் வாக்கு +

தகவளுடன் காதல்கவிதை

கண்ணே ...
ஜேர்மனியின் பெர்லின் சுவர் ...
இடிக்கப்படு பலவருடமாகிறது ...
இரு வேறுபட்ட பொருளாதார ...
முறைமைகள் கூட ஒன்றாயின ...
கண்ணே நீ ...
எனக்கு விதிக்கும் காதல் ..
சுவர் ஏனடி நீண்டுகொண்டே ...
செல்லுகிறது ....
காதலுக்கு கண்டிப்பு தேவைதான் ...
அதுவே துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...!!!

கருவறை

மாதக்கணக்கில் ...
கருவறை என்னும் ...
இருட்டறையில் ...
உன்னை சுமர்ந்தேன் ...
எனக்கு உன் வீட்டில் ...
ஒரு இருட்டறைகூடவா ..
இல்லை என்னை இருத்த ..
அநாதை இல்லத்தில் ..
வைத்துவிட்டாயே ...!!!

என்ன செய்ய மகனே ...?

என்ன செய்ய மகனே ...?
கருவறை என்றால் ..
இருட்டறைதான் ...!!!
அதற்காக என்னை ..
இப்போ தனியே ...
இருட்டறையில் ...
வைத்துவிட்டு வெளியே ..
செல்கிறாயா ...?
பறவாயில்லை மகனே ...
அநாதை ஆச்சிரமத்தில் ..
இல்லாமல் உன் வீட்டில் தானே ..
இருக்கிறேன் ....!!!

அன்னை ...

வீட்டு வேலை செய்து...
படிக்க வைத்த மகன்.....
வேலை கிடைத்ததும்.....
பணக்காரப் பெண்ணை
மணந்து கொண்டான்....
இப்போது அவர்கள்...
பத்துப்பாத்திரம் துலக்கி ..
வாழுகிறாள் அன்னை ...
இப்போ சொந்தவீட்டில் ...!!!

கே இனியவன் அம்மா கவிதைகள் (02)

சுகமான சுமையை
இடம் மாற்றினாள்
தெய்வம் தாய்
பிரசவத்திற்குப் பின்
வயிற்றில் இருந்த சுகத்தை 
இதயத்திற்கு....!

கே இனியவன் அம்மா கவிதைகள்

தாயே ...
என்னை ஈறேடுத்த ...
கனப்பொழுதுவரை....
நான் தந்த வலிகள் ...
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ....
அதற்காக தானா தாயே ...
சிறு முள்ளு குற்றினாலும் ...
அம்மா என்று காத்த வைக்கிறாய் ...
என் ஆயுள் முழுவதும் ....!!!

சேர்ந்து வாழ்கிறேன் ...!!!


கனவு வந்து போன பின்பும் 
காட்சி மனதில் எஞ்சியிருப்பது போல் 
நீ வந்து போனதற்கான தடயங்களின் 
நெஞ்சில் இருப்பதால் நினைவுகளுடன் ..
சேர்ந்து வாழ்கிறேன் ...!!!

அளந்து கொண்டேயிருக்கிறேன்..

காதலின்
ஆழத்தை அளவிட
முடியாது என்கிறார்கள் 
காதல் ஞானிகள் 

அன்று 
விழுந்தவன்..
இன்னும் 
எழவில்லை..

அளந்து 
கொண்டேயிருக்கிறேன்..

நீ தான் என் காதலி ...!!!

தினம் தினம் வரும் பாதையை ...
எதிர்பார்க்கின்றேன்- நீ
வருவாய் -என !!!

தினம் தினம் கடிதம்
அனுப்புகின்றேன் நீ
பதில் கூறுவாய்- என..!!!

தினம் தினம் கவிதை 
எழுதுகிறேன் -நீ 
ரசிப்பாயென....!!!

தினம் தினம் உனக்காக
காத்திருக்கின்றேன்
கைப்பேசியில் -உன் 
குரல் கேட்காதா -என ...!!!

தினம் தினம் -கோயில் 
செல்லுகிறேன் -நீ 
கிடைப்பாயென...!!!

எல்லாவிதத்திலும் ..
ஏமாந்தேன் -ஆனால் 
உறுதியாக இருக்கிறேன் ..
நீ தான் என் காதலி ...!!!