Tuesday, July 9, 2013

உன் மருமகளுக்கு டெலிவரி ஆச்சே, எப்படி
இருக்காங்க?

மாமியார் : பேயும் , ......சேயும்.... நலம்!!!??
**********************************

ஒரு காட்டில் எப்பிடி இரண்டு சிங்கம் இருக்க
முடியாதோ., அதே போல…

தலைவரே போதும்…’சிங்கம் டூ’ வந்தாச்சு..!

***********************************
என்ன இது, குற்றப்பத்திரிகையோட, சாம்பார்தூள்
பாக்கெட்டும் சேர்த்து கொடுத்துட்டுப் போறார்?

ஏற்கனவே இரண்டு முறை குற்றப்பத்திரிகை

அனுப்பியும்…நீங்க வாங்கிக்கவே இல்லையாமே…!

***********************************
தலைவரே..உழைச்சு சம்பாதிச்ச காசுதான்
நிலைக்குமாம்..!

அதுக்கென்னய்யா இப்போ…என்கிட்டே இருக்கிறது

பூராவும் மக்கள் உழைச்சு சம்பாதிச்சதுதான்..!
************************************

மகளிரணி தலைவியோட ரவுசு அதிகமாயிடுச்சு..!

எப்படி சொல்றீங்க தலைவரே?

அவங்க எழுதின சமையல் குறிப்பை அரசிதழில்

வெளியிடணும்னு அடம் பிடிக்கிறாங்களே..!
*******************************************

உங்க மாமாவுக்கு விபத்துல அடியாமே. எந்த இடத்துல?”
-
“”தண்டுவடத்துல”
-
“தமிழ் நாட்டுல அப்படி ஒரு ஊர் இருக்கா?”

**************************************

சோமன்; எதுக்குங்க பைய்யன இப்படித்திட்ற்றீங்க?

ராமன்: ஃபேஸ்புக்ல அக்கௌண்ட் ஓபன் பண்ணுடான்னா 'அக்கௌன்ட் ஓபன் பண்ணா எத்தினை % இன்டரஸ்ட் கிடைக்கும்னு கேக்கரான்!!!

************************************
நாய் ஜாக்கிரதை’ போர்டு மாட்டியிருக்கேன்னு பயந்து
வாசல்லேயே நிக்குறேன்”

“”தைரியமா உள்ளே வாங்க, நாயை விற்றுவிட்டேன்”

“”அப்புறம் ஏன் சார் இந்த போர்டை இன்னும் வச்சிருக்கீங்க?”

“”போர்டை விற்க முடியலை, அதான்”
*****************************
மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்”

கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”

மனைவி : “ அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க”

நன்றி முழுமுதலோன்

தேடித்தேடி அலைகின்றேன்

உன்னோடு நடந்து திரிந்த பாதைகளில்
நான் மட்டும் தனியாக போகிறேன்..
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு.....!!!

வளையல் சத்தம் கேட்கிறது
கொலுசின் ஓசை  கேட்கிறது
சிரிப்பொலிகள்    கேட்கிறது
எல்லாம் பிரம்மையில் ....!!!

தேடித்தேடி
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிட்டியது தேவையில்லை

உன் வாழ்க்கையெனும்
மனச்சோலையில்
வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன்
உயிரின் வலிஅறியவில்லை
உறங்குகின்றேன் காதலியே
உன் நினைவோடு

தோற்கிறார்கள் ...!!!

காதல்
அது
இரு உள்ளங்களின்
ஏக்கம்
ஏக்கத்தை கண்டவர்கள்
வெல்லுகிறார்கள் ..
ஏக்கத்தை ...
திண்டவர்கள் ..
தோற்கிறார்கள் ...!!!

எதிரும் புதிரும்

காதல் கொண்ட..
நானும்....
கவிதை எழுதினேன்.
இளைஞர்களே...
காதலில் இளமையை
இழக்காதீர்கள் என்று.....!!!
*
*
*
*
*
காதலிலேது...???
 இளமை புதுமை....??
காதலே ஒரு இளமை....!!!
அதனால் வரும் கவித்தன்மை....!!!

இதுதான் காதல் என்பதா..?

உதடுகள் புன்னகைக்க...
உணர்வுகள் துடிதுடிக்க...
வார்த்தைகள் தத்தளிக்க...
இதயம் மட்டும் 
மெளனிக்கிறது...
இதுதான் காதல் என்பதா ..

ஏனடி முற்று புள்ளி ..

பாட புத்தகத்தின் கதைக்கு ..
முற்றுப்புள்ளி அவசியம் ,,
நம் காதல் கடிதத்துக்கு ..
ஏனடி முற்று புள்ளி ..
வைத்தாய்...?

ஏனடி முற்று புள்ளி ..

பாட புத்தகத்தின் கதைக்கு ..
முற்றுப்புள்ளி அவசியம் ,,
நம் காதல் கடிதத்துக்கு ..
ஏனடி முற்று புள்ளி ..
வைத்தாய்...?

haikoo

நிழல் வேண்டும்
காற்று வேண்டும்
+மரம் வெட்டுவோம் +

Haikoo

அன்போடு கிள்ளினாய் 
நீ மகிந்தாய்-நான் இறந்தேன் 
ரோஜா மலர் +

haikoo

காதலின் சின்னம் 
கல்லறையாக இருக்கிறது 
தாஜ்மஹால் 

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...