Friday, July 12, 2013

தமிழ் சொல்லும் கவிதை...

கவிதை சொல்லும் உன்  கண்களே
என் கவிதைக்கு கருவாகின்றன...!

தமிழ் சொல்லும் கவிதை...
தாய்மொழி சொல்லும் கவிதை...
தமிழ் மொழி அறிவு அத்தனையும் ..
உன் கண்முன்னால் ...
தோற்கின்றன...!!!
உன் விழி சொல்லும் கவிதையில்...!!!

ஐயோ....!!! இனி
நீ கண்னை மூடினால்
நின்று விடுமே என் கவிதையும்...!
விழித்திரு...
கவிதை என் கவிதையை ..
வளர்த்திடு ...!!!

என் விழிகளை திருத்தித்தா ...?

என் விழிகளை  திருத்தித்தா ...
நீ பார்த்த பார்வையில் ...
குருடாகி விட்டேன் ..!!!

என் இதயத்தோடு..
தொடர்பில் இருந்து...
என்றும் உனைக்காண...
ஏங்கித்துடிக்கின்றது....

உன் இதயத்தை ...
எனக்கு தா ..!!!
இல்லையேல் ..
என் விழிகளை  திருத்தித்தா ...?

உன் தவிர்ப்பு ...

அழகே உனை....
 ஆராதிக்க விரும்புகிறேன் ..
முடியுமானால் இன்று ....
என்கனவில் வந்துவிடு.....!!!
கனவில் உன் செயலை ..
இனிமையாய் ..
தந்துவிடு ...!!!
எப்போதுதான் ..
உன் தவிர்ப்பு ...
என்னவென்று தெரியும் ...!!!

காதலிக்க வேண்டுமாம் ...

நிலவு உன்னை ..
காதலிக்க வேண்டுமாம் ....
கைநீட்டுகிறது ..
தயவு செய்து ..
என்னை ஏமாற்றி விடாதே ..!!!
நிச்சயம் சொல்வேன்..
நிலவு உன்னை விடாது ...!!!

வானும் மண்ணும் ..

நீ என்னோடு ..
நடந்து திரிந்த பாதையை ..
தேடிப்பார்க்கிறேன் ..
எங்கே சென்றாய் என்று ...?

பட்டாம் பூச்சியை ...
பிடிக்க மீன் வலை வீசுகிறாய் ..
உன் விருப்பத்தை நிறைவேற்ற ..
பட்டாம் பூச்சி ஆனேன் ....

வானும் மண்ணும் ..
இணைந்திருப்பது போல் ..
நம் காதல் இருக்கிறது ...!!!

கஸல் 211

கடல் அலை தன் காதலியை ..

கடல் அலை தன் காதலியை ..
கரையில் வந்து தேடுவது போல் ..
நான் என் இதயத்தில் ...
உன்னை தேடுகிறேன் ...

நீ வரும் போது ..
பெரும் கடல் அலை ...
வருவதாகவே ....
நினைக்கிறேன் ...

உனக்கு தெரியுமா ..?
நீ கண் எறிந்த நாள் தான் ..
என் கலண்டர் நாள் ..
வருடப்பிறப்பு ...!!!

கஸல் 212

நம்முள் சமரசம்...

நம்முள் சமரசம்...
இல்லையெனில் ...
சோவியத் யூனியன் ..
சிதறியதுபோல் ..
சிதறிவிடுவோம்...!!!

கண்ணீராலும் ..
புன்னகையாலும் ...
சமரசம் செய்வது ..
காதல் மட்டும் தான் ...!!!

நான் நெய் 
நீ திரி ...
இருவரும் தீர்ந்தே ..
தீருவோம் ...!!!

கசல் 213

பூக்கள் வெறுக்கும் ..

பூக்கள் வெறுக்கும் ..
பட்டாம் பூச்சிபோல் ...
நான் ஆகிவிட்டேன் ..

நான் கனவில் காண ..
உன் நினைவுகள் 
என்னிடம் இல்லை ..!!!

நான் இடையிடையே ..
பேசுகிறேன் ..
நீ இடையிடையே ..
அழுகிறாய் ...!!!

காதல் தான் ஓசை ..!!!

நம் காதல் ..
குறுங்கதையில்லை ...
தொடர் கதை ...
நிச்சயம் முற்றுப்பெறாது ...!!!

நீ
சொல்லக்கூடியதை சொல் ..
நான்
சொல்லமுடியாததை ....
சொல்லுகிறேன்

நீதான் என் உச்சரிப்பு ...
நான் தான் வாக்கியம் ..
காதல் தான் ஓசை ..!!!

கஸல் 210

பாவியாகிவிட்டேனா ..?

நீ யாரோ ..?
நான் யாரோ ..?
இணைத்தது ..
காதலா ..?
காலமா ..?

நீ கனவில் கூட
வரமுடியாத ..
பாவியாகிவிட்டேனா ..?

நம் காதல் ..
பகலில் நட்சத்திரம் ..
இரவில் வானவில் ..
அருமையான -நம்
காதல் இல்லையா ..?

எப்படி பிரிந்திருப்பது ...!!!

நான் எவ்ளவோ..
முயற்சிக்கிறேன் ..
கவிதை எழுதாமல் ..
விடுவோம் என்று ...
முடியாது முடியாது ...
நான் விட்டாலும் ...
கவிதை விடாது ..!!!

கவிதையை ரசிக்கும் நீ
காதலையும் ரசிக்க பழகு .

காதலில் நான்
இடது இதய அறை-நீ
வலது இதய அறை
எப்படி பிரிந்திருப்பது ...!!!

கஸல் -208

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...