Saturday, July 20, 2013

தேன் எங்கே ....?

நெருப்பு நீ ..
ஏன் சுடமாட்டேன் ..
என்கிறாய் ...
பனிபோல் சிலுக்கிறாய் ...!!!

நான் உன்னை ..
நினைத்து சிரித்த
நாட்களைவிட ...
சிலுத்த நாட்களே ..
அதிகம் .....!!!

தேன் கூட்டில் ...
தேனி நான்
தேன் கூடு நீ
தேன் எங்கே ....?

கஸல் ;239

இருளில் தெரிகிறாய் ...!!!

நீ என்
வித்தியாசமான ...
நிழல்  வெளிச்சத்தில் ..
மறைகிறாய் ...
இருளில் தெரிகிறாய் ...!!!

நீ ஒரு
வித்தியாசமான ...
இசை -தூக்கத்தில்
துள்ளிசை ...!!
விழிப்பில் ...
மௌன  ராகம் ...!!!

உயரத்தில் பறக்கும் ..
பட்டம் நீ ...
நூல் நான் காற்றுதான் இல்லை ...!!!

கஸல் ;238

அதுதானே நீ ..

என்னை பற்றி கவிதை ..
எழுத்து எழுத்து என்கிறாய் ...
க 
வி 
தா 
என்கிறாய் ...
அதுதானே நீ ..
கண்ணே....!!!

கனவில் வந்து என்னை .. கொன்றுவிடு ....!!!

நேற்று பதில்.... 
சொல்வாய் என்று ....
எதிர்பார்த்தேன் ....
சொல்லவில்லை ...
இன்று பதில் சொல்வாய் ..
என்று எதிர்பார்த்தேன் ...
இதுவரையும் பதில் ....
சொல்லவில்லை ....!!!
தயவு செய்து ...
இப்படி கொல்லாதே ...
நான் தூங்கும் போது ...
கனவில் வந்து என்னை ..
கொன்றுவிடு ....!!!

இதயம் ஒன்றுதான் ...

இதயம் ஒன்றுதான் ...
இதய அறை இரண்டு ...
இதனால் தான் 
உன்னை தவிர ...
வேறு யாரையும் நினைக்காத ...
ஒரு இதயமும் ...
நினைவில் ஒரு கதையும் ..
கனவில் ஒரு கதைக்கும் 
இரண்டு இதய அறையும் ...
இருக்கிறதோ என்று ...
யோசிப்பேன் ....!!!

அடம்பிடிக்கிறது .. இதயம் ....!!!

வேண்டாம் வேண்டாம் ...
விட்டுவிடு ....
தயவு செய்து அவளை ...
மறந்துவிடு ...
கெஞ்சிக்கேட்கிறேன்...
இதயத்தை ...
கோயில் திருவிழாவில் ..
பலூன் வாங்கிதா ...!!!
என்று அடம்பிடிக்கும் ...
குழந்தைபோல் ..
உன்னைத்தான் வேண்டும் ..
என்று அடம்பிடிக்கிறது ..
இதயம் ....!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...