Wednesday, July 24, 2013

எல்லாம் நீயாக தெரிகிறது

நீ
காதல் தேன் ..
அதிகம் அருந்திவிட்டேன்
எல்லாம் நீயாக தெரிகிறது

என்றும் உன் நினைவு
தான் என் மூச்சு

காதல் தேரை
நான் இழுக்கிறேன்
சில்லுக்கு நீ கட்டை
போட்டு நிறுத்துகிறாய் ...!!!

கஸல் 255

இடையில் நீ யாரடி ...?

நான் ஆறடி
இறந்தாலும் ஆறடி
இடையில் நீ யாரடி ...?

நிலாவை பார்க்கும்
போது என் நிலா
உன் நினைவுதான்
கொல்லுது ....!!!

காதல் சொல்லுகிறாய்
கண்பார்க்கிறது ..
இதயத்தில் காதல் இல்லை

கஸல் 254

காதல் எங்கே நிற்கிறது ...?

நான் காதல் பறவையாக
மாறிவிட்டேன்
வெகு தூரம் -உன்னை
மறக்க பறக்க போகிறேன்....!!!

காதலில் இருந்துதான் ...
அமாவாசை ..
பௌணமி
வந்ததுபோல் ...?

நான் உன்னை ..
பார்க்கிறேன் ...
நீ என்னை பார்க்கிறாய் ..
 காதல் எங்கே நிற்கிறது ...?

கஸல் 253

எழுதும் கவிதை -நீ

காதல் நினைவில் - கற்பனை
கனவில்- மாயை
உள்ளத்தில் - உண்மை

நான் காதலில் மரபு
கவிதை -நீ
மூன்று வரி ஹைக்கூ
இரண்டும் சுகம் ..!!!

எழுதும் கவிதை -நீ
எழுதும் பேனா நான்
பேனாவில் மை
தீர்ந்துவிட்டது ....!!!

கஸல் 252

தளம்பும் காதலுக்கு

உன்னிடம் நான் 
இழந்தை முள்ளில் 
சிக்கியதுபோல் 
தவிக்கிறேன் ....!!!

நான் உறங்கும் 
தருணத்தில் தான் 
காதல் மொழி பேசுகிறாய் 

கப்பலில் துடுப்பு இல்லாத 
போது தளம்புவது போல் 
தளம்பும் காதலுக்கு 
துடுப்பாக இருந்தது நீ 

கஸல் 251

ஒன்று உன் மூச்சு

மூக்கு துவாரத்தை ..
இறைவன் ஏன் இரண்டாக ..
படைத்தான் தெரியுமா ...?
ஒன்று உன் மூச்சு 
மற்றையது என் மூச்சு ....!!!

காதல் தொடர்கிறது ...

அன்று ஒருநாள் அவள் ...
என்னை கண்டு சிரித்தாள் ..
பதிலுக்கு நானும் சிரித்தேன் ...
இன்றுவரை நான் ...
இன்னும் சிரிக்கவில்லை ...
காதல் தொடர்கிறது ...
வலிகளுடன் ....!!!

கே இனியவன் ஹைக்கூக்கள்

இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது 
முதுமை


தன்னை அழித்தாலும் 
இறுதிவரை மூச்சுதரும் 

- மரம்- 

நவரசத்தை காட்டும் 
சலனமுள்ள சடப்பொருள் 

-தொலைக்காட்சிபெட்டி - 


கருவில் கலையாமல் 
தெருவில் கலையும் 

-குழந்தை தொழில் - 


தான் நடனமாடி 
பிறரை வாழவைக்கும் 

-பேனா -

உன் அழகில் சுற்றுவேன் 
எனக்கும் மகிமை 
+வண்டு +

வென்றாலும் வலி 
தோற்றாலும் வலி 
காதல்

கே இனியவன் ஹைக்கூக்கள்

இல்லாவிட்டாலும் பிரச்சனை 
இருந்தாலும் பிரச்சனை 
பணம்
*******************************
உடல் சுத்தம் 
உள்ளச்சுத்தம்
தியானம் 
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும் 
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி 
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை 
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது 
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான் 
போராளிக்கு இல்லை

கே இனியவன் ஹைக்கூக்கள்

காதலின் சின்னம் 
கல்லறையாக இருக்கிறது 
தாஜ்மஹால் 

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...