Sunday, July 28, 2013

SMS கவிதை

என் இளமைப்பருவத்தை ... 
அறிய வைத்தது உன் ... 
கடைக்கண் பார்வைதான் ...


பிராணவாயு நீ .....!!!

நீ 
அமாவாசை 
நிலவாக நான் வரும் போது 
காணாமல் போகிறாய் ...!!!

உன்னை நான் 
விரும்ப முடியாது 
உன்னிடம் இதயமில்லை 

அவசர சிகிச்சையில் 
நாம் காதல் அனுமதிப்பு 
பிராணவாயு நீ .....!!!

கஸல் ;270

அதுதான் தலை குனிந்து நிற்கிறாய் ....!!!

நீ 
எழுத்தின் மீது 
இருக்குக் ஒற்றை விசிறி 
அதுதான் தலை குனிந்து 
நிற்கிறாய் ....!!!

நான் 
வணங்கும் தெய்வம் தாய் 
மதிக்கும் தெய்வம் நீ 

தண்ணீர் தொட்டியில் 
நீர் நிரப்புபவன் நான் 
தொட்டியுள்ளது 
கிணற்றில் நீ(ர்) வற்றிவிட்டது ..!!!

கஸல் 269

haikoo

பெற்றோருக்கு ஊன்றும் தடி 
குடும்பத்துக்கு ஆலம் விழுது 
குடும்ப தலைவன்

.என் கல்லூரி ..

எனக்குள்ளே தான் இருக்கிறது ..
.என் கல்லூரி ..
நான் தான் தலைமை ஆசிரியர் ...
இதுவரை பெற்ற அவமானங்கள்தான் ..
பாடத்திட்டம் ...!!!
மன்னிப்புதான் சிறந்த ஆசான் ...
விட்டு கொடுப்புதான் என் நேரசூசிகை ...
விட்டதவறுகள் தான் எனக்கு தண்டனை ...
ஒவ்வொரு வாழ்க்கைபதிவும் என் பரீட்சைபுள்ளி ....!!!

ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ

அருள்வேல் ....என்னம்மா ...?மகனே இன்று கோயிலுக்கு போகணும் .
நீ வேலையால் வந்தவுடன் போவமா மகன் ?
நிச்சயமா.. அம்மா.... அப்பாவையும் ஆயத்தமாக இருக்க சொல்லுங்கோ 
வேலையால் வந்தவுடன் ஒரு ஆட்டோ பிடித்து 
போவம் அம்மா ....!!!

என்னங்க ..நம்ம மூத்த மகனின் பிறந்த நாள் அடுத்த கிழமை வருகிறது
நம்ம கோயிலில் ஒரு பூசைக்கு பதியவேணும் 
மாலை கோயிலுக்கு எல்லோரும் போகும் போது அதையும் பதிந்திட்டு வருவமப்பா -அன்னம் -மனைவியின் பரிந்துரை அது .

நல்லது அன்னம் நிச்சயமா மாலை கோயிலுக்கு போய் அத்தனை வேலையையும் செய்வோம் .
.அருள்வேல் நடுத்தர வருமான குடும்பம் தான் ஆனால் 
அழகான அன்பான குடும்பத்தை நினைத்து சந்தோஷ பட்டபடி வேலைக்கு புறப்பட்டார் -அருள் வேல் -


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்ஆற்றின் நின்ற துணை 

குறள் ;41

ஹைகூ 

பெற்றோருக்கு ஊன்றும் தடி 
குடும்பத்துக்கு ஆலம் விழுது 
குடும்ப தலைவன்

கடைக்கண் பார்வைதான் ...

என் இளமைப்பருவத்தை ...
அறிய வைத்தது உன் ...

நீ    பார்த்த போதுதான் ...
நான் பக்குவமடைந்தேன் ...!!!

நாம் காதல் மலிந்துவிட்டது ...!!!

நீ 
என் கைபேசி 
நிறுத்தவும் முடியவில்லை 
தொடரவும் முடியவில்லை 

நீ 
என் சூரியன் 
என் சந்திரன் 
இரவு பகலாய் 
உன் நினைவுகள் ...!!!

மலிந்தால் சந்தைக்கு வரும் 
விளைபொருள் போல் 
நாம் காதல் மலிந்துவிட்டது ...!!!

கஸல் ;268

உன் இதயத்தில் நிரந்தரமாக இருப்பேன் ....!!!

நீ 
என்னை தயவு செய்து 
மறந்துவிடு 
அப்போதுதான் -நான் 
உன் இதயத்தில் 
நிரந்தரமாக இருப்பேன் ....!!!

காதலில் வலியும் 
தனிமையும் -காதல் 
பறவையின் சிறகுகள்
தூரமாக பறந்து செல்ல ...!!!

நீ 
என் உயிரின் வலியும் 
வலியின் இன்பமும் 

கஸல் ;267

கல்லறையில் எழுதுகிறாய் ...!!!

என் கண்ணின் 
கருவளையமும் நீ 
கரு விழியும் நீ 
கண்ணீரும் நீ 

நான் நெருப்பின் புகை 
நீ வான் வெளி காற்று 
கலந்தால் ஒன்றுதான் 

நாம் காதலை அகராதியில் 
எழுதுகிறேன் -நீ 
கல்லறையில் எழுதுகிறாய் ...!!!

கஸல் 266

என் உயிரினுள் உறைந்த உயிரடா -நீ

அவன் :

உன்னை
கண்டு பொறாமைபடுகிறேன் ...
உன்னை சுற்றி உறவுகள்
பாசம் காட்டும் அண்ணா ..
குறும்பு செய்யும் தம்பி தங்கை ...
ஊட்டி விட பாட்டி ...
உன்னை கல்லூரிக்கு  கூட்டி செல்ல
அப்பா ...
குளிப்பாட்ட அம்மா ...
கேட்டதை வாங்கி கொடுக்க ...
தாத்தா ...
இத்தனையும் உள்ள நீ
எதற்காக என்னை விரும்புகிறாய் ...?
யாரும் அற்றவன் நான் ...
உன் காதலை தவிர ....!!!

அவள் ;

உன்னை போல் எனக்கு
அழகான சொந்தம் யாருமில்லை
உன்னை இன்றி வேறு
சொந்தங்களை விரும்பியதுமில்லை
என் உயிரினுள் உறைந்த
உயிரடா -நீ
உன் காதலும்
என்  காதலும்
தான் எமக்கு தேவையான உறவு ....!!!

உன் நினைவில் எல்லாம் ஒன்றுதான் ....!!!

அதிகால சூரிய உதயம் ..
உன் அழகான முத்தழகை ..
காட்டுது அன்பே ...!!!

மாலைநேர சூரிய மறைவு ...
உன் மயக்கும் கண்ணழகை ..
காட்டும் அன்பே ...!!!

இரவு நேர நட்சத்திர மின்னல்
உன் பல்லழகின் சிரிப்பை ..
காட்டும் அன்பே ....!!!

பௌர்ணமி அழகு நிலா
உன் அழகான மெய் உடலை
காட்டும் அன்பே ....!!!

எனக்கு இரவும் ஒன்றுதான்
பகலும் ஒன்றுதான்
உன் நினைவில் எல்லாம்
ஒன்றுதான் ....!!!

ஏங்குகிறது

மழைக்காக ஏங்குகிறது
விவசாயம் ....!!!

மின்சாரத்துக்காக ஏங்குகிறது
தொழிற்சாலை ...!!!

பேரூந்தின் வரவுக்காக ஏங்குகிறது
பயணியின் மனம் ....!!!

மகனின் கடிதத்துக்காக ஏங்குகிறது
தாயின் மனம் ....!!!

அப்பாவின் பொம்மைகாக ஏங்குகிறது
குழந்தையின் மனம் ...!!!

காதலுக்காக ஏங்குகிறது
இளவயது மனம் ....!!!

உயிர் கொண்டு எழுதுகிறேன் ..

உயிர் கொண்டு எழுதுகிறேன் ..
உயிர் துடிப்பாய் அமைகிறது கவிதை ..

நான் இன்பமாக இருக்கும் போது ..
நாடி நரம்பை வரிகளாக்கி எழுதுகிறேன்

நான்  துன்ப படும் போது ...
நாள நரம்பை வரிகளாக்கி எழுதுகிறேன்

நிகழ்கால நினைவுகளை ..
இதயத்தின் ஓசைகொண்டு ..
எழுதுகிறேன்

கடந்த கால நொடிகளை ..
நின்ற மூச்சின் துளிகளை
கொண்டு எழுதுகிறேன்

நான் இறக்கும்  வரை
கவிதை எழுதுவேன்
நான் இறந்தபின்னும்
கவிதை எழுதுவான்
என் நண்பன் ...!!!

கவிஞனுக்குத்தான் இறப்பு உண்டு ..!!!
கவிதைக்கு இல்லையே ...!!!

தன் வீட்டு குப்பையை ..

தன் வீட்டு குப்பையை ..
தெருவில் தூக்கி வீசும் ..
துப்பறவாளர்களே..
கவனியுங்கள் ...!!!

குப்பையை
தூக்கியெறியவில்லை
உனக்கும் பிறருக்கும்
நோயை தூக்கி எறிகிறாய் ...

சீராக கழிவை சீர் படுத்த
தெரியாத பகுத்தறிவாளா ...!!!

பன்றிக்காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்
சிக்குன் குனியா
என்று பகுத்தறிவற்ற ..
உயிரினங்களின் பெயர் ..
கொண்டு படுத்தறிவாளா ..
உனக்கு நோய் வருகிறது ...!!!

தன் வீட்டு குப்பையை ..
தெருவில் தூக்கி வீசும் ..
துப்பறவாளர்களே..
கவனியுங்கள் ...!!!


சமுதாய கவிதை 

மனித எண்ணவிருத்தி

எனக்கே வேண்டும் ...
எல்லாம்  வேண்டும் ...
என்ற நினைப்பே -இன்றைய
பொருளாதார சமத்துவமின்மைக்கு ..
காரணம் .....!!!

எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம் தானாக
தோன்றும் ....!!!

வறிய நாடு
செல்வந்த நாடு
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ன கோடுதான்

நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல
மனித எண்ணவிருத்தி தான்
மிக அவசியம் ....

எனக்கும் வேண்டும் -முயற்சி
எல்லோருக்கும் வேண்டும் -தியாகம்

வெற்றி உன் நுனி விரலில் ...!

வாழ்க்கை என்பது ஓட்டம் தான் ....
அதற்காக வெறுமனையே ஓடாதே ...
நாயும் அந்த வேலையை செய்யும் ...
நம்பிக்கையுடன் ஓடு ...!!!
குறிக்கோளுடன் ஓடு ,....!!!
இலக்கோடு ஓடு...!!!
விழுத்தாலும் ஓடு ...!!!

ஓடும் போது திரும்பிப்பார் 
ஓடிய பாதை சரியா ...?
ஓடிய வேகம் சரியா ...?
ஓடிய முறை சரியா ...?

இலக்கை நோக்கி முறையாக 
ஓடு ஓடு ஓடு ...
வெற்றி உன் நுனி விரலில் ...!

உன் உயிருக்கும் ஆபத்து ....!!!

வளைந்து நிற்பது ...
தோல்விக்கும் காரணமல்ல ...
உன் உயிருக்கும் ஆபத்து ....!!!

பயந்தான் உயிராற்றலை கெடுக்கும்
உயிர் கொல்லி ...!!!

பயந்தால்
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!

பயம் தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் காலன் ....!!!

நிமிர்ந்து நில் ..!!!
உயிராற்றல் பெருகும்
தன்னம்பிக்கை வளரும்
வெற்றி நிச்சயம் ....!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...