Thursday, August 1, 2013

காதல் நொடி

நான் நானாக உள்ளபோது ..
நீ நீயாக இல்லை ...!!!
நீ நீயாக உள்ளபோது
நான் நானாக இல்லை ...!!!
நான் நானாகவும் நீ நீயாகவும்
இருக்கின்ற போது நீ நீயாக இல்லை ..
அப்படியென்றால் நான் யார் ....?

நீ சிரித்த சிரிப்பை

நீ சிரித்த சிரிப்பை
புகைப்படமாக எடுத்திருக்கிறது
என் கண்கள் ....!!!

உன் நடையின் நளினத்தை ...
சிலையாக வடித்திருக்கிறது
என் மனம் ....!!!

உன் வார்த்தைகளை ...
நாடா பதிவாக பதிந்திருக்கிறது ..
என் மூளை ....!!!

இன்னும் விஞ்ஞானம் வளரவில்லை ...
நான் எடுத்த புகைப்படத்தை
நான் வடித்த சிலையை ...
நான் பதிந்த நாடா பதிவை ...
உனக்கு காட்ட ...???

ஆசைப்படு.....!

அதிகாலையில் துயில்
எழுவதற்கு ஆசைப்படு.....! 
கட்டணம் இன்றி காலை 
கடனை கழிக்க‌ ஆசைப்படு ...! 
துயில் எழுந்தபின் 
குளிக்க‌ ஆசைப்படு.........! 
குளித்தபின் காபி குடிக்க‌ ஆசைப்படு....! 

அழகாக‌ உடையணிய‌ ஆசைப்படு...! 
உடுத்த‌ உடையை 
ஊத்தையாக்காமல் ஆசைப்படு...! 
நிற்கும் பஸ்சில் ஏற‌ ஆசைப்படு....! 
நேரம் தவராமல் வேலை செய்ய‌ ஆசைப்படு .....! 

மெதுவாக‌ கதைக்க‌ ஆசைப்படு ....! 
மென்மையாக‌ கதைக்க‌ ஆசைப்படு ...! 
மெத்தன‌ போக்கை நீக்க‌ ஆசைப்படு...! 
பெண்களை மதிக்க‌ ஆசைப்படு.....!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...