Friday, August 2, 2013

ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ (04)

ஒரு கதை
*********
அன்னம் - நம்ம சித்திர வேல் தொலைபேசியில் கதைத்தாரப்பா ...!!! என்ன சொன்னார் ..?
நம்ம வீடு எப்பவும் சந்தோஷமாகவும் சிறப்பாகவும் இருக்க என்ன காரணம் என்று கேட்டாரப்பா மனம் திறந்து ...!!!
நீங்கள் என்ன சொன்னீங்கள் ...?

நான் சொன்னது சிறு விளக்கம் -எமக்கு தேவையான செல்வத்தை பெற போராடி உழைக்கணும் அதில் ஒருபகுதியை தானம் செய்ய மனம் வரணும் தானம் செய்யணும்
தானம் செய்ய செய தானம் செய்தவர்களின் மனம் குளிரும் நாம் மனம் குளிரும் என்றேன் ...!!!
சரியா சொன்னீங்க அப்பா ....!!!

அவரும் சந்தோஷமாக ஏற்று விடை பெற்றார் ....அன்னம் ....!!!

ஒரு குறள்
*********

பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்

ஒரு ஹைகூ
***********

கொடைசெய்
விழுது விட்டு வாழும்
தலைமுறை

திருமணத்தை மறுக்கிறாய் ....!!!

நீ
காதலில்
ஆணிவேர்
சிரிப்பில் இளம்
குருத்து ....!!!

சிலநேரம்
கனவு கன்னியாய்
வருகிறாய்
சில நேரம்
கணத்த கண்ணீயாய்
வருகிறாய் ....!!!

என்னை பிரிந்து
சென்றபின் -ஏன்
திருமணத்தை
மறுக்கிறாய் ....!!!

கஸல் 295

நீரெழுத்தாக நீ ...!!!

உன்னை காதலிக்க 
முன் முள்ளில் நடந்து 
பழகினேன் ....!!!

காதல் ஒன்றும் 
நீர் குமிழியல்ல 
நீ அழுதவுடன் 
வெடிப்பதற்கு ....!!!

காதல் கடிதம் 
எழுதுகிறேன் 
நீரெழுத்தாக நீ ...!!!


கஸல் ; 2

நமக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு ....?

எப்படி 
உன்னிடம் இரண்டு 
இதயம் உன் -நினைவுகள் 
கலந்து வருகிறது ...!!!

காதல் சிலருக்கு 
சூரிய உதயம் 
சிலருக்கு 
அஸ்தமனம் 

காதல் நாள் தான் 
ஒவ்வொருவருக்கும் 
பிறந்த நாள் 
நமக்கு மட்டும் ஏன்
விதிவிலக்கு ....?

கஸல் 293

_________________________________________________

மீட்க வழியின்றி தவிக்கிறேன் ....!!!

நீ
இன்பத்தை
தருவதை காட்டிலும்
வலிதரும் போது
நிலையாக இருக்கிறது ...!!!

உன்னிடம் என்
காதல் அடகு
வைத்தத்தால்
மீட்க வழியின்றி
தவிக்கிறேன் ....!!!

நான்
காதல் காதல் இசை
கேட்கிறேன்
அழகாக இருக்கிறது
உன் மௌன இசை ....!!!

கஸல் 292

மனதுக்குள் பார்

மனதை பார்க்காதே 
மனதுக்குள் பார் 
என் காதலை ....!!!

என் கண் ஒளி
நீ பார்த்த நாள் 
பிரகாசம் 
அடைந்தது ....!!!

காதல் வெற்றி 
பச்சைநிறம் 
நீ சிவப்பு நிறத்தை 
காட்டி நிறுத்துகிறாய் ....!!!

கஸல் ;291

சிப்பிக்குள் முத்தாக நீ ...!!!

கண்ணாடிமுன்
ஆயிரம் வார்த்தைகள்
ஆயிரம் நடிப்புகள்
ஆயிரம் ஸ்ரைல்கள்
அத்தனையும் வீணாக ..
போகும் உன் முன்னால்...!!!

என் இதயம்
இருட்டாக இருக்கிறது
அன்பே நீ நிலவாக வரும்
நினைவில் -தூங்காமல் இருப்பேன்
நீ வரும் வரை ....!!!

தனிமையில் -நான்
இருந்தாலும் என் காதல்
சிப்பிக்குள் முத்தாக நீ ...!!!

நண்பா உன்னை மட்டும் சுமப்பேன் ...

நான் வாழ்க்கையில் ..
சாண் - தான் இறங்கினேன் ..
என் நண்பன் -முழமளவு
ஏற்றிவிட்டான் உயர்வில் ....!!!

காத்திருந்து ...
உதவிசெய்வதில்லை ...
உயிர் நட்பு ...!!!
உதவிசெய்வதற்காக ...
காத்திருப்பதுதான்....
உயிர் நட்பு ....!!!

தந்தை எனக்கு முதல்
உயிர் தந்தார் ...!!!
நண்பன் தினம் தோறும்
உயிர் கொடுக்கிறான் ...!!!
அவன் தந்தது ...
இருதயதானம் ...!!!

நண்பா இந்த இதயத்தில்
காதலுக்கே இடமில்லை ...
உன்னை மட்டும் சுமப்பேன் ...
இறுதி மூச்சுவரை .....!!!

தாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ

தாவரங்கள் மனிதனுக்கு தந்த பண்புகள் -ஹைகூ வடிவில்

புனிதமாக வாழ் 
வணங்கப்படுவாய் 
துளசி

 **************

வாழ்க்கை கசப்பும் உடையது 
வாழ்க்கையை பண்படுத்தும் 
வேப்பமரம்

***************

விழுது விட்டு நீடூடி 
பரம்பரைக்காக வாழ் 
ஆலமரம்

****************

தொடர்ந்து நன்மை செய் 
ஞானம் பெறுவாய் 
அரசமரம் 

*****************

வாழ்க்கையில் தோற்றாலும் 
மீண்டும் எழுந்து வா 
சிரங்சீவி

 
( துளசி  வேம்பு  அரசமரம் -இவை மூன்றும் 24 மணிநேரமும்   ஓட்சிசனை வெளியிடும்  இதனால் தான்  தெய்வ சின்னமகியது )

நீ பூரண இருள் ....!!!

காதலில் 
நல்ல துடிப்பு 
வேண்டும் -நீ 
நல்லா நடிக்கிறாய் ....!!!

உனக்குமா ..?
காதல் 
எட்டாப்பழம் ...?

நிலாவுடன் 
நான் பேச 
விரும்புகிறேன் 
நீ பூரண இருள் ....!!!

கஸல் ;290

இறுதி தந்தி அடித்து விட்டாய் ....!!!

நீ 
அழகான பூ 
பறிக்க வருகிறேன் 
அழுகிறாய் .....!!!

நினைப்பதை 
சொல்லமுடியும் 
உண்மைக்காதலில் 
மட்டும் ......!!!

காதல் குறுஞ்செய்தி 
அனுப்பினேன் -நீ 
இறுதி தந்தி அடித்து 
விட்டாய் ....!!!

கஸல் ;289

காதலிப்பாய் என்றால் ...???

உன்
முடிவு சிரிப்பா...?
அழுகையா ...?

காத்திருப்பது
சுகம் - காதலிப்பாய்
என்றால் ...???

வெந்நீரில்
தேநீர் ஊற்று
பன்னீரில் ஊற்றுகிறாய் ...!!!

கஸல் 288

திருமண அழைப்பிதல் தருகிறாய் ....!!!

கஸல் ; 287

ஆகாயமும் 
நிலமும் 
பார்க்கமுடியும் 
எப்படி இணைவது ...?

எலியும் பூனையும் 
போல் -நம்
காதல் இனிமையாக 
இருக்கிறது ...!!!

காதல் கடிதத்தை 
எதிர் பார்த்தேன் 
திருமண அழைப்பிதல்
தருகிறாய் ....!!!

கஸல் ; 287

இதயம் ஒன்றுதான் உள்ளது ....!!!

நினைப்பதற்கும் 
மறப்பதற்கும் 
இதயம் ஒன்றுதான் 
உள்ளது ....!!!

ஒருநொடியில் காதல் 
ஒரு நொடியில் 
தோல்வி ....!!!

பட்டத்தை பறக்க 
விடுகிறேன் -நீ 
நிலத்தில் பறக்கிறாய் ....!!!

கஸல் ;286

குறுங்கதையாகி போனது

நம் காதல்
கதை
குறுங்கதையாகி
போனது

காதல் மரமாக
தோன்றுவதில்லை
தளிராகதான்
தோன்றும்

நான்
உன்னோடு சடுகுடு
விளையாட விரும்புகிறேன்
நீயோ
கண்ணை கட்டி
விளையாடுகிறாய்

கஸல் 285

சாண் ஏற முழம் சறுக்குகிறது ...!!!

நம்
காதல் சாண் ஏற
முழம் சறுக்குகிறது ...!!!

காதல் மலையில்
ஏறுவது கடினம்
இறங்குவது சுலபம்

மெட்டியை
காலில் போடவேண்டும்
நீ
கழுத்தில் போடவேண்டும்
என்கிறாய் ....!!!


கஸல் ;284

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...