Sunday, August 4, 2013

காதலில் தோல்வியடைகிறார் ...!!!காதல் என்பது ..
இரண்டு இதயங்கள் 
தம்மை பூட்டிக்கொள்வது 
வேறு யாரின் கருத்துக்கும் 
உண்மை காதல் இடம்தராது ...!!!
பூட்டை யார் முதல் 
திறக்கிறாரோ- அவர் 
காதலில் தோல்வியடைகிறார் ...!!!
தூய்மையற்ற காதலில் ..
யார் பூட்டை திறக்காமல் ..
விடுகிறாரோ -அவர் 
வாழ்க்கையில் தோல்வியடைகிறார் ....!!!

படமும் கவிதையும் 05

ஒருதலை காதலாக்கிவிடாதே ....?


அன்பே 
உன்னை தேடுவதற்காக 
பட்டாம் பூச்சியாக ...
மாறிவிட்டேன் ...!!!

உன் புன்னகை 
பூத்த மலராக ..
இருந்ததால் பூந்தோட்டத்தில் 
தேடுகிறேன் ...!!!

தயவுசெய்து மீண்டும் 
காட்சி ,,,தா ,,,,?
ஒருதலை காதலாக்கிவிடாதே ....?

படமும் கவிதையும்

அன்பை புரிந்து கொண்டால்


Enlarge this image


மனிதனே ...
கற்றுக்கொள் ...!!!
அன்பாக வாழ்வது 
ஒற்றுமையாக இருப்பது 
இன வேறுபாடில்லாமல் 
கூடி உண்பது 
எல்லாவற்றையும் 
எம்மிடமிருந்து கற்றுக்கொள் ....!!!
ஏய் குருவியே -நீ என்னை 
கண்டு பயந்தும் உண்டு 
நானும் பயந்தது உண்டு 
பின்பு எப்படி ...?
கூடி உண்கிறோம் ...?
அன்பை புரிந்து கொண்டால் 
பகையில்லை 
பிரிவில்லை 
இன வேறுபாடில்லை ....!!!

இதனிடமாயினும் பதில் சொல்வாயா ...?
இதனிடமாயினும் 
பதில் சொல்வாயா ...?


உன்னோடு பேசுவதற்கு ...
கடிதம் போட்டேன் 
மின்னஞ்சல் அனுப்பினேன் 
குறுஞ் செய்தி அனுப்பினேன் 
அத்தைனையும் ..
வீணாய் போனது ...!!!
நீ 
பழமை விரும்பியோ ..
தெரியவில்லை ..
புறாவை அனுப்புகிறேன் 
இதனிடமாயினும் 
பதில் சொல்வாயா ...?

padamum kavithaiyum 

இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!


இது காதல் அரும்பும்சிரிப்பல்ல ...!!!
****************************** 
உன் சிரிப்பின் அர்த்தம் ... 
புரியாமல் தனிமையில் .... 
தவிர்க்கிறேன் .....!!! 
இவன் என்னிடம் ... 
ஏமார்ந்து விட்டானே ...? 
என்று சிரிக்கிறாயா ...? 
நான் உன்னிடம் காதல் .. 
சொல்ல தாமதமாகியதற்கு ... 
சிரிக்கிறாயா ...? 
ஒற்று மட்டும் உன் சிரிப்பில் ... 
நன்றாக தெரிகிறது ...!!! 
இது காதல் அரும்பும்.... 
சிரிப்பல்ல ...!!!

வருடிய நீ எங்கே ....?

துக்கத்தில் மனம் ...
தூங்க முடியாமல் ...
துடிக்கும் போது - என் 
துன்பத்தை -உன் கரத்தால் 
வருடித்தந்தவளே...!!!
இப்போதும் அதேநிலை ..
வருடிய நீ 
எங்கே ....?

வெண்ணிலவை எதிர் பார்த்து ...

வெண்ணிலவை எதிர் பார்த்து ...
வெந்த மனதுடன் காத்திருந்தேன் ....
வரும் வரும் என்று ....?
அன்று வருவதற்கு ...
வெண்ணிலா ...
என்ன முட்டாளா ...?
அமாவாசை அன்று ...!!!

வலி கண்ட இதயம்

வலி கண்ட இதயம் 
கதறியழுதாலும் ...
வார்த்தைகள் ....
மௌனமானாலும் ....
உணர்வின்றி உடலிருந்தாலும் ...
உடலை உயிர் பிரியும் வரை ..
நாம் கொண்ட அன்பு ..
இறக்கப்போவதில்லை ...!!!

திருக்குறள் சென்ரியூ -76

திருக்குறள் சென்ரியூ -76
அறத்துப்பால் 
அன்புடமை 
திருக்குறள்-சென்ரியூ 
*******************
அறத்திற்கே அன்புசார்ப்பு என்ப அறியார் 
மறத்திற்கும் அஃதே துணை 

இனியவன் திருக்குறள் சென்ரியூ ..76
******************************
அறத்துக்கும் துணை 
தீவினையும் நீக்கும் 
அன்பு 

இரண்டும் ஒன்றுதான்

மெழுகுதிரியும்
நானும் ஒன்றுதான்
உருக்குவதில் ..!!!

பூவும்
நானும் ஒன்றுதான்
வாடுவதில் ....!!!

கே இனியவன் சென்ரியூ.. 04

கே இனியவன் சென்ரியூ.. 04 


சந்தோசமாக இருப்பது எப்படி ..? 
தம்பதிக்கு கற்று கொடுக்கிறது 
தொலைக்காட்சி நிகழ்ச்சி 

********************************* 


முகநூலில் காதல் 
யாரையும் காதலிக்கவில்லை 
பழைய காதலி 

*********************************** 
தொடர்ந்து பாடும் 
தொண்டைகட்டாது 
ரேடியோ 

************************ 

சத்தியம் கேட்டு 
சலித்துவிட்டார் கடவுள் 
குடிகாரன் 

************************* 

அடையாளம் காணவில்லை 
மனைவி 
போக்குவரத்து காவலர்


நட்பு ஹைக்கூ

 நட்பு ஹைக்கூ
**************


வருவது தெரியாது
வந்தால் போகாது
நட்பு

****************

பள்ளி பருவம் தொடங்கி
பல் விழுந்த பருவம் வரை
நட்பு

******************

கண்டவுடன் கொண்டாலும்
கண்டமற்றது
நட்பு

******************

தடக்கி விழுந்தால் தூக்கும்
தூக்கிவிடுவதே தொழில்
நட்பு

*******************

காடு செல்லும் போது
முதல் கட்டை பிடிப்பது
நட்பு

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...