Tuesday, August 6, 2013

சிறுசிறு கவிதை துளிகள் 05

காதலில் 
பிரிய நினைத்தால் 
சிறு குற்றம் 
பெரும் குற்றமாக்கப்படும்

சிறுசிறு கவிதை துளிகள் 04

முகத்தில் வளரும் 
தாடியைத்தான் 
பார்க்கிறீர்கள் 
இதயத்தில் படரும் 
கள்ளிசெடியை 
யார் காண்பீர்கள் ...?

சிறுசிறு கவிதை துளிகள் 03

கல கல என்று
சிரிப்பவள் -என்னைக்கண்டு
ஊமையாகிவிட்டாள்
-முன்னாள் காதலன் -

சிறுசிறு கவிதை துளிகள்...02

எல்லோரும் 
விழுகிறார்கள் 
காதல் கிணற்றுக்குள் 
நான் விழவில்லை 
என்பவர் விழுந்தபின் 
எழுந்து நிற்பவர் ....!!!

சிறுசிறு கவிதை துளிகள்

உலகிலேயே 
அதிகளவு போதைப்பொருள் 
வைத்திருப்பவள் -நீதான் 
உன்னை கைது செய்ய உளர் ...?

இதயமாக பேசுவது நட்பு ........!!!

இன்பமாக பேசுவது
காதல் ....!!!
இதயமாக பேசுவது
நட்பு ........!!!

எனக்காக எதையும்
செய்வான் -என
எதிர்பார்ப்பது
காதல் ....!!!

எனக்காக எதை
செய்வோம் -என
எதிர்பார்த்து
கொண்டிருப்பது
நட்பு ......!!!

நண்பன் நிழல் அல்ல உயிர் .........!!!

என்னோடு இருந்தவள் 
என்னை புரியவில்லை 
என் காதலையும் 
புரியவில்லை ...!!!

தனியாக இருந்து 
தவிர்த்தேன் 
புலம்பினேன் ....!!!
யாரிடம் என் துயரை 
சொல்லியழுவேன் 
தவித்தேன் 
தவித்தேன் 

நண்பனே உன்னுடன்
பழகியபின்புதான்
நட்புக்கும் காதலுக்கும் 
வரைவிலக்கணம் 
அறிந்துகொண்டேன்

நிழல் போல் வருவது - காதல் 
வெளிச்சம் வந்தால்
விலகிவிடுவது காதல் ....!!!
இதயமாய் இருப்பது -நட்பு 
உயிர் இரிருக்கும் வரை 
தொடர்வது நட்பு ....!!!

நண்பர்களே -ஒரு 
வேண்டுகோள்....?
நண்பனிடம் சொல்லாதீர் -நான் 
உனக்கு நிழலாய் இருப்பேன் 
என்று -நண்பன் நிழல் அல்ல 
உயிர் .........!!!

ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ

ஒரு கதை        தொடர் 05
*********
அந்த ஊரில் நடுத்தர வருமானம் உழைப்பவர் -நல்ல தம்பி -தனது வருமானத்தில் சிறு தொகையேனும் நன்கொடை செய்யாமல் இருந்ததில்லை .நல்லதம்பிக்கு இரண்டு பெண் 
பிள்ளைகள் இருவருக்கும் சிறப்பாக திருமணமும் முடிந்து விட்டது .அவர் வீட்டில் சம்மந்தியாக பலர் போட்டியிடும் சரிவரவில்லை .அந்தளவுக்கு அவர் வீட்டில் சந்தோஷம் மதிப்புக்கும் குறைவில்லை 

நல்ல தம்பி வாழ்ந்த ஊரில் பிரதேச தலைவர் தேர்தல் வந்தது .ஊர் மக்கள் எல்லோரும் 
நல்லதம்பியை ஏகமனதாக தலைவராக்கினார் மக்கள் ....!!! நல்லதை செய்து வந்தால் 
நன்மைகள் தாமாகவே தேடி வரும் ....!!!

ஒரு குறள் 
*********
அன்பும் அறனும் உடையதாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது                                ( குறள் 45 )

ஒரு ஹைகூ 
**********

அன்பு செய் 
அறம் செய் 
நீ தலைவன்

கண்ணில் காதல் வரவேண்டும்

காதலுக்கு
மாலை போட்ட
முதல் ஆள்
நீ தான் ....!!!

கல்லுக்குள்
ஈரமுண்டு
உன்னைப்போல்

கண்ணில்
காதல் வரவேண்டும்
உனக்கு
கண்ணீர் வருகிறது ...!!!

கஸல் ;310

ஊசி முனைக்குள்

ஊசி முனைக்குள்
புகுந்த ஒட்டகம்
போல் -நம்
காதல் ....!!!

நீயும்
நானும் காதல்
மொட்டுக்கள்

சோகத்தில்
வீணை வாசித்தால்
நாண்களாக
இருந்த நீ
அறுகிறாய் ....!!!

கஸல் 309 

நெஞ்சில் தைக்கிறாய் ...!!!

காதல்
வாசமே
இல்லாத இடத்துக்கு
போகிறேன் ....!!!

காலில் தைத்த
முள் போல்
நெஞ்சில்
தைக்கிறாய் ...!!!

காதலில்
தர்மம்
அதர்மம்
இரண்டும்
நீ தான் ....!!!

கஸல் ;308

காதலில் நீ முதல் நிலை

காதலில்
நீ முதல் நிலை
நான் இரண்டாம்
நிலை .....!!!

உனக்காக
எரியத்தயார்
நீ
திரியாக வந்தால்

கடலில் படகு
ஓட்டுவோம்
வா .....!!!
தரையில்
அல்ல .....!!!

கஸல் 307

சிக்கி தவிக்கிறேன்

காதல் என்னும் 
இலந்தை முள்ளில் 
சிக்கி தவிக்கிறேன் 

உன்னை நம்பி 
வந்துவிட்டேன் 
வாழ்ந்துதான் 
ஆகவேண்டும் 

காற்றில் இயங்கும் 
காற்றாடி நான் 
காற்று - நீ 
காற்றுதான் இல்லை...!!!

கஸல் 306

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...