Wednesday, August 7, 2013

ஹைக்கூ எழுதுவது எப்படி - ?

ஹைக்கூ எழுதுவது எப்படி - History of Haiku

ஹைக்கூ எழுதுவது எப்படி
எழுதுவதற்கு முன் விதிமுறைகள் பற்றி...
ஹைக்கூ - ஜப்பானிய கவிதை வடிவம். இதன் மிகச் சிறிய வடிவம் உலகம் முழுவதும் கவர்ந்து இப்போது உலகின் எல்லா மொழிகளிலும் ஹைக்கூ எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


இதை எல்லோரும் எழுத முயல்வதன் காரணம் ஹைக்கூ சிறியதாகவும், எளிமையாகவும், இயல்பானதாகவும், எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவற்றைப் புதிய கோணத்தில் பார்க்க வைப்பதாகவும் இருப்பது தான்.
ஆனால் ஹைக்கூ-விற்கு தான் ஏராளமான விதிமுறைகள் உண்டு. கவிதைக்கு இடையூறாக இல்லாதவரை விதிமுறைகள் நல்லது தான். ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்னதைப் போல
'விதிமுறைகள் இல்லாத கவிதை, நெட் இல்லாமல் டென்னிஸ் ஆடுவதைப் போன்றது'. மேலும் பாஸோவின் கோட்பாட்டையும் (ஜப்பானின் சிறந்த ஹைக்கூ கவி) நினைவில்
கொள்வது நலம். 'விதிமுறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள், பின் அதை மறந்து விடுங்கள்'.


மறப்பதற்கு முன் விதிமுறைகளைக் கற்பது அவசியம்.


எத்தனை விதிமுறைகள்?

ஒரு சாதாரண உரைநடை வாக்கியத்தை மூன்று வரிகளில் உடைத்து எழுதினால் ஹைக்கூ ஆகி விடுமா? என்ற கேள்விக்குக் கூட நேரடியாக பதில் கூற முடியாத அளவிற்கு இதன் விதிமுறைகள் மாறி விட்டன.


ஹைக்கூ-விற்கு விதிமுறைகள் மிக அதிகம். எல்லா விதிமுறைகளையும் மொத்தமாக பின்பற்ற யாராலும் இயலாது. பல விதிமுறைகள் ஒன்றுக்கொன்று முரணானவை. ஒரே சந்த்தில் பின்பற்ற முடியாதாவை. ஆகையால் எழுதுபவரே தனக்கு ஏற்ற விதிமுறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.


உங்களுக்கு ஏற்ற சில விதிகளை எடுத்துக் கொண்டு உங்கள் எண்ணங்கள், பாதிப்புகள், உணர்வுகளை எழுதத் தொடங்குங்கள். விதிகளை மீறாதீர்கள். கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் உங்களுடைய எல்லா ஹைக் கூவும் ஒரே மாதிரி இருப்பதாக உணர்வீர்கள்! அப்படி உணர்ந்தால் உங்களுடைய டென்னிஸ் நெட்டை இன்னும் கொஞ்சம் உயர்த்த வேண்டும் என்று பொருள். மேலும் ஒன்றிரண்டு விதிகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு பிடித்த ஹைக்கூ கவிஞரின் கவிதைகளில் இருந்து நீங்கள் உணர்ந்து கொண்ட விதியாக கூட இருக்கலாம்.


இதோ சில விதிகள்.
 1. ஒரே வரியில் 17 சொற்கள்.
 2. மூன்று வரியில் 17 சொற்கள்.
 3. மூன்று வரியில் 17 சொற்கள் 5 - 7 - 5 என்ற வரிசையில்.
 4. சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் - நடு வரி மட்டும் சற்று நீளம்.
 5. மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.
 6. ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.
 7. மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.
 8. வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.
 9. எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.
 10. உவமைகளை உபயோகிக்காதிருத்தல்.
 11. தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.
 12. ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.
 13. உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.
 14. இயற்கை காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).
 15. எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.
thanks; www.kalanjam.com

தாய்மைதான் முதலிடம்


இயற்கையின் 
அற்புதங்களிலும் 
தாய்மைதான் முதலிடம் 
இங்கு மட்டும் 
விதிவிலக்காகிடுமோ ....?காட்சியும் கவிதையும் 2

எங்களிடம் அதிக சுமையில்லை


எங்களிடம் அதிக சுமையில்லை 
மாற்றி உடுக்க உடைசுமையில்லை 
பத்துப்பாத்திரங்கள் சுமையாக இல்லை 
உறவுகளை சுமக்கும் சுமையில்லை 
உயிராக இருந்த கணவன் சுமையில்லை 
இருக்கின்ற சுமை சிறுதுதான் 
தகப்பனை இழந்த பிள்ளைகள் 
அடுத்தவேளையை எதிர் பார்க்கும் 
எங்கள் உயிரும் தான் ...!!!
காட்சியும் கவிதையும் 19

வேடிக்கையான காதல்


இரு இதயம் 
ஒன்றாவதுதான் 
காதல் ....!!!

சிவப்பு நிறத்தை 
காட்டினால் 
புகையிரதம் நிற்கும் 
இவர்கள் காதலை 
நிறுத்தியுள்ளனரே...!!!
வேடிக்கையான காதல் 
வேடிக்கையில் தான் 
முடியும் .....!!!


காட்சியும் கவிதையும் 18

அன்பே என்ன நடந்தது ...?


அன்பே 
என்ன நடந்தது ...?
எதற்காக என்னைவிட்டு 
பிரிந்தாய் ...?

நிச்சயமாக நீயாக இறந்திருக்க 
மாட்டாய் ....!!!
மனிதர்கள் தான் 
உன்னை கொன்றிருக்க
வேண்டும் ....!!!

இது மனிதர்கள் நடமாடும் 
இடம் - என்னையும் 
கொன்றுவிடுவார்கள் ...!!!
கண்ணிருடன் செல்லப்போகிறேன் 
கண்ணே ....!!!

காட்சியும் கவிதையும் ...17

என்னில் அழுகை வருகிறது ...!!!


அடுப்பில் இருக்கும்... 
நெருப்பும் -என்... 
வயிற்றில் இருக்கும் ...
பசியும் ஒன்றுதான்...
அங்கே புகைவருகிறது 
என்னில் அழுகை 
வருகிறது ...!!! 

தாயே ...!!!
நான் அழும் அழுகை 
உன் நெஞ்சை 
வெடிக்க பண்ணுவது 
தெரியும் ...!!!

என்ன செய்வது ...?
அழுவதை தவிர 
வேறு என்னால் 
என்ன செய்ய முடியும் ....?


காட்சியும் கவிதையும் தொடரும் 

முகம் சிரிக்கிறது இதயம் அழுகிறது ...!!!

உயர செல்ல செல்ல 
ஈர்ப்பு குறையும் 
நீ தூர செல்ல செல்ல
நினைவு கூடுகிறது ...!!!

உன்னை கண்டவுடன் 
முகம் சிரிக்கிறது 
இதயம் அழுகிறது ...!!!

காதல் கீதம் 
குயில் போல் பாடு 
மயில் போல் அழறுகிறாய் ...!!!

கஸல் ;320

நிலையற்று அலைகிறது ...!!!

பிரமிட் 
மம்மி போல் உன் 
நினைவுகளும் 
அழியாமல் இருக்கின்றன ...!!!

காற்றில் பறக்கும் 
பஞ்சுபோல் -உன் 
நினைவுகளும் 
நிலையற்று அலைகிறது ...!!!

காதலின் மலராக 
உன்னை பார்க்கிறேன் 
நீ மரமாக இருக்கிறாய் ...!!!

கஸல் 319

தற்காலிகமாக மாற்றி விட்டேன் ....!!!

உன் வலியால் 
என் காதல் முகவரியை 
தற்காலிகமாக 
மாற்றி விட்டேன் ....!!!

காதல் தேன்கூடு...!!! 
போதையாகவும் இருக்கும் 
அதிகமானால் வலியாகவும் 
மயக்கமாகவும் இருக்கும் ....!!!

காதல் நிலாவை கைபிடிக்க 
ஆசைப்படால் -காதலி 
காதல் சூரியனை ஏன் 
தேடுகிறாய் ....!!!

கஸல் 318

தீக்குளிக்க சொல்கிறாய் ...!!!

காதல் 
எல்லாவற்றிலும் 
உண்டு -எல்லாவற்றிலும் 
வரும் 
அழகானது 
ஆபத்தானது ....!!!

உன்னால்
என் ஆயுள் 
குறைகிறது 
உன்னை பற்றிய
நினைக்கையில்
அதிகரிக்கிறது 

காதல் பூ 
குளிக்க ஆசைப்படும் 
என்னை
தீக்குளிக்க சொல்கிறாய் ...!!!

கஸல் 317

காயத்தை ஏற்படுத்திய நீ

காத்திருப்பது சுகம் 
காயவைப்பது 
அதர்மம் ....!!!

பாலுக்குள் தண்ணீரை 
கலப்பது இயல்பு 
நீ எண்ணையை 
கலந்து குடிக்கிறாய் 

இதயத்தில் காயத்தை 
ஏற்படுத்திய நீ 
பெரிய காயத்துடன் 
இருக்கிறாய் .....!!!

கஸல் 316

கவியின் வாழ்க்கை ....!!!

-ண்னால் 
வி-த்தை தந்து 
தை-த்தவளே

-டைக்கண் பார்வையில் 
வி-ழுந்த நான் -இன்னும் 
தை-ரியமாக பேசவில்லை 

-னவுலகில் வலியுடன் 
வி-ரும்பி வாழுகிறேன் 
தை-த்த முள்போல் இன்பமாய் 
கவிதையால் உன்னை காதலிப்பதே 
கவியின் வாழ்க்கை ....!!!

இதயம் தான் எனது மூச்சு உனது ....!!!

இதயத்தில் 
முள்ளாய் படர்கிறாய் 
சுகமாய் இருக்கிறது 

இதயம் தான் 
எனது மூச்சு 
உனது ....!!!

ஆலயத்தில் 
பந்தல் போடுகிறேன் 
நீ 
ஆகாயத்தில் 
போட சொல்கிறாய் 

கஸல் ;315

இதயத்தில் இருந்து வருகிறது ...!!!

நான் 
உன்னோடு 
கதைத்ததை விட 
தனியே கதைத்தது 
அதிகம் 

காதலுக்கு 
ஊசியும் நீ 
நூலும் நீ 

நெருப்பில் 
புகை வரவேண்டும் 
உன்னால் இதயத்தில் 
இருந்து வருகிறது ...!!!


கஸல் ;314

நினைக்கும் போது -நீ

நீ 
விலாங்கு மீனா ...?
காலை இன்பம் 
மாலை துன்பம் 

பூட்டிய இதய 
திறப்பை 
என்னிடம் 
தராதே 

நினைக்கும் 
போது -நீ 
ஒளியாகவும் 
இருளாகவும் 
வருகிறாய் 

கஸல் ;313

நீ காதலியா ..? காதல் விதியா ..?

நிலவுக்கு தெரியாது 
தான் அழகு 
உனக்கும் தான் ...!!!

பலாப்பழத்துக்குள் 
இருக்கும் -சுழை
போல் நான் உன்னுள் 

நினைத்து பார்க்கிறேன் 
நீ காதலியா ..?
காதல் விதியா ..?

கஸல் ;312

கவிதையாய் வலிக்கிறாய் ....!!!

காதல் வலியில்
கிறுக்குகிறேன்
கவிதையாகிறது

உன்னோடு நான்
வாழ்விரும்புகிறேன்
நீ என்னை
வாழ்த்தவிரும்புகிறாய்

நான் உன்னை
கண்ணுக்குள்
வைத்திருக்கிறேன்
நீ
கவிதையாய்
வலிக்கிறாய் ....!!!

கஸல் ;311

காட்சியும் கவிதையும் 15


இதற்காகவா 
காதலித்தோம் 
காந்தத்தின் 
இரு துருவங்கள் 
போல் -நீ 
வடக்கு -நான் 
தெற்கு என்று ...!!!
காதலில் வலி 
வழமையானது 
வலியை மறந்திடு 
என்னை நினைத்திடு ...!!!


காட்சியும் கவிதையும் 15

கேலியாக சிரிக்கின்றன ...!!!


காத்திருப்பேன் 
நீ என்னிடம் 
வரும் வரை 
காத்திருப்பேன் 
அதுவரை -உன் 
நினைவுகளுடன் 
வாழ்ந்திருப்பேன் 
என் வீட்டு பூக்கள் 
என்னை பார்த்து 
கேலியாக சிரிக்கின்றன ...!!!

காட்சியும் கவிதையும் 13


எங்களை இப்படி 
தூக்கிய மனிதா 
ஒருமுறை உன்னை 
தூக்கி பார்க்கிறோம் 
வந்துபார் எம்மோடு ...!!!
சிலவேளை -உனக்கு 
வாயால் வரக்கூடாதது 
எல்லாம் வரும் 

-மிருக வதையை எதிர்ப்போம் -

காட்சியும் கவிதையும் 13

காட்சியும் கவிதையும் 12


Enlarge this image


அன்போடு 
ஒரு மரம் நடுவோம் 
அதை உங்கள் பிள்ளைபோல் 
காத்திடுவோம் ....!!!
தன் பிள்ளையால் 
தன் சமூகத்துக்கு பயன் 
ஒரு மரக்கன்றால் 
உலகிக்கே பயன் 
நான் 
உலகத்தின் பிள்ளை ....!!!

-இப்படிக்கு மரம் -


காட்சியும் கவிதையும் 12

என் இனம் அழிந்தால்


Enlarge this image


பார் மனிதா ...!!!
இதுவும் ஒரு இன 
அழிப்புத்தான் ...!!!
இனம் அழிந்தால் 
அந்த வம்சம் அழியும் ..
என் இனம் அழிந்தால் ..
உலகம் அழியும் ...!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...