Thursday, August 8, 2013

எப்படி இதயம் இரும்பாகியது ..?


சகோதரியே ...!!!
இந்தவயதில் இருந்து 
சுற்றியல் பிடித்திட்டோமே 
சுற்றியலைவிட 
வண்மையாகிவிடும் 
நம் கைகள் -எம்மை 
வேலைக்கு அழைத்த 
முதலாளி எதையுமே 
பிடிக்காமல் எப்படி 
இதயம் இரும்பாகியது ..?
அவருக்கு...?


காட்சியும் கவிதையும் 25

இதய கதவை திறந்து கொள் ....!!!


இந்தா பெண்ணே ...
இப்போது என்றாலும் 
இதய கதவை திறந்து 
கொள் ....!!!

காட்சியும் கவிதையும் 24

மனிதநேயம் தான் சொல்ல வேண்டும் ....!!!


செல்கிறோம் 
வருத்தி வருத்தி 
உழைக்க செல்கிறோம் 
எதிர் பார்க்கையுடன் 
செல்கிறோம் ....!!!

செல்லவதை மட்டுமே 
சொல்கிறோம் 
வருவதை மனிதநேயம் 
தான் சொல்ல வேண்டும் ....!!!

நாங்கள் விடும் கண்ணீர் 
கடல் அன்னைக்கும் 
புரியாது கண்ணீரின் 
சுவையும் உவர்ப்புத்தானே ....!!!

கட்சியும் கவிதையும் 23

இழந்து விட்டோம் ....!!!


நீங்கள் உணவு தந்தால் கூட 
நாங்கள் சாப்பிடும் சக்தியை 
இழந்து விட்டோம் ....!!!

அப்படியென்றால் 
எதற்காக கைநீட்டுகிறாய்...?
என்று கேட்கிறீர்களா ...?

நீட்டி நீட்டியே எங்கள் 
கைகள் தானாக நீண்டு 
விட்டன ....!!!


காட்சியும் கவிதையும் 22

மறு உலகக்காதல் -இது ....!!!

காதலித்தோம் 
காதல் மறுக்கப்பட்டது 
இருவரும் முடிவெடுத்தோம் 
காதலை இழப்பதில்லை 
இப்போது யாருடைய தலையிடும் 
இல்லாமல் சந்தோசமாக வாழுகிறோம் 
காதலர்களே .....!!!
மனிதர்கள் உணரமுடியாத 
மறு உலகக்காதல் -இது ....!!!

காட்சியும் கவிதையும் 21

உணர்வுடன் வருவது காதல் ....!!!

கண்டவுடன்
வாங்குவது
பொருள்
உணர்வுடன்
வருவது காதல் ....!!!

எதையும் இழந்துவிடு
காதலை தவிர

நான் சுவைக்கும் நா
நீ திட்டும் நா ....!!!

கஸல் 325

இதயத்தில் என் காதல்

இதயத்தில் என் 
காதல் -உனக்கு 
உதட்டில் .....!!!

நான் முகப்பு அறுந்த 
பட்டம் ஆடிக்கொண்டு 
இருக்கிறேன் 

நம் காதல் பாதையை 
மீட்டுப்பார்க்கிறேன் 
நீ -தேடிப்பார்க்கிறாய் ....!!!

கஸல் 324

உனக்கு ஆராதனை ....!!!

என் கவிதை 
எனக்கு ஆறுதல் 
உனக்கு ஆராதனை ....!!!

காதல் நூலை 
கையை விட்டுக்கொண்டு 
இருக்கிறேன் -நீயோ 
சிரிக்கிறாய் ....!!!

பத்திரிகையில் 
நான் தலைப்பு செய்தி 
நீ விளம்பர செய்தி ....!!!

கஸல் 323

நீ என்னில் இதயத்தை தேடுகிறாய் .....!!!

நிலவுக்கு மனிதன் 
போகிறான் -நிலவாக 
நீ இருக்கும் போது ...!!!

நான் உன்னில் காதலை 
தேடுகிறேன் 
நீ என்னில் இதயத்தை 
தேடுகிறாய் .....!!!

உண்மைக்காதல் -எதையும் 
தாங்கிக்கொள்ளும் 
உன்னை போல் வார்த்தையால் 
தாக்காது .....!!!

கஸல் 322

உள்ளே எரிகிறது இதயம் ......!!!

நன்றாக இருக்கிறது 
காதல் 
வலியாக இருக்கிறது 
உன் நினைவு ....!!!

வெளியில் சிரிக்கிறது 
முகம் 
உள்ளே எரிகிறது 
இதயம் ......!!!

கண்ணெதிரே சிரிக்காத நீ 
கண் மூடும் வேளையில் 
சிரிக்கிறாய் ......!!!

கஸல் 321

ஒரு சொத்து கவிதை

உன்னை இன்ப 
படுத்த என்னிடம் 
இருக்கும் ஒரே 
ஒரு சொத்து 
கவிதை

காதலோ ...?

கண்ணால் தொற்றி
இதயத்தில் வரும்
நோய் தான்
காதலோ ...?

காணாமல் போன

காணாமல் போன
என்னை -உன்னிடம்
வந்து கேட்ட முட்டாள்
நான் ...!!!

ஒரு எழுத்து மாறியது ...!

ஒரு எழுத்து மாறியது ...!
தலை எழுத்தே மாறிவிட்டது ..!!!
அன்பு - செய்தவள் 
அம்பு - விடுகிறாள்

உன் இதயம் ஏன் கசியவில்லை ...?

என் கைரேகை தேயும் 
வரை கவிதை எழுதிவிட்டேன் 
உன் இதயம் ஏன் கசியவில்லை ...?

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...