Tuesday, September 3, 2013

காதலித்துப்பார் ....

யார் சொன்னது ஒரு உடலில்
ஒரு இதயம் என்று ...!!!
காதலித்துப்பார் ....
ஒரு உடலில் இரண்டு ..
இதயம் வரும் ...!!!
தோற்றுப்பார்....
இதயமே இல்லாத
உடல் இருக்கும் ...!!!

காதல் சட்டம் இல்லை .

கவலை படாமல் காதலியுங்கள் ...
கண்ணியத்தோடு காதலியுங்கள்....
திருமண சட்டம் போல் ....
காதல் சட்டம் இல்லை .
சட்டம்
இல்லை என்பதற்காக -எப்படி
வேண்டுமென்றாலும் ...
காதலிக்காதீர் ....!!!

நீ காதல் புயல்

நீ வருவதில் தாமதம்
அதனால் கனவில்
வருகிறேன் ....!!!

நீ காதல் பன்னாடை
நல்லதை விட்டு
தீயதை வைத்திருக்கிறாய் ...!!!

நீ காதல் புயல்
அதனால் தான்
நீ வரும்போது நான்
காணாமல் போகிறேன் ...!!!

கஸல் 440

காதலோடு பேசு ...!!!

இரண்டும் இரண்டும்
ஆறு ...
என்று சொல்வதுதான்
காதல் ...!!!

நீ அர்த்தமானவள்
என்றால்....
அர்த்தமாக பேசு ...
காதலோடு பேசு ...!!!

நான் முற்றவெளியாக
இருக்க விரும்புகிறேன்
நீ வேலிபோடுகிறாய் ...!!!

கஸல் 439

நான் கவிதையால் கொல்கிறேன் ....!!!

நீ வார்த்தையால்
கொல்வதால் தான்
நான் கவிதையால்
கொல்கிறேன் ....!!!

உலகில் எது முடிவு
என்று தேடிப்பார்க்கிறேன்
உன்னை விட்டு ...
விலகுவதற்கு....!!!

வைத்தியர்களின்
கருணை கொலையும்
உன் கொலையும்
ஒன்றுதான் ...!!!

கஸல் 438

கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதில்....!!!

நீ தொட்டாசுருங்கி
நான் அருகில் வரமுன்
ஓடுகிறாய் ....!!!

நான் தொடர் கதை
எழுதுகிறேன் -நீ
சிறுகதை  வேண்டும்
என்கிறாய் ...!!!

நீயும் மதுவும்
ஒன்றுதான் ...
கொஞ்சம் கொஞ்சமாக
கொல்வதில்....!!!

கஸல் 437

நீ தந்த நினைவுகள் திரவமாகிறது ....!!!

செய்த பாவத்துக்கு 
தண்டனையுண்டு 
உணர்ந்தேன் -நீ 
காதலாக வந்தபோது ...!!!

எந்த பரீட்சையிலும் நான் 
தோற்றதில்லை -உன் 
காதல் பரீட்சையை தவிர ...!!!

நான் 
விடுவது கண்ணீர் அல்ல 
நீ தந்த நினைவுகள் 
திரவமாகிறது ....!!!

கஸல் 436

ஆறிலிருந்து அறுபது ( ஆன்மீகம் )

ஆறிலிருந்து அறுபது
வயதுவரை அனைத்தையும்
காதலித்துப்பார் ...!!!
நூறிலிருந்து நூற்றிஐம்பது
வயது வரை வாழ்வாய் ...!!!
காதலற்று காமம் அதிகரித்ததே
உலகில் இத்தனை அழிவுக்கும்
காரணம் ....!!!

அன்பே சிவம் ...!!!

வஞ்சகம் சூது காமம்
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க
தியானம் செய் ...!!!
உலகில் உள்ள எல்லாவற்றையும்
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!

இதயங்கள் பரிமாறி ..?

இருதய மாற்று சத்திர
சிகிச்சை வெற்றி பெறும்
என்று விஞ்ஞானத்துக்கு
எடுத்துரைத்தது காதல்
தானுங்க ....!!!
இதயங்கள் பரிமாறி
கொள்வதுதானே காதல் ...!!!

காதல் ஆரம்பத்தில்

காதல் ஆரம்பத்தில்
ரகசிய போலீஸ் வேலைதான்
நான் உன் இதயத்திலும்
நீ என் இதயத்திலும்
இருப்பது -நம்மை
தவிர யாருக்கும் தெரியாது ...!!!

சற்று முன் உன் நினைவு

சற்று முன் உன் நினைவு
பட்டென்று  வந்தது ....
யாருக்கும் சொல்லி விடாதே
நான் நீயாக மாறிவிட்டேன் ...
நீ என்னை காதலிக்கும் வரை
இப்படி எத்தனை அதிசயங்கள்
நடைபெற போகிறதோ ..
தெரியவில்லை ....? 

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...