Wednesday, September 4, 2013

ஆயிரம் நினைவுகள் ...!!!

இதயத்தில்  ஆயிரம்
நரம்புகள் -அதில் ஆயிரம்
ஆயிரம் நினைவுகள் ...!!!
வலிக்கும் நினைவுகளால்
நரம்புகளும் அழுகின்றன ...!!!
இனிக்கும் நினைவுகளால்
நரம்புகளில் வீணையோசை
கேட்கின்றன ...!!!

அந்த நட்பை கைவிட்டுவிடாதே ...!!!

முடியாதடா விட்டு விடு
உனக்கு இது தேவையில்லாத
முயற்சியடா விட்டு விடு
என்று எந்த நண்பன் தடுக்கிறானோ
அந்த நட்பை விட்டு விடு ....!!!

முடியாத ஒன்றை உன்னால்
முடியும் என்று உசுப்பேற்றுபவனையும்
அந்த நட்பில் இருந்தும் விலகிவிடு ...!!!

இது என்னால் முடியாதடா
நிச்சயம் உன்னால் முடியும்
என்று எவன் தைரியம் கொடுக்கிறானோ
அந்த நட்பை கைவிட்டுவிடாதே ...!!!

ஒரு நாள் கூட அழுததில்லை ...!!! (ஆன்மீக கவிதை)

தோல்வியின் போதும்
இழப்பின் போதும்
அழுதவர்கள் சிலர்
வெற்றியை அடையவில்லை
காரணம் தெரியுமா ...?
வெற்றியை நினைத்து ஒரு
நாள் கூட அழுததில்லை ...!!!
என்ன விளங்கவில்லையா ...?
ஆண்டவனின் கருணைக்கும்
வெற்றியின் சுவைப்புக்கும்
ஆண்டவனிடம் மண்டியிட்டு
அழுதே ஆகவேண்டும் ...!!!
அழுத்த குழந்தையை தூக்காத
தாய் உண்டோ ....?
அழுத்த உன்னை தூக்காத
கடவுளும் இல்லை ...!!!
நம்பிக்கை இல்லாவிட்டால்
ஒருமுறைஎன்றாலும் வாழ்நாளில்
ஆண்டவன் முன் அழுதுபார் ...!!!
வந்த விளைவை ஆண்டவனுக்கு
சொல்லு ....!!!

(ஆன்மீக கவிதை )

மாயவனே உன்னை மனதுக்குள்

நடை பாதையில் மலர்கள்
மலர்வதே இல்லை
மன்னவனே....!!!
நீ பார்த்த பார்வையில்
பாதையிலேயேமலர்ந்து
விட்டேன் ....!!!
இனிமையாக பலர் பேசினார்
அத்தனையும் கசத்தது
எதற்காக ...? -உன்
பேச்சே முதல் முதலில்
இனிமையாக இருக்க வேண்டும்
என்பதால் தானோ ....!!!
மாயவனே உன்னை மனதுக்குள்
மணவாளனாக்கி விட்டேன் ...!!!!
மனக்கோட்டையை
மண்கோட்டையாக்கிடாமல் வந்து விடு ...!!!

பேச்சு அழகாக இருக்கும் ....!!!

பேச்சு என்பது தனித்து
ஒலியும் வார்த்தையும்
அல்ல ....!!! -உன் எண்ணம்
மனதின் சுழச்சி எதுவாகிறதோ
அதுதான் பேச்சு ...!!!
மன சுழச்சியை ஒருமை
படுத்து -பேச்சு அழகாக
இருக்கும் ....!!!

நிலாவைப்போல் வாழுகிறேன் ...!!!

நீ
சூரியன்
நான் சந்திரன்
சூரிய உதயம் முதல்
சூரிய மறையும் வரை
நீ வந்து செல்கிறாய் ....!!!
உன் நினைவுகளில் நான் இரவு
முழுவதும் தூங்காமல்
நிலாவைப்போல்
வாழுகிறேன் ...!!!

காதலர் என்றால் கள்வர்கள்

காதலர் என்றால் கள்வர்கள்
தானோ ...!!!
ஒருவர் இதயத்தை ஒருவர்
திருடுவதால் ...!!!
காதலர் என்றால் பொய்யர்கள் ..
தானோ ...!!!
அவரவர் வீட்டுக்கு மறைப்பதால்
காதலர்கள் என்றால் ஏமாற்றுகாரர்
தானே ...!!!
ஒருவரை ஒருவர்
ஏமாற்றுவதால்...!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...