Thursday, September 5, 2013

எனக்கு துடிப்பு ...!!!

நீ
கல்லூரி செல்வது
படிப்பு ...!!!
எனக்கு துடிப்பு ...!!!
ஞாயிறு
விடுமுறை தினம்
எனக்கு சோகதினம்...!!!

சிறைபிடித்து செல்வேன் ....!!

சிரித்து கொண்டே..
சித்திரவதை செய்யும் ..
சித்திரவதை கூடம் நீ ...
சித்திரவதை சட்டத்தில் 
சித்திரை மாதம் ...
சித்திர பௌர்ணமியில் 
சித்தம் கலக்கும் உன்னை 
சிறைபிடித்து செல்வேன் ....!!!

காற்று நீ எங்கே ...?

உனது நோக்கம்
நிறைவேறி விட்டது
இதயத்தை களவெடுத்து
இல்லை என்று சொல்லுகிறாய்

பூவும் நாரும் சேர்ந்தால்
மாலை -எனக்கு கிடைத்தது
வெறும் நார் ....!!!

காற்றில்  மிதப்பது போல்
நினைவுகள் இருந்தன
இப்போ நினைவுகள்
இருக்கின்றன
காற்று நீ எங்கே ...?

கஸல் 445

காதல் தராசில் நான் நிற்கிறேன்

நீ என்னை பிரிந்தால்
சிறப்பு என்று நினைப்பாய்
என்றால் - நான்
உன் நிழலில் இருந்து
விலத்துகிறேன்....!!!

கடலுக்குள் எறியப்பட்ட
கல் போல் திசை தெரியாமல்
போய் விட்டது
என் காதல்....!!!

காதல் தராசில் நான்
நிற்கிறேன்
மறு முனையில்
உன்னை காணவில்லை ...!!!

கஸல் 444

நீ பிரிந்தபோது

சிப்பிக்குள் தான் முத்து
நீ
நத்தைக்குள்
எடுக்க சொல்கிறாய் ...!!!

நீ பிரிந்தபோது
நான் அழவில்லை
காதல் அழுதது
நீ சிரிக்கிறாய் ...!!!

ஏழு வகை நிறத்தால்
வானவில் தோன்றும்
இதயத்தில் ஏழுவகை
வலியால் தோன்றுகிறதே ...!!!

கஸல் 443

கண்ணீரால் எரியும் ஒரே விடயம் ..?

உனக்கு பயப்பிட்ட நான்
இப்போ காதலுக்கு
பயப்பிடுகிறேன் ...!!!

உடலுக்கு ஆடை தை
நீ காதலுக்கு தைக்கிறாய்
அதனால் தான் அடிக்கடி
மாற்றுகிறாய் ....!!!

கண்ணீரால் எரியும்
ஒரே விடயம்
இதயம் தான் ....!!!

கஸல் 442

ஒரு சொல் போதும் காதல் .....!!!

நான் எத்திசையும்
பார்க்கிறேன் -நீ
எதிர் திசையில்
இருக்கிறாய் ....!!!

அன்பின் ஆழத்தை
அளக்க முடியாது
எப்படி ..? நீ
நான் -அன்பில்லாதவன்
என்று அளந்தாய் ...?

நானும் நீயும்
என்று இரு சொல்
வேண்டாம் ...!!!
ஒரு சொல் போதும்
காதல் .....!!!

கஸல் 441

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...