Translate மொழி பெயர்ப்பு

Saturday, September 7, 2013

உயிரெழுத்தே நீ

அன்புக்கு அடக்கமானவன் நீ
ஆசையை அழிப்பவன் நீ
இன்பதத்தை தருபவன் நீ
ஈகையில் மகிழ்பவன் நீ
உலகை ஆழ்பவன் நீ
ஊண் கொடுப்பவன் நீ
எழுத்து தந்தவன் நீ
ஏர் தந்தவன் நீ
ஐந்துபொறியும் நீ
ஒற்றுமையை கூறுபவன் நீ
ஓங்க்காரமானவன் நீ
ஔடதமானவன் நீ

(ஆன்மீக கவிதை) 

உன்னை பார்த்தேன் .....!!! (ஆன்மீக கவிதை )

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

உணவுதரும் தாவரத்தில் உன்னைபார்த்தேன் ....
நெழிந்து  வரும் புழுவில் உன்னைபார்த்தேன் ....
ஊர்ந்து வரும் பாம்பில் உன்னைபார்த்தேன் ....
பறந்து வரும் பறவையில் உன்னைபார்த்தேன் ....
ஒறுமி வரும் மிருகத்தில் உன்னைபார்த்தேன் ....
அன்புள்ள மனிதரில் உன்னைபார்த்தேன் ....
ஓரறிவு தாவரம் முதல் ஆறறிவு மனிதன் ..
வரை உன்னைபார்த்தேன் .......!!!

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

அடித்தோடும் நீரில் உன்னை பார்த்தேன் .....
புழுதி எழும் நிலத்தில் உன்னை பார்த்தேன் .....
சுட்டெரிக்கும் தீயில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு தரும் காற்றில் உன்னை பார்த்தேன் ....
அசையும் ஆகாயத்தில் உன்னை பார்த்தேன் ....
பஞ்ச பூதமாக உன்னை பார்த்தேன் ...!!!

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

பேசும் மொழிவாயில் உன்னை பார்த்தேன் .....
தேடிய கண்ணில் உன்னை பார்த்தேன் .....
மூச்சு விடும் துவாரத்தில் உன்னை பார்த்தேன் ....
கீதத்தை கேட்கும் போது உன்னை பார்த்தேன் .....
மெய் மறந்த நிலையில் உன்னை பார்த்தேன் .....
பஞ்ச பொறிகளில் உன்னை பார்த்தேன் .....!!!

உன்னை பார்த்தேன் உன்னை பார்த்தேன் .....!!!
உள்ளம் குளிர்ந்தேன் உவகை அடைந்தேன் ...!!!

இறைவா காணும் இடமெல்லாம் நீ
காணும் பொருளெல்லாம் நீ
காணும் உயிரெல்லாம் நீ

(ஆன்மீக கவிதை )

நட்புத்தான் ...!!!

தேடி பார்த்து வருவது காதல்
தேடாமல் தற்செயலாக வருவது
நட்பு ,,,,,,!!!
காதலில் முடிவுக்காக
காத்திருந்து காலத்தை
வீணாக்கியவன் அதிகம்
காலத்தால் அழியாததும்
காலம் தாழ்த்தாமல் வருந்தும்
நட்புத்தான் ...!!!

வேடிக்கையாக உண்டு ...!!!

எனக்கு கடவுள் மீது
நம்பிக்கை உண்டு
எந்த இயக்கமும்
அவனின்றி நடைபெறாது
என்பதில் அசையாத நம்பிக்கை
உண்டு ....!!!
ஆனால் கடவுள் ஆலயங்களில்
இருக்கிறது என்பதை நினைக்கத்தான்
வேடிக்கையாக உண்டு ...!!!
ஆன்மீகத்தில் மனதை செலுத்த
முடியாதகல்மனத்தார் -தான்
கடவுளை கல் ஆக்கினாரோ
என்ற கேள்வியும் உண்டு ...!!!

நான் பார்த்தேன் ....!!!

நான் எதிரே நிற்கிறேன் 
நீ பார்க்காமல் போகிறாய் 
உன் மனதை வேண்டுமேன்றே 
கயிற்றால் கட்டுகிறாய் 
கண் காற்றில் பறக்கும் 
பஞ்சை போல் பறந்ததையும் 
நான் பார்த்தேன் ....!!!

காதலிக்கிறேன் ....!!!

நீ அம்மாவிடம் கொஞ்சி
பேசியதையும் - அப்பாவிடம்
வெளியே போவதற்கு -கெஞ்சி
கேட்டதையும் -நான்
பார்த்தேன் -நிச்சயம்
நீ காதலையும் மதிப்பாய் ..
பெற்றோரை மதிக்கும் நீ
காதலையும் மதிப்பாய் ..
உன்னை காதலால்
காதலிக்கிறேன் ....!!!

கள்வனின் காதலி ஆகிவிடுவாய் ....!!!

நான் சிறுவயது முதல்
சின்ன களவு கூட
செய்ததில்லை -இப்போ
உன்னிடம் இருந்த சின்ன
சின்ன பொருட்களை
களவெடுத்துள்ளேன்
என்னை கள்வன் என்று
சொல்லி விடாதே ...
கள்வனின் காதலி
ஆகிவிடுவாய் ....!!!

உன் இதயத்தை மட்டும்

தயவு செய்து என்னை
காதலித்து விடு
இல்லையேல்
உன் இதயத்தை மட்டும்
தந்துவிடு - எப்படி
உன்னை போல் இருக்க
இதயத்தை வடிவமைத்து
வைத்திருக்கிறாய் என்று
பார்த்துவிட்டு தருகிறேன்...!!!

Haikoo 02

தொழிலை செய்
சம்பளம் கிடைக்காது
சாதிபட்டம் உண்டு

Haikoo -01

நானும் பிச்சை எடுக்கிறேன்
ஒவ்வொரு நிறுவனமாய்
வேலை தேடி 

உன்னை சுற்றி சுற்றி

உன்னை கடிகாரமாக
நேசிக்கிறான் -அதுதான்
உன்னை சுற்றி சுற்றி
வருகிறேன் ....!!!

நீ என் கவிதை புத்தகம்
அதனால் தான் நீ
புரட்டி எடுத்தாலும்
மீண்டும் வருகிறேன் ...!!!

நான் உன் மூச்சு
நீ வெறுத்தாலும்
மீண்டும் மீண்டும் வருகிறேன் ...!!!

ஏக்கமே வாழ்க்கையாக

காத்திருந்தேன் பமுறை
கோபம்தான் வந்தது ...!!!
காத்திருக்கிறேன் உனக்காக
தாகம் வந்தது ....!!!
எப்போது என்னை பகிர்வாய்
எப்போது என்னை அடையாய் ...?
ஏக்கமே
வாழ்க்கையாக வாழ்கிறேன் ...!!!