Sunday, September 8, 2013

நீ தான் முடிவு சொல்ல வேண்டும்

நீ தந்த நினைவுகள்
அத்தனையும் மாலையாக
கோர்க்கிறேன்
நீ தான் முடிவு சொல்ல
வேண்டும் நான் எந்த
மாலையாக பயன்படுத்துவது ...?

மனதுக்குள் பலமுறை

என் வீட்டு மல்லிகை
எத்தனை முறை பூத்தாலும்
வாசமில்லை ...!!!

என் வீட்டு அழைப்பு மணி
எத்தனை முறை அடித்தாலும்
பதட்டமில்லை ...!!!

எப்போது நீ வருவாய் என்று
சொல்கிறாயோ அப்போது
மல்லிகை வாச தொடங்கும் ....!!!

அழைப்பு மணி எப்போது
அடிக்கிறதோ இல்லையோ
மனதுக்குள் பலமுறை
அடித்துவிடும் அழைப்பு மணி ....!!!

ஒருமுறை பார்த்துவிடு அன்பே .....!!!

கூட்டத்தில் நின்ற என்னை
கூட்டத்தோடு கூட்டமாக
பார்க்காமல் - என்னையே
பார்க்கும் ஒரு பார்வையில்
பார்த்தாயே அன்றே
முடிவெடுத்தேன் ....!!!

உன்னில் நான்
நிழல் படமாகி விட்டேன்
உன் இதயத்தில்
சிற்பமாகி விட்டேன்
உன் மூச்சில் காற்றாகி விட்டேன் ...!!!

நிச்சயமாக என்னை காதலிப்பாய்
காத்திருக்கிறேன்
மீண்டும்
அந்த பார்வையை ஒருமுறை
பார்த்துவிடு அன்பே .....!!!

உன்னால் இதயம் அறுந்த ...!!!

நீ
எந்தளவு சுயனலமானவள்
அறுந்த செருப்பை
பற்றிகவலைப்பட்டாய் .....!!!

பேரூந்தில் மாட்டி கிழிந்த
சுடிதாரை பற்றி
கவலைப்பட்டாய் ....!!!

தொலைந்த கைப்பையை
நினைத்து பதட்டப்பட்டாய் ...!!!

உன்னால் இதயம் அறுந்த
இதயம் கிழிந்த
வாழ்க்கையை தொலைத்த
என்னை
பற்றி ஒருநிமிடமாயினும்
கவலை பட்டத்தை நான் அறிந்ததே
இல்லையே .....!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...