Thursday, September 12, 2013

என் காதல் தான் ...!!!

என்னவள் முகம் ...
இருள் அறைக்குள் 
சிறு பொறி வெளிச்சம் போல் ...!!!
ஒவிய கண்காட்சி வைக்கலாம் 
அவள் முகத்திற்காக
அழகு  கொடுத்தது 
என் காதல் தான் ...!!!

அன்பே உன்னை பூவோடு

அன்பே உன்னை பூவோடு
ஒப்பிட்டத்தால் தான் - என்னை
காணாத போது வாடுகிறாயோ...?
நட்சத்திரமே என்றுதான் -இனி
உன்னை அழைப்பேன் ....!!!

நீ பூசும் உதட்டு மையாக ...

மனித பிறப்பு எடுத்ததைவிட ...
நீ பூசும் உதட்டு மையாக ...
பிறந்திருக்கலாம் ...!!!

மறு வரி -ஏங்குகிறது

நான் ஒருவரியில்
கவிதை எழுதினால்
மறு வரி -ஏங்குகிறது
எப்போது உன் பெயர்
தன்மேல்
எழுதப்படும் என்று ...?

உன்னை தவிர என்னை

நீ
மௌனத்தை உடைத்தத்தால்
வந்தது என் காதல் மட்டும் அல்ல
வாழ்க்கையும் தான் ....!!!
உன்னை தவிர என்னை
வாழவைப்பவரும் யாருமில்லை ...!!!

காதலாக பார்த்தால்

விஞ்ஞானமாக பார்த்தால்
என் இதயம்
வெறும் தசை தான்...!!!
காதலாக பார்த்தால்
உன்னை நினைத்து
அடம் பிடிக்கும் சிறு
குழந்தைதான் ....!!!

அவள் வரவுக்காக

நானும் ஞானிதான்
அவள் வரவுக்காக தவம்
தினமும் இருக்கிறேன் ...!!!

அதுபோதும் எனக்கு ..?

நீ என்னை ஏமாற்றினானும் 
கவலைப்பட மாட்டேன் 
எனக்கும் ஒரு காதலி இருந்தால் 
என்று சந்தோச பாடுவேன் ...!!!
அதுபோதும் எனக்கு இறப்புவரை ...!!!

காதலை உன்னை தவிர

என்னிடம் ஒழிந்திருக்கும் 
காதலை உன்னை தவிர 
யாரும் கண்டுபிடிக்க முடியாது ....!!!

தெய்வம் நடந்து வருவதுபோல்

கோயிலில் இருந்து 
தெய்வம் நடந்து வருவதுபோல் 
இருக்கும் -நீயும் உன் அம்மாவும் 
வரும் போது ,,,,,!!!

பகலும் - இரவும்

உலகுக்குத்தான்
பகலும் - இரவும்
எனக்கு உன்
நினைவு பகல் ....
உன் கனவு இரவு ....!!!

அதிகம் -உயிரே

சுவாசமாக நான் விட்ட
மூச்சை விட -உன்னை 
நினைத்த நினைவுகளின் 
எண்ணிக்கை ....
அதிகம் -உயிரே

காதல் என்பது ...?

நீ என்னை வெறுக்கும் 
போது நான் என்னை 
வெறுக்கிறேன் ...!!! 
ஆனால் உன்னை அதிகம் 
நேசிக்கிறேன் ....!!! 

காதல் என்பது 
எதிர் செயல் தானோ ...?

எல்லாம் அவளுக்காக ....!!!

அவளை காதலிக்க 
முன் 
எதுவும் பிடிக்கவில்லை 
அவளை காதலித்த 
பின் 
எதுவும் பிடிக்காமலில்லை 
எல்லாம் அவளுக்காக ....!!!

கவிதை ...!!!

என் உயிர் எண்ணத்தை 
உயிராய் எழுதும் உயிரற்ற 
கருவி தான் 
பேனா ....!!! 

என் பரந்த மனதையும் 
தூய்மையான 
உள்ளத்தையும் காட்டும் 
கருவிதான் 
காகிதம் ....!!! 

நாம் 
வாழ்ந்த வாழ்க்கையையும் 
வாழப்போகும் வாழ்க்கையையும் 
சொல்வதுதான் கவிதை ...!!!

மறுபிறப்பெடுக்கிறேன் ...!!!

நீ என்னோடு பேசும் 
வரை இப்பிறப்பில் 
வாழ்கிறேன் ...!!! 
நீ என்னை 
விட்டு சென்றவுடன் 
மறுபிறப்பெடுக்கிறேன் ...!!!

தன்னம்பிக்-கை-யே

ஒயாமல் சோராமல்
உன்
இரு கைகளை பயன்
கொண்டு பயன்படுத்து ..!!!

நீயே
எதிர் பாராத - இருக்கைகள்
வந்து சேரும் ....!!!

உன்
கைகள் -இருக்கைகள்
நிலைக்கனும் என்றால்
தன்னம்பிக்-கை-யே
உன் மூலதனம் ....!!!

உன்னை சுற்றி நட்சத்திரமாக

நீ 
நிலவுதான் 
உன்னை சுற்றி 
நட்சத்திரமாக இருக்கிறேன்..!!! 

நீ 
மலர் தான் 
உன்னை தேடி 
வண்டாக வருகிறேன் ...!!! 

நீ 
உலக அழகி தான் 
உன்னை இத்தனை 
பெண்கள் பார்க்கிறார்களே ...!!

காதலைமட்டும் ஏன் தரவில்லை நீ ...?

காதலிக்க தூண்டியது நீ 
காதல் எண்ணத்தை 
விதைத்தது நீ 
காதல் பார்வை பார்த்தது நீ 
காதல் ஏக்கத்தை தந்ததது நீ 
காதலைமட்டும் 
ஏன் தரவில்லை நீ ...?

சுக்கு நூறாகிறது இதயம் ...!!!

ஒவ்வொருமுறையும் 
நீ என்னை பார்க்கும் போது 
கோவிலில்..... 
அடிக்கும் சிதறு தேங்காய் 
போல் சுக்கு நூறாகிறது இதயம் ...!!! 

ஒவ்வொரு முறையும் 
நீ என்னை கடக்கும் போது 
உன் அதிர்வை .... 
மின்னல் தாக்க இடிதாங்கி 
போல் ஆகிவிடுகிறது இதயம் ...!!! 

காதலாகி கசிந்து கண்ணீர் மல்க 
நிற்கிறேன் -நீயோ 
மௌன மொழியில் காதல் 
கீதம் பாடுகிறாய் - உன் 
இன்பராகம் என்னை 
மெய்சிலுக்க வைக்கிறது ...!!!

நட்புக்கும் நிலாதான் ....!!!

நட்பு என்னும் நிலாவே ...!!! 
தூரத்தில் இருந்தாலும் தெரிவாய் 
எங்கு சென்றாலும் என்னோடு வருவாய் 
வாழ்க்கை இருளும் போது ஒளிதருவாய் 
காதலுக்குதான் நிலாவா ...? 
நட்புக்கும் நிலாதான் ....!!!

நட்புக்கு இவை பொருட்டல்ல....!!!

மூச்சு துவாரத்துக்குள் 
காற்று அனுமதி பெற்றா 
வருகிறது ....? நட்பும் 
அப்படித்தான் அனுமதி 
இல்லாமல் தான் 
இதயத்தில் குடி கொள்ளும் ...!!! 

கண்கள் தானாக கண்ணீரை 
வெளியேற்றுவதில்லை...! 
அதேபோல் தான் நட்பும் 
காரணம் இல்லாமல் -உன்னை 
விட்டு விலகாது ...!!! 

காதல் .... 
காரணமில்லாததை ... 
கூட காரணமாக்கி விலகும் ...!!! 
வசதி ,அழகு ,அறிவு ,சாதி , 
மதம் ,இனம் ,மொழி 
என்பவற்றை காரணமாக்கி 
விலகும்...... 
நட்புக்கு இவை பொருட்டல்ல....!!!

-உன்னை விட்டு விலகாது ...!!!

மூச்சு துவாரத்துக்குள் 
காற்று அனுமதி பெற்றா 
வருகிறது ....? நட்பும் 
அப்படித்தான் அனுமதி 
இல்லாமல் தான் 
இதயத்தில் குடி கொள்ளும் ...!!! 

கண்கள் தானாக கண்ணீரை 
வெளியேற்றுவதில்லை...! 
அதேபோல் தான் நட்பும் 
காரணம் இல்லாமல் -உன்னை 
விட்டு விலகாது ...!!! 

காதல் .... 
காரணமில்லாததை ... 
கூட காரணமாக்கி விலகும் ...!!! 
வசதி ,அழகு ,அறிவு ,சாதி , 
மதம் ,இனம் ,மொழி 
என்பவற்றை காரணமாக்கி 
விலகும்...... 
நட்புக்கு இவை பொருட்டல்ல....!!!

நண்பா நான் உன் கைதி....

நண்பா 
நான் உன் கைதி.... 
தவறு செய்யும் போது 
என்னை திருத்து 
தண்டனையும் தா ....!!! 

நட்பில் 
மரணதண்டனையை 
விரும்பாதவன் 

தயவு செய்து ஆயுள் 
தண்டனையை குறைத்து 
விடாதே ....!!! 

காலமெல்லாம் நான் 
உன்கைதியாக வாழ 
விரும்புகிறேன் ....!!!

என் நண்பர்கள்தான் .....!!!

வாழ்க்கையில் நான் 
பல துன்பங்களை கடந்து 
வந்தபோது -துன்பங்கள் 
சுட்டெரிக்கும் சூரியனாக 
இருந்தன -அப்போதெல்லாம் 
நிழலாக இருந்தவை 
என் நண்பர்கள்தான் .....!!! 

இருக்க இடமின்றி 
உடுக்கடையின்றி 
தூங்க பாயின்றி 
உண்ண உணவின்றி 
இருந்த காலங்கள் எம் மக்கள் 
மத்தியில் அதிகம் அதிகம் 
அப்போதெல்லாம் உதவிய 
ஒரே கரம் அவனணனின் 
நட்புதான் ....!!! 

இன்றுவரை அந்த நட்பை 
மறக்கவில்லை -மீண்டும் 
அவர்களை பார்க்கவும் 
முடியவில்லை -யாருக்கு 
தெரியும் .... 
அவனின் நிலை .....??? 

ஊர் விட்டு ஊர்திரிவோம் 
நாடுவிட்டு நாடுதிரிவோம் 
நட்புள்ள இதயங்கள் எம்மை 
அகதி- என்று சொல்வதில் 
உடன் பிறப்புக்கள் என்றே 
அழைக்கின்றன - இதுதான் 
நாங்கள் விரும்பும் நட்புநாடு ....!!!

ஞானம் உள்ளிருக்கும்

உண்டியை சுருக்கு 
இறைவன் வருவார் 
என் பார்கள் ...!!! 

ஆசனம் செய் 
ஆண்டவன் வருவார் 
என்பார்கள் ....!!! 

ஆசையை நீக்கு 
ஆண்டவன் தெரிவார் 
என்பார்கள் ....!!! 

இத்தனையாலும் 
இறைவன் தெரிய 
மாட்டார்- நீ 
அறியவும் மாட்டாய் ...!!! 

ஞானம் பயிற்சியால் 
வருவத்தில்லை 
முயற்சியால் வருவது ...!!! 

ஞானத்தை தேடுகிறேன் 
என்றால் தவறு ..! 
தொலைந்த பொருள் 
தான் தேடப்படும் ....!!! 

ஞானம் உள்ளிருக்கும் 
பொருள் -உன் அறியாமை 
மறைத்து வைத்திருக்கிறது 
தேடாதே -கண்டுபிடி ....!!! 

முதல் உன்னிடம் காதல் வரட்டும் ....!!!

திரும்ப திரும்ப 
பார்க்கிறேன் -உன் 
நினைவு வரும் என்று 
நினைவு பூட்டு போட்டு 
விட்டது ....!!! 

நான் 
அருகில் இருந்து 
உன்னை அழைக்கிறேன் 
நீ 
எங்கேயோ பார்க்கிறாய் ...!!! 

நீ 
நினைத்தவுடன் 
வா என்கிறாய் ...!!! 
முதல் உன்னிடம் 
காதல் வரட்டும் ....!!! 

கஸல் ;459

காதலால் கொல்கிறாய் ....!!!

உயிர் கொடுத்து 
காதலித்தேன் -அதனால் 
தான் என் உயிர் 
போகிறது .....!!! 

காதலால் பிறந்ததே 
உயிர் ....!!! 
நீ 
காதலால் கொல்கிறாய் ....!!! 

நினைத்த உடன் 
அழுகை வந்தால் 
தூய அன்பு - இது 
கடவுளுக்குதான் 
பொருந்தும் .....!!! 

கஸல் 465

காதல் ஒரு புத்தகமில்லை

மீட்டு பார்ப்பதற்கு
காதல் ஒரு புத்தகமில்லை
நீயோ மீட்பது சந்தோசம்
என்கிறாய் ....!!!

பட்டறிந்து சொன்னான்
ஒருவன் காதல் வேண்டாம்
என்று - "பட்ட" அறிவான
எனக்கு படவில்லை ....!!!

காதலும் ஞானமும்
ஒருதான்
நினைக்க நினைக்க
இன்பம் -நீ
இரண்டுமற்றனிலை....!!!

கஸல் 464

விட்டுப்பார் சுடும் காதல் ....!!!

பொருள் சேர்த்தேன்...!!!
உண்மை பொருளான
உன் அன்பை சேர்க்காமல்
மயங்கிவிட்டேன் ....!!!

மாயைகள் நிறைந்த
வாழ்க்கையில் -நீ
மாய மான் -நான்
தவிக்கிறேன் ....!!!

தொட்டுப்பார் சுடும்
நெருப்பு ...!!!
விட்டுப்பார் சுடும்
காதல் ....!!!

கஸல் ;463

என் காதல் வீட்டில்

நிலாவை போல்
நீயும்
நிலையில்லாதவள் ....!!!

நான் சூரியன் எரிப்பேன்
ஆனால் நிலையானவன்
உன்னை
தவிர எண்ணமில்லை

என் காதல் வீட்டில்
குப்பையாக இரு
கூட்டி தள்ளி
விடமாட்டேன் ....!!!

கஸல் 462

எப்போது எப்படி வருவாய்

நீ எதை சொன்னாலும் 
தலையாட்டினேன் 
இப்போ தலை குனிந்து 
வாழ்கிறேன் ....!!! 

அடிக்கும் காற்றும் 
நீயும் ஒன்றுதான் 
எப்போது எப்படி வருவாய் 
என்று புரியவில்லை ....!!! 

வாடிய மலரில் 
நடுப்பகுதி உடன் 
வாடுவதில்லை -அதில் 
ஈரம் இருக்கும் உன்னிடம் 
ஏன் காய்ந்தது .....? 

கஸல் 461

அழுது பார் காதல் தெரியும் ....!!!

நன்றி சொல்வேன் உனக்கு 
துன்பத்தில் சிரிக்க 
பழக்கியதற்கு -உன்னால் 
ஞானியானேன்.....!!! 

காதலில் தற்கொலை 
என்பது முடிவல்ல ... 
பிறர் சொத்தை 
சேதமாக்கிய தேச(தேக) 
குற்றம் .....!!! 

சிரித்துப்பார் கடவுள் 
தெரியும் -அழுது பார் 
காதல் தெரியும் ....!!! 

கஸல் ;460

மனக்குப்பை ஆகிவிட்டாய் .....!!!

உலக வாழ்க்கையில் 
நான் ஒரு நடிகன் 
நீ பெரும் நடிகன் ....!!! 

நீ என் வீட்டு குப்பை 
ஆக இருந்தால் தூக்கி 
வீசியிருப்பேன் 
என் மனக்குப்பை 
ஆகிவிட்டாய் .....!!! 

கண்டவுடன் காதல் 
கண்ணீரில் முடியும் 
என்பதை -நம் காதலில் 
உணர்ந்தேன் .....!!! 

கஸல் 458

காதலில் அவசரப்பட்டு விட்டேன் .....!!!

பிறந்தவுடன் ஓடியவர் 
யார் உள்ளனர் ...? 
ஏன் காதலில் ஓடுகிறாய் ...? 

நெய் குடத்தில் 
விழுந்த தவளை போல் 
காதலில் அவசரப்பட்டு 
விட்டேன் .....!!! 

காதலில் கரை சேர்ந்தவரை 
விட கரைசேராதவர்கள் 
அடைந்த இன்பம் அதிகம் 

கஸல் 458

அன்றே புரிந்துவிட்டேன் ...!!!

கடல் அலை கரையின் 
மேல் காதல் கொள்ளும் 
நீ -கரையில் மட்டும் 
காதல் கொள்கிறாய் ...!!! 

நான் நடந்து வந்த 
பாதையை திரும்பி 
பார்க்கிறேன் முற்களாக 
இருக்கிறது ....!!! 

வாடிய பூவை காதலில் 
தந்தவள் -நீ 
அன்றே புரிந்துவிட்டேன் ...!!! 

கஸல் ;457

நீ காதலையே இருட்டாக்கி விட்டாய் ....!!!

சோகங்கள் பிறருக்கு 
கண்ணீர் -எனக்கு நீ 
தந்த பரிசு .....!!! 

இருட்டில் காதலி 
வந்தால் கூட 
தெரிவது தான் காதல் 
நீ காதலையே இருட்டாக்கி 
விட்டாய் ....!!! 

காதல் கடலில் இறங்கி 
விட்டேன் நீந்த தெரியவில்லை 
வா இருவரும் சேர்ந்தே 
மூழ்குவோம் ....!!! 

கஸல் 456

நீ காதலையே இருட்டாக்கி விட்டாய் ....!!!

சோகங்கள் பிறருக்கு 
கண்ணீர் -எனக்கு நீ 
தந்த பரிசு .....!!! 

இருட்டில் காதலி 
வந்தால் கூட 
தெரிவது தான் காதல் 
நீ காதலையே இருட்டாக்கி 
விட்டாய் ....!!! 

காதல் கடலில் இறங்கி 
விட்டேன் நீந்த தெரியவில்லை 
வா இருவரும் சேர்ந்தே 
மூழ்குவோம் ....!!! 

கஸல் 456

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...