Friday, September 13, 2013

நீ - உலகையே மாற்றலாம் ...

முடியாது என்று முடங்கி
கிடப்பவர்கள் -மனித வடிவில்
பிறந்த பூனை இனம் ...!!!

யார் சொன்னது தலை எழுத்து
கால் எழுத்து என்று ...
தலையெழுத்து- நீ -தினம்
செய்யும் தொழிலின் வரவுதான்
தலை எழுத்தை உழைப்பால்
மாற்று -நீ - உலகையே மாற்றலாம் ...

உருகாதநெய்யால் உபயோகம் இல்லை
எரியாத விளக்காலும் உபயோகம் இல்லை
உழைக்காத உன்னால் மட்டும் ஏது பயன்...?
மனிதபிறப்பின் சிறப்பு படைப்பு உழைப்பு ...!!!

மனிதனாக அவர்களை பார் ...

உடல் நாற்றம் மறைக்க
உள்ள வாசனையெல்லாம்
உடல் முழுக்க பூசி -உன்
உண்மை அழகை கெடுக்கும்
சுத்த வாங்களே....!!!
உன் வீட்டு கழிவு கிடங்கு
உடைந்து விட்டால் -உன்
மூக்கை நீயே பொற்றி...
வாந்தியும் எடுக்கிறாய் ...!!!

கழிவு அகற்றும் தொழிலாளியை
சற்று நினைத்துப்பார் -உன் கழிவை
தன் கழிவாக தன்னுடல் மேல்
சந்தனம் போல் பூசிவிட்டு வேலைசெய்யும்
சந்திர ஒளியனைபார் ....!!!

மனிதா உன்னிடம் நான் கேட்பது ...?
அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை
வார்த்தையால் -கொடு ...
மனிதனாக அவர்களை பார் ...
அடிமை தொழில் செய்யும் அடிமையாக
பார்க்காதே ...!!!

செய்த வேலைக்கு ஊதியத்தை ...
மனமகிழ கொடு ...!!!
முற்பிறப்பில் அவர்கள் செய்தபாவம்..
என்று -பொருத்தமற்ற ஆன்மீகத்தை
பேசும் ஞானவான்களே ...?
அவர்கள் அழிவை உடலில் சுமக்கிறார்கள்
நீ மனதில் சுமர்ந்து கொண்டே இருக்கிறாய் ...!!!

( கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு இக் கவிதை
சமர்ப்பணம் )

யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

அதிகாலையில் துயில் எழுந்து ...
தூரத்துபார்வை கூட தெரியாத பொழுதில் ...
தலையிலே ஒரு கம்பீர தலைப்பாகை ...
கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ...
தோளிலே மண்வெட்டி -உன் உழைப்பையே
காட்டும் விவசாய பாரதி -நீ
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

கொட்டும் மழையில் உடல்விறைக்க...
உழைப்பாய் - வாட்டும் வெயிலில் ...
குருதியே வியர்வையாய் வெளிவர ....
உழைப்பாய் - நட்டுநடு ராத்திரியில் ...
காவல் செய்யவும் புறப்படுவாய் ..
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

பட்ட விவசாய கடனை அடைக்க
பட்டையாய் உடல் கருகி ....
விற்று வந்த வருவாயை ..
கடனுக்கே கொடுத்துவிட்டு ...
அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!!!
அதுவரையும் காத்திருக்கும் -உன் துணிவு
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

உச்ச அறுவடை பொழுதினிலே ...
உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே ..
நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்...
பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான ....
விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் .....
அப்போதும் சிரித்தமுகத்துடன் ....
அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் .....
இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட.....
 யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

நச்சுபொருளுடன் நாளாந்தம் விளையாடுவாய் ...
இத்தனை துன்பம் வந்தாலும் நச்சு பொருளை....
உண்டு மடியாத -உன் மனதைரியம்...!!!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
காதலில் தோற்றால் நஞ்சு .....
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....
இத்தனை துன்பம் வந்தபோதும்.....
தன் கையில் நஞ்சை அருந்தாத......
விவசாய தோழனை - நான் உணவு தரும் ......
கண்கண்ட கடவுள் என்பேன் வணங்குவேன் ...!!!

( இந்த கவிதையை விவசாயிகளுக்கு சமர்பிக்கிறேன் )

காதலில் கனவு வரலாம்

தினமும் கனவில் காதலை
சொல்லும் நீ -எப்போ நியத்தில்
சொல்லப்போகிறாய் ...?

கனவில் வந்து கையசைக்கும்
உன் அழகை எப்போது
நியத்தில் பார்க்கப்போகிறேன் ...?

காதலில் கனவு வரலாம்
காதலே கனவாக வந்துவிட
கூடாது கண்ணே ...!!!

என் நிழலே நீதாண்டி ....!!!

நீ எங்கே என்னை
பிரிவது ...?
எல்லோருக்கும்
அவனும் நிழலும்
ஒன்று ....!!!
எனக்கு என் நிழலே
நீதாண்டி ....!!!

அழுது தொலைக்கிறேன்....!!!

பிரிய நினைக்கிறாய் பிரிந்து
விடு - உனக்கும்  சேர்த்து
இதுவரை காதலித்த நான்
உனக்கும் சேர்த்து  அழுது
தொலைக்கிறேன்....!!! 

என்னையே நான் வெறுத்துவிடுவேன் ...!!!

அன்பாக பார் ...!!!
ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
ஆக்கிரோசமாக பார் ...!!!
அப்பவும் ஆவலோடு
எதிர்பார்ப்பேன் .....!!!
என்னை கண்டுவிட்டு
தெரியாதவன் போல்
சென்று விடாதே ...?
என்னையே நான்
வெறுத்துவிடுவேன் ...!!!

என் மூச்சையும் கலந்துவிடு ...!!!

காற்றே எனக்கு உதவி செய்
என் காதலியின் மூச்சோடு
என் மூச்சையும் கலந்துவிடு ...!!!

கலந்த மூச்சே எனக்கு ஒரு
உதவிசெய் கலந்த அவள்
இதயத்தில் எங்கிருக்கிறேன்
என்று கண்டுபிடி ....!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...