Sunday, September 15, 2013

எப்போது புரிந்து கொள்வாய் ...?

உனக்கு என்ன வேண்டும்
உனக்கு என்ன வேண்டும்
என்று கேட்கும் உனக்கு
உனக்கு உன்னை வேண்டும்
என்று எப்போது புரிந்து கொள்வாய் ...?

அர்த்தத்தை தேடி ...!!!

நீ
தினமும் பார்க்கும்
பார்வைக்கு என்ன அர்த்தம்
என்பதை அறிய -அகராதியுடன்
அழைக்கிறேன் அர்த்தத்தை தேடி ...!!!
ஆயுள் காலத்தில் கண்டுபிடிப்பேன்
என்ற நம்பிக்கை கூட இழந்துவிட்டேன்

என் இதயமும் மெழுகுதிரி

என் இதயமும் மெழுகுதிரிதான்..
உன்னை நினைத்து உருகிக்கொண்டு
இருக்கிறதே ....!!!

உன்னோடு மட்டும் உன்னோடு

உன்னை பார்த்த நிமிடம் முதல்
குருடனாகி விட்டேன் - உன்னை
பார்ப்பத்தற்க்காகவே ....!!!

உன்னோடு பேசிய  நிமிடம் முதல்
ஊமையாகி விட்டேன் -உன்னோடு
பேசுவதற்காகவே ....!!!

உனக்காக அழுவதே -காதல் ....!!!

என்னை
நினைத்து -துடித்த
என் இதுயம் -உன்னை நினைத்து
துடிக்க முற்படுவதே காதல் ...!!!

எனக்காகவே அழுத்த கண்கள்
உனக்காக அழுவதே -காதல் ....!!!

அன்றும் -இன்றும் என் காதல்

உன் கண்களை பார்த்து -காதல்
வந்தது அன்று....!!!
உன் முகத்தை பார்த்து -அழுகை
வருகிறது இன்று ...!!!
விழிமேல் விழிவைத்திருந்தேன்
அன்று ....!!!
பழிமேல் பழியானது
இன்று ....!!!

நீ காதலை தரும் வரையும் ...?

நான் தரும் அன்பளிப்பை
அன்போடு பார்க்கும் போது
உன் அழகான காதல்
தெரிகிறது ...!!!
காதலில் எதை கொடுத்தாலும்
திருப்தியடையாது ...
நீ காதலை தரும் வரையும்
நான் காதலை பெறும் வரையும் ...!!!

காதல் இல்லை - வியாபாரம் ....!!!

என்னிடம் ஒன்றும் இல்லை
நீ எதை கேட்டாலும் தருவேன்
என்று சொல்ல கூட தகுதி இல்லை
காதல் மட்டுமே என்னில் இருக்கிறது
அதை கேட்க மாட்டேன் என்கிறாய்
எல்லாம் இருந்தால் வருவது
காதல் இல்லை - வியாபாரம் ....!!!

என் கண்ணே நீ தான் ...!!!

நியமாக சொல்கிறேன்
நீ கனவில் வரமாட்டாய்
நீ கனவு கன்னியல்ல
நிஜக்  காதலி ...!!!

நிச்சயமாக -நீ
என்னை கண்ணீர் விட
வைக்க மாட்டாய்
என் கண்ணே நீ தான் ...!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...