Monday, September 16, 2013

உன்னோடு அலைகிறேன்

திக்கு தெரியாத காட்டில்
உன்னோடு அலைகிறேன்
காதல் என்ற நோயால்

கடல் சமுத்திரத்தில்
கலக்கும் -நீ
குளத்தை கலக்க
சொல்கிறாய் ....!!!

அன்பு கயிற்றால்
என்னை கட்டுவாய்
என்றிருந்தேன் -இரும்பு
கயிற்றால் காட்டிவிட்டாய் ...!!!

கஸல் ;480

நீ மாறவில்லை ....!!!

கவிதைக்கு
பொய் அழகு
உனக்கும் அதுதான்
அழகு ....!!!

இருட்டில் பூத்த
மலரை கேட்கிறாய்
பகலில் பறிக்க சொல்கிறாய்

நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!

கஸல் 479

மனிதனானேன்

என்னை உனக்கு பிடிக்கும்
என் காதலை உனக்கு
பிடிக்கவில்லை ....!!!

காதலில் நாம்
நெருங்கி விட்டோம்
காதல் தான் பாவம்
அழப்போகிறது ....!!!

உன்னை சந்தித்தபின்
மனிதனானேன் -நீ
என்ன வாகினாய் ...?

கஸல் ;478

தூங்காமல் கனவு வரும்

உன்னால் தூக்கி
வீசப்பட்ட மலர் நான்
இன்னும் வாசமாக
இருக்கிறேன் ...!!!

தூங்காமல் கனவு
வரும் உன்னை
நினைத்தால் -இப்போ
தூங்கியும் வருவதில்லை

நூல் அறுந்த பட்டமும்
நானும் ஒன்றுதான்
ஒருதான் எங்கே விழுவது
என்று தெரியாமல் அலைகிறேன்

கஸல் 477

நீ தத்துவத்தை தந்துவிட்டாய் ....!!!

காதலில் நான் கடல் மீன்
நீ தொட்டி மீன் ....?
எப்படி
இணைவது இருவரும் ...?

உண்டியலில் காசை
சேமிப்பது போல் உன்
நினைவை சேர்த்தேன்
நீ உண்டியலையே
உடைத்து விட்டாய் ...!!!

காதல் தோல்வியில்
தத்தவம் வரும்
நீ தத்துவத்தை
தந்துவிட்டாய் ....!!!

கஸல் ;476

உன் மனதை ... கிழித்துப்பார்க்க ஆசை ...

சிற்பங்களை
வடிக்கும் சிற்பியே ...
உன் மனதை ...
கிழித்துப்பார்க்க ஆசை ...
பொன்முட்டையிடும்
வாத்து கதைபோல் ..
ஆகிவிடும் என் ஆசை ....!!!

எத்தனை எத்தனை
கற்பனைகள் ...
எத்தனை எத்தனை
நலினங்கள் ...
அத்தனையும் - உன் .
மனதில் வித்தையாய்
வடிக்கிறாய் -சிற்பியே ....!!!

நீ இல்லாத இடமேது ...?
கடவுளை கண்டேன் - உன்
கைவண்ணத்தில்
கடந்துசெல்லும் படியிலும்கண்டேன்
உன் கைவண்ணத்தை ...!!!.
தூக்கி செல்லும் வாகனத்தில் கண்டேன்
உன் கற்பனையை ....!!!

செதுக்குவது கல் அல்ல ...
நானும் நீயும் விரும்பும் உயிர் ...!!!
நீ
செதுக்கும் போது வருவது....
ஓசையல்ல...
உயிருக்கு உடல் ...!!!

(இந்த கவிதையை சிற்பாச்சாரியார்களுக்கு சமர்ப்பணம் )

நமக்கு எதுவோ அதையே பின்பற்றுவோம் ...!!!

நங்ககையரே ...மங்கையரே ...
விடலைகளே ...இளஞர்களே...
நாகரீகம் தேவை நாகரீகம் தேவை...
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ....
மீறாத நாகரீகம் தேவை ....!!!

தொப்பிளில் தோடு குற்றுவதும்.......
தொடைதெரிய ஆடை போடுவதும் .....
தொங்கி கிழியும் ஜாக்கட் அணிவதும்....
தொன்று தொட்டு வந்த கலாச்சாரமா ...?
நாகரீகம் என்ற போர்வையில் -நம்
கலாச்சாரத்தை ......
குழிதோண்டி புதைக்கிறோம் ...!!!

குற்றம் செய்பவனைவிட
குற்றத்தை தூண்டுபவன் -
பெரும் குற்றவாளி ...
காம வெறியன் கெட்டவன்.....
காமத்தை தூண்டுபவன்
கடும் குற்றவாளி....
சட்டத்தில்......
பெரும் குற்றவாளிக்கு தண்டனை
கடும் குற்றவாளியை
கண்டுகொள்வதில்லை....?

மேலத்தேய கலாச்சாரம்
மேலத்தேயத்துக்கு பொருந்தும்
கீழத்தேய கலாச்சாரம்
கீழத்தேயத்துக்கே பொருந்தும்
நமக்கு எதுவோ அதையே பின்பற்றுவோம் ...!!!

கே இனியவன் நல்வழி கவிதைகள்

குழந்தையை பெற்றால் மட்டும்
போதுமா ...?
பெற்று விடுவது என்ன உன்...
தொழிலா ...?
பெற்ற குழந்தையை பார்முழுதும்...
பொற்பிள்ளையாக மாற்றுவது ....
பெற்றோர் கடமையல்லவா ...?

பிஞ்சு குழந்தைமுன்...
புகைவிடும் அறிவிலியே ...
பிஞ்சு உடலில் நஞ்சை
வைக்கிறாய்....!!!
பிஞ்சு மனதில் நச்சு
செடியை வளர்க்கிறாய்...!!!
நாகரீக உலகில் இதுதான் நீ செய்யும்
நாகரீகமோ ....?

குடும்ப சண்டையை
குழந்தை முன் கொட்டாதீர்
குழந்தைகள் வாழ்வில் கொடூரத்தை
விதைக்காதீர்
பெற்றோர் என்ற திமிரில் பிள்ளைகளை
வதைக்காதீர் ...!!!
பெற்றோர் கதையை பிள்ளைகள் முன்
பேசாதீர் ....!!!
வருங்கால சிற்பங்களை சித்திரவதை
செய்யாதீர் ....!!!

இருகரம் கூப்பி கேட்கிறேன்
குழந்தை துன்புறுத்தலை
வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும்
செய்யாதீர் ,,செய்யாதீர் ...செய்யாதீர் ....!!!

நீயும் கல்லாக இருக்கிறாய் ....!!!

நீ தெய்வம் தான்
நான் எவ்வளவோ மன்றாடியும்
உன் கண் திறக்கப்படவில்லை
நிச்சயம் நீ தெய்வம் தான்
கல்லில் கடவுள் இருப்பார் என்பது
உன்னில் இருந்து உறுதியாகிறது
நீயும் கல்லாக இருக்கிறாய் ....!!!

உன்னிடம் தந்துவிட்டேன் ...!!!

நானும் உடல் தானம்
செய்தவன் தான்
காதலுக்காக இதயத்தை
தானம் செய்தேன்
கண்ணை தானம் செய்தேன்
உடலையும் தானம் செய்தேன்
நீ கேட்டால் உயிரையும்
தானம் செய்வேன் -ஆனால்
நீ கேட்கமாட்டாய் ...!!!
என் உயிர்தானே முதல் முதலில்
உன்னிடம் தந்துவிட்டேன் ...!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...