Tuesday, September 17, 2013

காதல் படத்தின் கவிதைகள் 05



காதல் என்றால் ஏக்கம் இருக்கணும் 
இப்போடியேல்லாம் கேள்விகள் 
இருக்கக்கூடாது ....!!!
கேள்வி கேட்டக்காதல் 
வென்றது இல்லை ...!!!
இரு இதயம் ஒரு இதயமாக 
பேசவேண்டும் ....!!!

காதல் படத்தின் கவிதைகள் 04



விடியபோகும் இரவு 
நாம் விடியலாக இருக்கட்டும் 
வரப்போகும் கனவு 
இனிமையாக இருக்கட்டும் 
பகலில் கழுகுகளின் கண்ணில் 
பாடுகிறோம் -இரவிலாவது 
சந்தோஷமாக சந்திப்போம்...!!!
*
*

போடா -இரவு ஆந்தைகளும் 
இருக்க தான் செய்கின்றன ....!!!

காதல் படத்தின் கவிதைகள் 03


இதுவறையும் என் 
இதயத்தில் இருந்த -நீ 
எதற்காக இதயத்தை விட்டு 
சென்றாய் ....?
உனக்கு 
எங்கே வலிக்கப்போகிறது 
இதயம் எனதல்லவா ...?

காதல் படத்தின் கவிதைகள் 02


நீ எதை தந்தாலும் அது 
காதல் தான் -பார்த்தாயா ..?
நீ தந்த காப்பியில் கூட 
இதயம் இருக்கிறது ...!!!
அன்போடு நீ விஷத்தை 
தந்தாலும் அதில் என் 
இதயம் இருக்கும் ....!!!

காதல் படத்தின் கவிதைகள்



உன்னை நான் ஏற்கத்தயார் 
என்னை நீ ஏற்றால் காதல் 
ஆகும் ...!!!
நீ மறுத்தால் ஒற்றை காதல் 
ஆகும் ...!!!
என் கையில் இருக்கும் 
ரோஜாவை 
உனக்கு தந்தால் காதல் 
நானே வைத்திருந்தால் 
ஒருதலைக்காதல் ...!!!

நகைசுவை கவிதை

வாத்தும் முட்டை போடுது
வாத்தியாரும் முட்டை போடுறார்
வாத்து முட்டை உடம்புக்கு தென்பு
வாத்தியார் முட்டை உடலுக்கு வம்பு
முட்ட போட்ட வாத்தியார்
முட்டியிலும் நிற்கவைப்பார் ...
வாத்து முட்டை சாப்பிட்டதால் ..
முஸ்தியாய் நிற்பேன் முட்டியில் ...!!!

யாருக்கு தெரியும் ...?

நீ
மென்மையானவள்
தடந்தால் பூமி அதிராது
என் இதயம் அதிர்வதை
யாரிடம் சொல்வேன் ...!!!
இயற்கை காற்றில்
சுவாசிப்பவர்கள் தானே
உலகில் உண்டு -நான்
உன் மூச்சு காற்றில்
சுவாசிப்பதை
யாருக்கு தெரியும் ...?

காதல் ஒரு முக்கோணம் ...

காதல் ஒரு முக்கோணம் ...
நீ
நான்
நம்பிக்கை

என்ற மூன்று
கோடுகளால் ஆனது ...!!!
ஒரு கொடு அசைந்தான்
முக்கோணம் பகரமாகும்
பகரமானால் குப்பை
தொட்டியாகும்....!!!
இதுதான் காதல் தோல்வியின்
திறவுகோல் ....!!!

நான் தாங்கி கொள்ளுகிறேன் ...

காதலில் நீ
கிழிந்த சட்டை ...
இருந்திட்டு -போ ....!!!

நான் ஊசி நூலாய்  
இருந்து தைத்து விடுகிறேன்
நீ தரும் வலிகள் என்  காதல்
சட்டையை கிழிக்கத்தான்
செய்கிறது ...!!!

என்றாலும் நான் தாங்கி
கொள்ளுகிறேன் ...
உன்னால் கிழியதை
தைக்கத்தெரியாது....!!!

எப்படி மாறியது காலாச்சாரம் ...?

உண்டது தன் ஊர்அரிசி
உடுத்தது தன் ஊர் புடவை
ஊசலாடியது தன் ஊர் காற்று
படித்தது தன் ஊர் ஆசானிடம்
பட்டம் பெற்றது தன் கல்லூரியில்

உழைப்பது வெளிநாட்டில்
உண்பது பீசா ஹட்
ஊர் சுற்றுவது பொழுது போக்கு
எப்படி மாறியது காலாச்சாரம் ...?
உலகமயம் உன்னை பாடாய்
படுத்துது .......!!!

கூட்டு குடும்ப சிதைவுதான்

அதிகாலை எழுந்து
அம்மாக்கள் படும் பாடு
அம்மாடியோ சொல்லமுடியாத
அத்தனை துன்பம் ...!!!

அவசர அவசரமாக
உணவு தயாரிப்பு -அதை
பொட்டலமாக கட்டும் அவசரம் ,,,,!!!
கட்டிய பொட்டலத்தையும்
பிள்ளையையும் அவசர அவசரமாய்
பஸ்ஸில் ஏற்றி பிள்ளை வளர்க்கும்
அம்மாக்கள் படும் பாடு அப்படியோ
சொல்லமுடியாத கதைதான்

என் இந்த அவலம் ...?
கூட்டு குடும்ப சிதைவுதான்
தனிக்கையாய் அவஸ்தை படுகிறது ....!!!

தலைவனின் எண்ணம் ...

வீட்டில் நின்றால் கோயில்
தலைவனின்(இறைவன்) எண்ணம் ...
கோயிலில் நின்றால்
வீட்டு தலைவனின் எண்ணம் ...
மனதை மையபுள்ளிக்கு
கொண்டுவருவதற்காகவே...
கோயில் செல்கிறோம் ...
கோயிலில் நின்றால் ...
வீடுதான் மையப்புள்ளி ...
ஞானதாகம் என்பது ...
நீ எப்போது ஞானத்தை ...
தொடங்குகிறாயோ ...
அன்றே முடிந்து விடும் ....!!!
அலையாதே ஞானம் அலைந்தால்
வராது -வந்தால் அலைய விடாது ...!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...