Tuesday, September 24, 2013

உடன் காதலிக்க்காதே

வந்த காதலை
விட்டு விடாதே
காதல் வரும் போது
உடன் காதலிக்க்காதே

அது என் ஆயுள் ரேகை

ஒரு வார்த்தை பேசு
அது எனக்கு தேசிய மொழி
ஒரு பார்வை பார்
அது எனக்கு ஞான ஒளி
ஒரு முறை என்னை நினை
அது என் ஆயுள் ரேகை 

நீ காதலின் கல்லறை

காதல் குயில் நீ
என நினைத்தேன்
ஆந்தையாய்
அழறுகிறாய் ....!!!

உன்னை பிரிந்தது
எனக்கு சந்தோசம்
தோல்வியை
காதலித்தேன் .....!!!

நீ காதலின் கல்லறை
நான் அதில் உள்ள
வாடாத மலர் .....!!!

கஸல் 495

காய்ந்து விழுந்த சருகு ....!!!

நிலாவை பார்த்து
காதலித்தேன்
நீயும் தூரே
சென்றுவிட்டாய் ....!!!

கனவில் வந்தாய்
திடுக்கிட்டேன்
முன் நிற்பாய்
என்று இருந்தேன்
ஏமாந்தேன் ....!!!

நான் தாவரத்தின்
ஆணிவேர் நீ
காய்ந்து விழுந்த சருகு ....!!!

கஸல் ;494

படாதபாடு படுகிறது ....!!!

ஆண்டவனிடமும்
காதலிடமும்
தப்பியவன் -யார் ..?
நான் தப்பி பிழைத்தவன்
காதலில் ....!!!

என் கவிதையின்
எண்ணங்களும் நீ
இயக்கமும் நீ
கவிதைதான்
படாதபாடு படுகிறது ....!!!

தூண்டிலில் மீன்
வரவேண்டும் -என்
தூண்டிலில் தேள்
வடிவில் நீ வருகிறாய் ....!!!

கஸல் 493

நான் காதல் கதவை மூடுகிறேன் ....!!!

உனக்கு வாழ்க்கை
கிடைக்கும் என்றால்
நான் காதல் கதவை
மூடுகிறேன் ....!!!

செலவழித்தேன்
உன் வலியை -சேமிப்பு
போல் பெருகுகிறது
துன்பம் ....!!!

என்
காதல் நிலுவையில்
என்றும் தீர்க்கப்படாத
கள்ள கணக்கு ....!!!

கஸல் ;492

உன்னிடம் அகப்பட்டேன் ...!!!

நாம் 
காதலிக்கிறோம் 
நம் கவிதை அழுகிறது ...!!!

நீ 
இதயக்கதவின் 
தொடக்கம் -நான் 
இறுதியில் இருந்து 
அழைக்கிறேன் ....!!!

மின்னில் மின் பூச்சி 
சிக்கியதுபோல் -நான் 
உன்னிடம் அகப்பட்டேன் ...!!!

கஸல் 491

இதயத்தில் நுழைந்தவளே

கண்ணால் வந்து
இதயத்தில் நுழைந்தவளே
தயவு செய்து
வெளியில் வந்துவிடு
உனக்கும் சேர்த்து சுவாசிக்க
முடியவில்லை ....!!!

வேற்று கிரக வாசிகள்

வேற்று கிரக வாசிகள்
இருக்கிறார்களா ....?
என்பது சந்தேகம் தான்
உன்னை பார்த்தபின்
இருக்காலாமோ என்ற
எண்ணம் வருகிறது
அத்தனை அழகு நீ 

நான் படும் வலி .....!!!

ஒருநாள் ஒருமுறை
நீ நானாக மாறவேண்டும்
அப்போது தெரியும்
நான் படும் வலி .....!!!

செத்தாண்டி அவன் ....!!!

தூண்டிலில் தப்பிய மீன்
உண்டு -ஆனால்
உன் கண்ணில் தப்பிய
ஆண் இருக்கமுடியாது
செத்தாண்டி அவன் ....!!!

காதல் மோதிரம் தானே ....!!!

எல்லா காதலருக்கும்
உள்ள பொதுவான ஏக்கம்
உன் அளவு என்ன ...?
வித்தியாசமாக
நினைத்து விடாதே
உன் மோதிர விரல்
அளவு என்ன ...?
காதலின் அன்பு பரிசு
காதல் மோதிரம் தானே ....!!!

என்றேங்கும் என் மனம் ...!!!

தெருவோரம் நீ வருகையில்
என்னை நீ பார்க்கமாட்டாயா
என்றேங்கும் என் மனம் ...!!!

பேரூந்தில் பயணம் செய்கையில்
என்னும் நீளாத பயணம் ...
என்றேங்கும் என் மனம் ...!!!

நீ  பேசும் பேசும் போது
நிமிடங்கள் ஓடாமல்
நிற்காதா
என்றேங்கும் என் மனம் ...!!!

இப்படி வாழ்ந்தால் வெற்றிதான் ...!!!

அதிகாலையில் துயில் எழுந்து
அகமுகத்துடன் ஆரம்பித்தால்
அகத்தில் ஆண்டவன் குடியிருப்பான்

ஆலயம் செல்ல தேவையில்லை
ஆலயமாக வீட்டை நோக்கினால்
ஆனந்தம் பெருகும் வாழ்வில்

இல்லறம் என்பது என்றும்
இன்பமாய் வாழ்வதற்கே
இதை உணர்ந்தால் உனக்கு வெற்றி

ஈசன் பாதம் நினைத்திடு
ஈகை பண்பை வளர்த்திடு
ஈரேழு ஜென்மமும் இன்பமே

உண்டியை அளவோடு உண்
உழைப்பையும் அளவோடு செய்
உயிராற்றல் வழுவாய் பெருகும்

ஊர் வம்பு பேசாமல்
ஊன் உண்பதை தவிர்த்தால்
ஊர் போற்றும் அரசன் நீ

எறும்பு போல் உழைத்திடு
எடுத்தெறிந்து பேசாதே
என்றும் இனிமையாக வாழ்வாய்

ஏர்பிடித்தவன் இறைவன்
ஏகாந்தம் பேசியே காலத்தை கழிக்காதே
ஏன் பிறந்தோம் என்று நினைக்காதே

ஐம்பொறியை  அடக்கு
ஐம் பூதங்களை மதி
ஐயம் இன்றி வாழ்வாய்

ஒற்றுமையோடு உறவாடு
ஒன்று பட்டு உழைத்திடு
ஒரு நாள் நீ அரசன்

ஓர்மம் கொண்டு உழைத்திடு
ஓதுவதை தொடர்ந்திடு
ஓர் இனமே வாழ்ந்திடு

ஔவை சொன்னதை கேள்
ஔடதம் இன்றி வாழ்ந்திருவாய்
அஃதே நீடூடி வாழ்வாய் .....!!!
  

உனக்கு நன்றிகள் ....!!!

உனக்கு ஒரு திமிர்
நீ சொல்லி நான்
புகைப்பதை நிறுத்தி விட்டேன்
என்று ....!!!
உண்மைதான் -அதற்காக
நான் தலையாட்டும்
பொம்மையாகிவிடமாட்டேன்
என் கெட்ட பழக்கத்தை
நீக்கிய உனக்கு நன்றிகள் ....!!!

(கதை கதையாய் கவிதையாய்) 

கோபமாக நடிக்கிறாய்

நீ கோபித்துக்கொண்டு
ஒவ்வொருமுறையும்
கைபேசியை நிறுத்தும்
போதே புரிந்து கொள்ளவேன்
நீ வேண்டுமென்றே
அடம்பிடிக்கிறாய்
கோபமாக நடிக்கிறாய்
உண்மையில் கோபமாக
இருந்தால் முற்றாக கைபேசியை
நிறுத்தியிருப்பாய் ....!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...