Thursday, October 3, 2013

வயிற்றில் உயிரை .....!!!

விஞ்ஞானம் உயிரை
உருவாக்கிறது
இளம் பெண் கொல்லுகிறாள்
வயிற்றில் உயிரை .....!!!
உன் உயிரை எடுத்தே
தீருவேன் என்கிறான் எதிரி
உயிரை காப்பாற்ற அவன்
ஆலயத்தில் .....!!!
பிஞ்சுகளுக்கு நஞ்சை
கொடுத்தாள் -உயிர்
கொடுத்த விதவை தாய்

உயிரே என்று ....?

காதலின் பொது சொல் 
உனக்கு பொழுது போக்கு சொல் 
உயிரே ......!!!

வாழ்க்கையில் இணைந்தால் 
இன்பம் தரும் உயிர் 
உன்னை பிரிந்தால் 
என்னை விட்டு போகும் 
உயிர் .....!!!

உயிருக்கு உத்தரவாதம் 
இதுவரை கொடுக்கவில்லை 
நீ எப்படி சொல்வாய் என் 
உயிரே என்று ....?

உயிரே நீ என்னை

உயிரே 
நீ என்னை 
பார்த்தபோது பெற்றோர் 
தந்த உயிரின்  உணர்வை 
உணர்ந்தேன் 

உயிரே 
நீ என்னை விட்டு 
பிரிந்த போது என் 
உடலில் இருந்து உயிர் 
பிரிந்த வலியை உணர்தேன்

உன் உயிரை நீ கேட்டாலும்

என்னவள் ....!!!
காதலை 
நிச்சயம் ஏற்பாள் -அவளை 
உயிராய் காதலிக்கிறேன் 
உயிரின் உன்னதத்தை 
உணராதவள் பெண் அல்ல ..!!!

உயிரை  தந்தவள் தாய் 
உயிராக மாறுபவள் தான் காதலி 
உயிரின் உன்னதத்தை உணராதவள் 
பெண்ணல்ல ...!!!

அவள் அழுதாள் என்கண் 
கலங்குகிறது 
அவள் சிரித்தாள் என் உதடு 
விரிகிறது -அவள் 
உயிர் என்னிடம் 
இருப்பதால் ....!!!

உயிராக உன்னுடன் 
வாழ்கிறேன் -அங்கு 
எப்படி நான் வாழ்ந்தாலும் 
கவலையில்லை ....!!!

உயிரே  என்று நீ 
அழைக்கும் நாள் 
வெகு தூரத்தில் இல்லை 
உன் உயிரை நீ கேட்டாலும் 
நான் தரப்போவதில்லை ...!!!

உயிர் உயிர் உயிர்

உயிர் உயிர் உயிர்
மூன்றெழுத்து தான்
இந்த உலகம்

வாழுவது மட்டும் தான்
உயிரல்ல  -நீ
செய்யும் செயல்
உனக்கு உயிர் ....!!!

கடவுளுக்கு நீ
உயிர்
அம்மாவுக்கு நீ
உயிர் ...
காதலிக்கு நீ
உயிர் ....
அன்புடையோருக்கு நீ
உயிர் ....

தனக்குள் உள்ள உயிர்
தன்னுயிர் ...
பிறர் உன்மீதும்
நீ பிறர் மீதும் வைக்கும்
உயிர் -இறை உயிர் ....!!!

உயிர்வரை இனிக்கும்..


உனக்காக காத்திருக்கும் 
நான் ஒரு உயிர்..
ஒரு உயிரை துடிக்க 
துடிக்க சித்திரவதை செய்வது 
உச்ச கட்ட பாவம் 
ஒரு உயிர் 
உனக்காக வாழ
காத்திருக்கும்
அந்த உயிரை 
உள்ளத்தில் வைத்துப்பார்...
காத்திருப்பின் சுகமும்
காதலின் உன்னதமும் 
உயிர்வரை இனிக்கும்..

எதிரியாகிறான் ....!!!

எப்போதும் எவருக்கும்
பிரதான எதிரி
நாக்கு தான்
புதியதை நுகர்ந்து
நுகர்ந்து நோயாளி ஆகிறான்
பேசக்கூடாத வார்த்தைகளால்
எதிரியாகிறான் ....!!!

உங்கள் பேச்சு எப்போது ...?

உங்கள் பேச்சு எப்போது
தோற்று போகிறது தெரியுமா ...?
சரியான நேரத்தில்
சரியான இடத்தில்
சரியான நபருக்கு போசாமையே ...!!!

அனாதை ஆக்கியது நீ

காதலில் அநாதை ஆனேன்
அனாதை ஆக்கியது நீ

நீ காந்த கண்
அதனால் தான்
துருப்பிடித்த என்னை
கூட கவர்ந்திருக்கிறாய் ...!!!

என் காதலின்
ஒவ்வொரு படியும்
நீ - படியென்றால்
படிப்படியாக இறங்க
வேண்டும் -நீ குதிக்க
சொல்கிறாயே ....!!!

கஸல் 515

நீ எங்கே போனாய் ....?

உனக்கு கவிதை
எழுதினேன் -எழுத்து
கருவி அழுகிறது
காகிதம் பறக்கிறது ...!!!

நாள் பட்ட காதல்
உறுதியானது -உன்னால்
நான் காதலில் பட்டு விட்டேன் ...!!!

குழந்தை முதுகில்
புத்தக்பை போல் என்
இதயத்தில் உன்னை
சுமக்கிறேன் - நீ எங்கே
போனாய் ....?

கஸல் 514

நீ தான் மருத்துவர் ...!!!

மழை வெள்ளத்தில் 
காணாமல் போன 
சிறு கல் போல் -என் 
காதல் ஆகிவிட்டது ....!!!

காதல் சுமைதான் 
அதற்காக என்னை 
கழுதை ஆக்கி விடாதே ...!!!

எல்லோருக்கும் காதல் 
வரும் எனக்கு காதல் நோய் 
நீ தான் மருத்துவர் ...!!!

கஸல் 513

ஏன் உனக்கு புரியவில்லை ...?

நினைத்து பார்க்கவே
பயமாக இருக்கிறது
உன்னோடு வாழ்ந்த
காதல் காலத்தை ....!!!

ஓடும் மணிக்கூட்டில்
உன்னை சுற்றும் நிமிட
கம்பி நான் -நீயோ
ஓடாத மணிக்கூடு ....!!!

அழைத்தால்
அணைத்தால்
காதல் இன்பம்
ஏன் உனக்கு புரியவில்லை ...?

கஸல் 512

நீ எப்படி ...? மறைந்தாய் ,....???

நீ காதல்
அணையாத விளக்கு
நான் அனைத்தேன்
அணைந்து விட்டாய்....!!!

ஒற்றையடி பாதைபோல்
ஒற்றைகாதல் ஆக்கிவிட்டாய்
நம் காதலை ....!!!

துணியில் படிந்த கறை
வெளுத்தாலும்
போகாது -என் இதயத்தில்
படிந்த கறை நீ எப்படி ...?
மறைந்தாய் ,....???


கஸல் 511

மனம் என்பது குப்பை

கடல் நீரில் இருந்துதான்
நல்ல மழைநீர் கிடைப்பது போல்
மனம் என்பது குப்பை -என்றாலும்
அதற்குள்ளேயே முத்தும் உள்ளது....!!!

ஆயுளை கூட்டு ....!!!

அழகிய பூக்களை கொண்டு
மாலை கட்டுவது போல்
உன் சிரிப்பை கொண்டும்
ஆயுளை கூட்டு ....!!!

ஒளி கொண்ட மனம்

உன் ஒளி கொண்ட மனம்
பிறரை புண்படுத்தும் போது
இருண்டு விடுகிறது


கே இனியவன் -சிந்தனை வரிகள் 

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...