Saturday, October 5, 2013

காதல் இறைவன் இருக்கும் இடம்

காதலிப்பதே இல்லை
என்று இருந்த என்
கொள்கையை
பொய்ப்பித்தாய் .....!!!

நீ
முன்னர் வந்தால்
இதயம் சந்தோசப்படும்
இப்போ மறைந்து
விடுகிறது ....!!!

காதல் இறைவன்
இருக்கும் இடம்
நீ ஏன் கோயிலுக்கு
செல்கிறாய் ....?

கஸல் 520 

நீ பிரிந்து விட்டாய்

நீயே
காதல் தீயை
மூட்டி-ஏன்
இப்போ அணைக்க
துடிக்கிறாய் .....!!!

நிலையாக இருந்தால்
தானே வெற்றி
நீ ஓடித்திரிகிறாய்
இது காதலுக்கு முரண்

நீ பிரிந்து விட்டாய்
என்று நினைனைக்கிறாய்
நான் நீ எப்போ என்னை விட்டு
பிரிந்தாய் என்று கேட்கிறேன் ....!!!

கஸல் 519

கண்ணீர் வருகிறது ....!!!

வா காதல்
மர்மத்தை காண்போம்
என்கிறேன் -நீ
என்னை காதலிக்கவே
இல்லை என்கிறாய் ....!!!

உன் கண்ணை பார்த்து
கவிதை எழுதினேன்
இப்போதும் எழுதுகிறேன்
கண்ணீர் வருகிறது ....!!!

காதலில் அதிகம்
அக்கறை காட்டினேன்
காதல் விரோதியாகி
விட்டேன் .....!!!

கஸல் 518

நிழல் கூட வரவில்லை ....!!!

உனக்காக காத்திருந்தேன்
நீ வருவாய் என்றிருந்தேன்
நிழல் கூட வரவில்லை ....!!!

என் கண்ணில் வரும்
கண்ணீரில் -நீ
கப்பல் விட்டு
விளையாடுகிறாய் .....!!!

நீ -என்னை
காற்றாடியாக தான்
பார்க்கிறாய் -உனக்கு
வியர்க்கும் போது
என்னை பயன்
படுத்துகிறாய் ..........!!!

கஸல் 517

சிவப்பு கொடியோடு நிற்கிறாய் ....!!!

காதலில் நான் பச்சை
கொடி அசைக்கிறேன்
நீ சிவப்பு கொடியோடு
நிற்கிறாய் ....!!!

அருகில் நின்று  இருவரும்
கைபிடிப்பது தான் காதல்
நீ எதிரில் நின்று -கை
தருகிறாய் ......!!!

மூச்சு காற்றில் உன்
பெயர் வந்தது -இப்போ
நினைவில் கூட
வருகிறாய் இல்லை ....!!!

கஸல் 516

திருக்குறளும் காதல் கவிதையும்..02

பண்டு அறியேன் கூற்றுஎன் பதனை இனி அறிந்தேன் 
பெண்தகையால் பேரமர்க் கட்டு. (1083)

கண்ணழகியே.....!!!
கட்டழகியே......!!! 
உன் கண் போர்வாள் 
உன் பார்வை பாசக்கயிறு ...
எமனை கண்டறியேன் 
கேட்டறிந்தேன் ...!!!
இப்போ கண்டுவிட்டேன் 
கண்ணே - உன் கண் 
பட்ட பார்வையில் ....!!!

திருக்குறளும் காதல் கவிதையும்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர் கொல் மாலும்என் நெஞ்சு 
                        குறள் -1081தங்கத்துக்கு ஒப்பானவளே ...
ஆடும் மயிலுக்கு நிகரானவளே...
நீ எனக்காக படைக்க பட்டவளா ..?
பூவுலகில் அவதரித்தவளா ...?
நீ யார் என்று அறியாமல் ...
சித்தம் கலைந்து பித்தன் 
ஆனேனடி -கண்ணே...!!!
ஒருமுறை செவ்வாய் 
மலர்ந்திடுவாயோ....???

ஒருவரி கவிதைகள்

"உன்னை பற்றி ஒருவரியல்ல ஆயிரம்வரி எழுதலாம்"
*********************************************************************************
"இதயத்தை திருடியவர் திருடர் அல்ல காதலர் "
*******************************************************************************
"காதல் வந்தபின் தான் வாழநம்பிக்கை வைத்தேன் "
******************************************************************************
" கண்களின் தானம் தான் காதல் "
*******************************************************************************
"உன்னை சுற்றி வருவதே என் கிரகதோஷ நிவர்த்தி"
******************************************************************************
" காதல் இல்லாத இதயம் துடித்து என்ன பயன் "
*****************************************************************************
" போதும் நீ பார்த்தது காதலை தா "

ஒருவரி கவிதைகள்

அன்பு வாசகர்களே ...
உங்களின் தனிப்பட்ட மடல்கள் பல தேவைகளுக்காக
கவிதை கேட்டீர்கள் .என்னால் முடிந்த அளவுக்கு
எழுதி வருகிறேன் ...தற்போது ஒருவரி கவிதை சில தருகிறேன்
sms
ஆட்டோ கிராவ்
கணணி திரையில் போடுவதற்கு
கேட்டிருந்தீர்கள்
இதோ சில ஒருவரி கவிதை ...இருவரி கவிதை ..
வரும் படியுங்கள் .... நன்றி நன்றி
*****************************************

"என் இதய சூரியன் நீ தினமும் வணங்குகிறேன் "
****************************************
"இதயம் துடிப்பதே உனக்காகத்தான்"
****************************************
"உன்னை கண்டால் முதலில் துள்ளுவது இதயம் "
****************************************
"உன் கண் மீன் என்றால் நான் தூண்டில் "
****************************************
"இதயத்தின் முதல் தொழில் உன்னை நினைப்பது"
****************************************
"நீ உதட்டுக்கு மைதீட்ட நான் இறந்து போகிறேன்"
****************************************
"நீ கற்கண்டு என்று உப்பை தந்தாலும் உண்பேன் "
****************************************
" நீ சூனியக்காரி காதல் சூனியம் செய்து விட்டாய் "
****************************************
" கொத்தும் கிளி நீ நான் எப்படி கொத்துவது "
***************************************
" இதயத்துக்குள் வந்தவுடன் இதய அறையை மூடு "

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...