Saturday, October 26, 2013

மனமுடைந்து நிற்கிறது பட்ட மரம்

எனது 
இலைகள் எங்கே போயின ...?
எனது 
கிளைகள் ஏன் முறிந்தன ...?
பட்டுப்போன 
மரத்தின்  ஏக்கக்கேள்விகள்
எட்டிப்பார்பார் யாரும் இல்லாமல் 
மனமுடைந்து 
நிற்கிறது பட்ட மரம் நான்  ....!!!

காதலுடன் 
என் கிளையில் கொஞ்சி 
குழாவிய இளம் பறவைகளின் 
கொஞ்சல் சத்தத்தை கேட்பதை 
இழந்தேன் .........!!!

வாட்டும் வெயிலில் 
நடை தளர்ந்து வரும் போது 
நிழலுக்காக வந்து பேசும் 
மனிதர்களின் இன்பபேச்சை 
கேட்பதை இழந்தேன் .....!!!

ஊஞ்சலலாடி விளையாடும் 
சின்ன சின்ன முத்துக்களின் 
செல்லமான சண்டையையும் 
ஓலமிட்டு அழும் சத்தத்தையும் 
கேட்பதையும் இழந்தேன் ....!!!

காதலர்கள் மரத்தடியில் 
ஊடல் செய்து உறவாடும் 
அழகை என் கள்ள கண்ணால் 
பார்க்கும் இன்பத்தை இழந்தேன் ...!!!

பட்டுப்போன 
என் உடலில் இப்போ
புழுக்களும் வண்டுகளும் 
அரித்துக்கொண்டிருக்க 
போதாததற்கு குறைக்கு 
மரங்கொத்தி வந்து வெந்த புண்ணில் 
வேல் பாய்வதுபோல் கொத்துகிறது ...!!!

அதோ 
வருகிறது என் பாசக்கயிறு 
கோடரி என்ற சாவுகாவி 
ஏய் கோடரியே -கவனி 
நீ இருப்பது என் கடந்த கால
கிளையின் பகுதியில் -நீயும் 
நன்றி கெட்டவனா ...?
என்னை அழிக்க என்னையே 
பயன்படுத்துகிறாய் .....!!!

(மரம் மனிதனின் உற்ற நண்பண் -பதிப்போம் 
வளர்ப்போம் )கொடுக்கும் நட்பு ....!!!

எனக்கு வேண்டியதை
நான் விரும்பும் போது
எதிர்பாராமல் கொடுக்கும்
நட்பு ....!!!

தனக்கு வேண்டியதை
என்நிலையை பொறுத்து
தீர்மானிக்கும்
நட்பு .....!!!

தனக்காக இருந்த ஒன்றையும்
சற்றும் ஜோசிக்காமல் தரும்
நட்பு ....!!!

ஹைக்கூ கவிதை

பிள்ளையாருக்கு பால் அபிசேகம்
ஏக்கத்துடன் பார்க்கிறாள்
- பால் வற்றிய தாய் -
**********************

மயங்கியது கண் தானே ....!!!

என்
இதயத்துக்கு உன்னை
பார்க்கும் சக்தி இருந்திருந்தால்
அன்றே
உன்னை வெறுத்திருக்கும்
என்
கண்ணை நானே குத்தவேண்டும்
உன்னை
கண்டு மயங்கியது
கண் தானே ....!!!

நானாகத்தான் இருக்க முடியும் ....!!!

கண் பட்டு காயப்பட்ட
முதல் மனிதன் நானாக
தான் இருக்கமுடியும் ...
உன் புன்னகையின்
வெளிச்சத்தில் புகைப்படம்
எடுக்கப்பட்டவனும்
நானாகத்தான்
இருக்க முடியும் ....!!!

உன் நினைவோடு இடறி விழுந்தேன்

உனக்காக காத்திருக்கிறேன்
வானம் இருண்டுவிட்டது
கவலைப்படாதே -மனம்
இருளவில்லை .....!!!

எத்தனையோ சாலைகளில்
இத்தனை வயது வரை
விபத்தில் சிக்கவில்லை
உன்னிடம் சிக்கிவிட்டேன் ....!!!

உன் நினைவோடு இடறி
விழுந்தேன் - என் இதயம்
அழுகிறது -உன் இதயத்தை
காப்பாற்றி விட்டேன் .....!!!

கஸல் ;546

ஓடமுடியாத எங்களை வாழவிடுங்கள்....!!!
காலம் காலமாய்
ஆமை முயல் கதை
ஆமையின் பொறுமை
விடா முயற்சி வெற்றிக்கு
எடுத்துக்காட்டு ....!
இந்த இடத்தைதவிர எம்மை
கவனிப்பார் யாருமில்லை ....!!!

சதைகளால் சூழப்பட்டு
வாழும் வீட்டையே
சுமந்து செல்லும் உங்களைபோல்
வீடின்றி வாழமுடியத உயிர் நாங்கள்
மனிதா உன்னை வீடு சுமக்கிறது
நாங்கள் வீட்டை சுமக்கிறோம் ....!!!

உங்களிப்போல் நாமும்
உண்கிறோம் உறங்குகிறோம்
உறவாடுகிறோம் - என்ன ..?
உங்களை கண்டால்
ஒழித்துக்கொள்கிறோம்-ஆனால்
எங்களைப்போல் உங்கள் யாராலும்
ஒழிக்கமுடியாது -எங்களுக்குள்  
நாங்களே ஒழித்து கொள்வோம் ....!!!

நாங்கள்  உங்களுக்கு என்ன செய்தோம் ...?
நஞ்சை கக்கும் பாம்புபோல் கடித்தோமா ...?
இரத்தம் உருஞ்சும் அட்டைபோல்
உறிஞ்சினோமா..? -இல்லையே ...?
எங்களின் பலவீனம் மற்றைய
ஜந்துகளைப்போல் துள்ளிக்குதித்து
ஒடமாட்டோம் -எங்களுக்குள்
ஒழித்துக்கொள்வோம் -அது
உங்களுக்கு வசதியாகி விட்டதோ ...?

ஞானிகளை கேட்டுப்பார்
ஐம் புலங்களையும் அடக்கும்
திறன் எமக்கு மட்டும் தான் உண்டு
அந்த சிறப்பால் தான் நாம் கூர்ம அவதாரம்
பெற்றோம் - ஞானிகளுக்கு நாங்கள் குரு
உங்களை கண்டவுடன்
நாங்கள் ஐம் புலங்களையும் அடக்குகிறோம்
அப்படிஎன்றால் மனிதா நீ எங்களுக்கு
ஞான குருவா ...? இருந்து விட்டு போங்கள்
அதுதான் எங்களுக்கும் விருப்பம் ...!!!

வேடிக்கை என்ன தெரியுமா ...?
கூர்ம அவதாரம் என்று எம்மை
கைகூப்பி வணங்குவதும் நீங்கள் தான்
கூரிய ஆயுதங்களால் எம்மை குத்துவதும்
நீங்கள் தான் - உங்களை கண்டு ஓடமுடியாத
எங்களை வாழவிடுங்கள்

*****************************************************

( உலகில் ஆமைகள் பலவழிகளில் கொல்லப்படுகிறது -அதனை தடுக்க வேண்டும்
என்ற விழிப்புணர்வு கவிதைதான் என் எண்ணம் )

ஆறுதல் சொல்ல நீ எங்கே...?

வெள்ளை மனமாக இருந்த
என்னை வான் வில்லாக
மாற்றினாய் சந்தோசப்பட்டேன்
நிலைக்க வில்லை சந்தோசம்

வானவில்லில் அம்பை
சொறுவியவள் நீ

பலர் அழும்போது
ஆறுதல் சொன்ன நீ
இப்போ நான் அழுகிறேன்
ஆறுதல் சொல்ல நீ எங்கே...?

வலியை துடைப்பாய் ....!!!

என் இதயத்தை உன்னிடம்
தந்துவிட்டேன்
விளையாட்டுப்பொருளாகவும்
இதய வீட்டுப்போருளாகவும்
பாவிப்பது உன்னை பொறுத்தது

காதல் எதிர் பார்ப்பற்ற
இதயங்களின் இணைப்பு
இறைவனின் பிணைப்பு
நீ விளையாட்டு பொருளாக
பயன் படுத்தினால் வலியை
தருவாய் .....

இதயவீட்டு பொருளாக
பயன்படுத்தினால் -வலியை
துடைப்பாய் ....!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...