Tuesday, October 29, 2013

எனக்கு தான் சொந்தம் ,,,,!!!

ஏய் மரங்களே ...
என்னவள் உங்கள் அருகில்
வரும் போது நீங்கள்
சுவாசிக்க கூடாது
அவள் வெளி சுவாசம் கூட
எனக்கு தான் சொந்தம் ,,,,!!!

சிரித்து பழகுங்கள்

ஏய் பூக்களே
உங்களுக்கு பூக்கத்தான்
தெரியுமோ ...?
சிரிக்கத்தெரியாதோ ...?
என்னவள் உங்கள்
முன் சிரிக்கும் போது
சிரித்து பழகுங்கள் 

காத்துக்கொண்டிருந்தேன்

உன்னை கண் வெட்டாது
பார்த்துகொண்டிருந்தேன்
என்பது தவறு -கண்ணே
நீ என்னை பார்ப்பாயா -என்று
காத்துக்கொண்டிருந்தேன் 

தாங்கமாட்டேன்

கண்ணால் அடிக்காதே
பெண்ணே -என் புற
இமைகள் -உன் அக
கண்ணிடம் புகார்
செய்கின்றன -நான்
தாங்கமாட்டேன் என்று ....!!!

அதுவும் சரிதானே ....!!!

இதயத்தில் ஆயிரம்
எண்ணங்கள் தோன்றும்
காதல் ஒருவரில் தான்
தோன்றும் ....!!!
நீ ஏன் அதை மறுக்கிறாய்
ஓ நீயும்  ஆயிரம்
பேரை பார்த்து ஒருவரை
தீர்மானிக்க போகிறாயா ...?
அதுவும் சரிதானே ....!!!

மனமுடைந்து நிற்கிறது பட்ட மரம்

எனது 
இலைகள் எங்கே போயின ...?
எனது 
கிளைகள் ஏன் முறிந்தன ...?
பட்டுப்போன 
மரத்தின் ஏக்கக்கேள்விகள்
எட்டிப்பார்பார் யாரும் இல்லாமல் 
மனமுடைந்து 
நிற்கிறது பட்ட மரம் நான் ....!!!

காதலுடன் 
என் கிளையில் கொஞ்சி 
குழாவிய இளம் பறவைகளின் 
கொஞ்சல் சத்தத்தை கேட்பதை 
இழந்தேன் .........!!!

வாட்டும் வெயிலில் 
நடை தளர்ந்து வரும் போது 
நிழலுக்காக வந்து பேசும் 
மனிதர்களின் இன்பபேச்சை 
கேட்பதை இழந்தேன் .....!!!

ஊஞ்சலலாடி விளையாடும் 
சின்ன சின்ன முத்துக்களின் 
செல்லமான சண்டையையும் 
ஓலமிட்டு அழும் சத்தத்தையும் 
கேட்பதையும் இழந்தேன் ....!!!

காதலர்கள் மரத்தடியில் 
ஊடல் செய்து உறவாடும் 
அழகை என் கள்ள கண்ணால் 
பார்க்கும் இன்பத்தை இழந்தேன் ...!!!

பட்டுப்போன 
என் உடலில் இப்போ
புழுக்களும் வண்டுகளும் 
அரித்துக்கொண்டிருக்க 
போதாததற்கு குறைக்கு 
மரங்கொத்தி வந்து வெந்த புண்ணில் 
வேல் பாய்வதுபோல் கொத்துகிறது ...!!!

அதோ 
வருகிறது என் பாசக்கயிறு 
கோடரி என்ற சாவுகாவி 
ஏய் கோடரியே -கவனி 
நீ இருப்பது என் கடந்த கால
கிளையின் பகுதியில் -நீயும் 
நன்றி கெட்டவனா ...?
என்னை அழிக்க என்னையே 
பயன்படுத்துகிறாய் .....!!!

(மரம் மனிதனின் உற்ற நண்பண் -பதிப்போம் 
வளர்ப்போம் )

நான் கண்ட பார்த்த சாரதி

வாழ்க்கையின் பயணத்துக்கு
இறைவன் பார்த்த சாரதி
சாரதியாய் இருக்கிறார்
என்பது அவரவர் நம்பிக்கை ...!!!

நாளாந்த பிழைப்புக்காய்
நாம் பயணிக்கும் வாகன சாரதி
கண்கண்ட சாரதி ...
இயந்திரத்தின் வெப்பத்தை
தன் அடியில் தாங்கி
வீதியோரம் வரும் தூசியை
விரும்பாமல் கண்ணில் வாங்கி
முறையற்ற முறையில் வீதியில்
பயணிக்கும் பயணிகளின்
துன்பத்தை தன் இதயத்தில்  
ஏற்று -எம் பயணம் வரை
எம் உயிரை பாதுகாக்கும்
வாகன சாரதிதான் -நான்
கண்ட பார்த்த சாரதி

சிறுவயதில் பேசிவைத்த திருமணம்

சிறுவயதில் பேசிவைத்த
பெருவயது திருமணம்
பருவவயதுவரை -பள்ளி
தோழிகளின் கிண்டலும்
கேலியும் சின்ன இன்பத்தை
தந்ததது  மறுப்பதத்கில்லை

கல்லூரி வயதில்
கண்ணில் பட்டான் -காளை
ஒருவன் -கண்மூடி திறக்கமுன்
காதல் விதை வந்துவிட்டதும்
உண்மைதான் -என்றாலும்
உறவுகளின் எதிர்பார்ப்பு
பெற்றவர்களின் நம்பிக்கை
காதல் விதைக்கு சுடுநீர்
ஊற்றி விட்டேன் .....!!!

திருமணம் முடிந்தது
குழந்தைகள் பிறந்தன
இன்பமான குடும்பவாழ்க்கை
அமைதியாக ஓடுகிறது ....
என் பிள்ளைக்கு முறைமாமன்
எனக்குப்போல் முறைகேட்டு
சிறுவயதில் பேசிவைக்க -பேச்சை
ஆரம்பித்தார் - வைத்து விட்டேன்
முற்றுப்புள்ளி .....!!!

பெற்றோரே உறவுகளே ...
சிறுவயதில் பேசிவைக்கும்
திருமண முறையை தயவு
செய்து நிறுத்திவைப்போம் ...!!!
உறவுகள் பிரியக்கூடாது
உடமைகள் பிரியக்கூடாது
என்பதற்காக உறவுத்திருமணம்
வேண்டாம் -அது
உளத்துக்கும் உடலுக்கும் கேடு
சொல்லுகிறது விஞ்ஞானம் ,,.....!!!
**********************************************************
(மீண்டும் மீண்டும் உறவுக்குள் திருமணம் செய்தால் குழந்தைகளின்
பல ஆற்றல்கள் மழுங்கும் என்று விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது )

வாழ்க்கை கவிதை 

ஓடுகின்ற பேரூந்திலே

ஓடுகின்ற பேரூந்திலே
ஓடி ஓடி ஏறினாய் ....!!!
ஊட்டி வளர்த்த தாயை
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை
நினைத்தாயா...?
ஈரேழு வயதுவரை
பலவகை கனவுடன்
சுமர்ந்திருந்த -உறவுகளை
நினைத்தாயா ....?
ஈரேழு நிமிடத்தில்
இழந்து விட்டோம்
அத்தனையையும் மகனே ....!!!

                                         சமுதாயகவிதை
www.iniyavankavithai.blogspot.com

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...