Saturday, November 2, 2013

வாழ்க்கைக்கு வளம் காதல்

உனக்காக நான்
காத்திருப்பேன்
நேரம் காத்திருக்குமா..?
உன்னைப்போல் அதுவும்
ஓடுகிறது ....!!!

உன்னை சுவாமியாக
கண்டேன் -இப்போது
சாமியாராக போலி
வார்த்தை கூறுகிறாய்

வாழ்க்கைக்கு வளம்
காதல் -அதை வாள்
ஆக்கிவிட்டாய் -நீ

கஸல் 560

கல்லறை வாசகங்களாக ..?

காதலித்த பின் நான்
துடித்து கொண்டு
இருக்கிறேன் - நீ
சாதாரணமாக இருக்கிறாய்

என் முத்தங்களை
தந்துவிடு நினைவுகளை
வைத்துக்கொள் ....!!!

உனக்காக எழுதிய
கவிதை எல்லாம்
கல்லறை வாசகங்களாக
மாறி வருகின்றன ....!!!

கஸல் 559

காதல் வானவில்லை

காதலின் தோல்வியின்
அடையாள சின்னத்தை
தந்து விட்டாய் -நன்றி
என் கண்ணுக்கும் புரியும்

நீ காதல் சூரியனா ..?
காதல் சூரிய ஒளியா ..?
புரியாமல் தவிர்க்கிறேன்
வார்த்தை சுடுகிறது

காதல் வானவில்லை
கடலில்
வரைய சொல்லுகிறாய்
மிக விரைவாக அழிப்பதற்காக

கஸல் 558

வாட வைக்கிறாயே ...!!!

காற்று மூச்சு விடத்தான்
அவசியம் -நீ காற்றை
பேச்சுக்கு பயன்படுத்துகிறாய்

மழை காலத்தில் வரும்
வண்டுகள் போல்
அப்பாப்போ வந்து போகிறாய்
என் காதல் அழுகிறது

வெயிலில் பூ வாடலாம்
காதல் மரத்தை வாட
வைக்கிறாயே ...!!!

கஸல் ;557

காதலில் துன்பமும் வாழ்க்கைதான்

உன்னை நானும்
என்னை நீயும்
கைது செய்துவிட்டோம்
காதல் ஆயுள் கைதி

காதல் இன்பம் மட்டும்
வாழ்க்கையில்லை
காதலில் துன்பமும்
வாழ்க்கைதான்

நான்
காதல் கண்ணாடியால்
உன்னை ரசிக்கிறேன் -நீ
கல் எறிந்து கண்ணாடியை
உடைக்கிறாய் ....!!!

கஸல் 556

ஹைக்கூ 05

பத்தும் பலதாய் வரும்
பத்திரமாத தங்கம்
-பத்திரிக்கை -

ஹைக்கூ 04

ஆரோக்கியனுக்கு சங்கடம்
நோயாளிக்கு அன்பளிப்பு
--மரணம்--

ஹைக்கூ 03

வடிந்தால் அழகு
பாய்ந்தால் பயம்
--நீர் --

ஹைக்கூ 02

பலத்தாலும் மேன்மை
குணத்தாலும் மேன்மை
--யானை --

ஹைக்கூக்கள்

இனிக்கும் நீரையும் (அன்பு ) தரும்
வெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும்
---தென்னை --

ஒருவரி நட்புவரி -05

இதயத்தில் இருந்தால் காதல் இதயமாக இருப்பது நட்பு 

ஒருவரி நட்புவரி -04

தடையில்லாமல் வரும் தடுத்தாலும் வரும் -நட்பு 

ஒருவரி நட்புவரி -03

நட்பு சூரியனுமில்லை சந்திரனுமில்லை வானம் 

ஒருவரி நட்புவரி -02

நடப்பு நேரத்தில் உதவுவதால் தான் நட்பு என்கிறோம் 

ஒருவரி நட்புவரி -01

நண்பா கர்ணனாக இருக்கவேண்டியதில்லை
கருணையோடு இருந்தால் போதும் 

ஒரு வரி SMS கவிதை 10

நீ அதன் பின் பிரிந்தாய் எந்த இரவும் சிரிக்கவில்லை 

ஒரு வரி SMS கவிதை 09

என்னிடம் நீ இருக்கும் போது நான் எங்கே ...?

ஒரு வரி SMS கவிதை 08

காதலின் வானவில் நீ பலகுணம் காட்டுகிறாய் 

ஒரு வரி SMS கவிதை 07

நீ சுடர் அழகாகவும் ஆபத்தாகவும் இருக்கிறாய் 

ஒரு வரி SMS கவிதை 06

நீ நிழல் விலகுகிறாயுமில்லை பேசுகுறாயுமில்லை 

ஒரு வரி SMS கவிதை 05

நீ சொல்லாவிட்டால் என்ன உன் முகம் சொல்லுகிறதே என்னை பிடிக்கவில்லை என்று 

ஒரு வரி SMS கவிதை 04

காதல் கதவை திறக்கமுடியாமல் தொலைந்த சாவி நீ 

ஒரு வரி SMS கவிதை 03

என் பாழடைந்த நெஞ்சில் நீ ஆவியாகவாது இரு 

ஒருவரி sms கவிதை-02

அவள் முடிக்கும் இடத்தில் நான் காதலை தொடர்கிறேன் 

ஒருவரி sms கவிதை

அவள் அழகில்லை ஆனால் அழவைப்பாள் 

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...