Monday, November 4, 2013

காதல் இன்றேல் ...?

உன்னுடன்
பேசும் போது....
என் தாய்மொழியின் ....
இன்பம் தெரிகிறது .....!!!
எடுத்த வார்த்தைகளை
உன்னையும்
காதலையும்
வர்ணிக்கும் போதுதான்
காதலில் ஆழமும் -என்
தாய் தமிழின் ஆழமும்
எல்லை யற்றிருப்பதை
உணர்ந்தேன் கண்ணே 

உள்ளம் கவர்ந்த கள்வனே 03

என்ன துணிவடா உனக்கு
பெண் கேட்டு வீட்டுக்கு
வரப்போகிறேன் என்று
அடம்பிடிக்கிறாய் ...!!!

பெண் கேட்டு வரமுதல்
என்னை புரிந்து கொள்
காதல் உடனடியாக
நிறைவேறினால்
இன்பமில்லை -வாடா

சிலநாட்கள் காரணமே
இல்லாமல் சண்டையிடுவோம்
வேண்டுமென்றே கோபிப்போம்
காதலில் ஊடல் இல்லாவிட்டால்
இரண்டு சடப்பொருள்
காதலிப்பதுபோல் ஆகிவிடும்

உள்ளம் கவர்ந்த கள்வனே 02

என்னை திருடியிருந்தால்
போனால் போகட்டும்
என்று விட்டிருப்பேனடா
உள்ளம் கவர்கள்வனே
இதயத்தை மட்டுமல்லா
திருடிவிடாய் - உயிர்
உன்னிடம் வெறும்
உடல் என்னிடம் இருந்து
என்ன பயனடா ....?
வந்து விடு என்னை
கொண்டு செல் -இல்லையேல்
என் இதயத்தை தந்துவிடு ....!!!  

உள்ளம் கவர்ந்த கள்வனே

நீ
அழகாக ஆணழகன்
என்
இதயத்தை உடைத்தவன்
அரும்பிய மீசையில்
காந்த கண்ணில்
என்னை தூண்டில்
போட்டவன் - நீ
பருவத்தில் வரும் காதலில்
மயங்கிடாமல்
பக்குவத்தால் காதல்
வசப்படுத்துபவன்.....!!!

எனக்கு பிடித்தவை - நெடுங்கவிதை

உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில்
நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!

கண்ணை ஏமாற்றும் பூப்பிறப்பு ..
விழிகளை கவரும் பூப்படைப்பு ...
சிரிக்கும் அமாவாசை நட்சத்திரம் ...
தூக்கில் தொங்கும் இலை நுனிமழைதுளி ..
ஓசையில்லாத காட்டில் குயில் ஓசை ...
இடம் பெயர்ந்து வரும் உதிர்ந்த இலைகள் ..
புது ஓவியம் படைக்கும் மரக்கிளைகள் ..
உணர்வை தூண்டும் செவ்வானம் ...
உருவம் மாறிய உறைபனி ...
உருகி காதலிக்கும் நீரும் மண்ணும் ...
உண்ண மறக்கும் வேரும் மரமும் ...
வெயில் கால மழை ...!!!

ஓடை ஓரத்தில் முளைத்த காளான் ..
ஒற்றையில் வாழும் ஒருவழி மண்பாதை ..
ஒருநாள் வாழும் உயிரிணம் ..
ஓசை எழுப்பாத இரவு வானம் ...
ஓட்டை வீட்டில் ஒழுகும் மழைநீர் ...
வான் கண்ணீர் மயிலாட்டம் ..
மழைநேர சுடும் தேநீர் ..
கண்களில் விழும் ஒற்றை மழைத்துளி ..
போர்வையை தேடும் குளிர் காலம் ...
மாயம் காட்டும் கடல் பெரு அலை ....
தலையில் விழும் முதல் மழைத்துளி

உரசிப்போகும் ஊடல் காற்று ....
விழிகை ஓயவைக்கும் இளங்காற்று ...
இன்னுமொருமுறை தூங்கா சொல்லும்
கருமேக வான் ....
ஒற்றைப்பாதை சைக்கிள் ஓட்டம் ..
உறங்கும்போது மெல்லிய பாடல் ...
தடக்கி விழுந்து சிரிக்கும் கனவு ...
கனவால் எழுந்து முழிக்கும் முழி ...
நவரத்தினத்தையும் தோற்கவைக்கும்
குழந்தை சிரிப்பு ...

ஒற்றை கிளை மரங்கள் ..
நிஜம் தேடும் உள்ளங்கள் ..
உதடுகள் விரியாத சிரிப்பு ...
ஒற்றைத்துளி கண்ணீர் ..
அலட்டல் இல்லாத அரட்டை ...
அசட்டை இல்லாத சேட்டை ...
அச்சம் இல்லாத அடிதடி ..
சலனம் இல்லாத உள்ளம் ...
சொர்க்கம் தோற்கும் தாய் மடி ..
அறிவுறை சொல்லும் தந்தை ...
சொல்லாமல் எற்படும் வலிகள் ....

சோகம் தணிக்கும் தோழன் தோள்கள் ...
கண்ணீர் துடைக்கும் தோழியின் விரல்கள் ...
நானாக கோபம் தணிக்கும் தருணம் ...
தனியாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...
வியப்பாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...
வியப்பை ஏற்படுத்தும் வெற்றிகள் ....
சற்றும் எதிர் பாராத இழப்புக்கள் ....
விட்டுக்கொடுத்த தோல்விகள் ....
விடை தெரிந்தும் எழுதாத வினாக்கள் ...

சோகத்தில் சிரிக்கும் உதடு ...
கண்ணீரில் மறையும் கண்கள் ...
விரும்பி ஏற்ற காயங்கள் .......
துன்ப நேர தனி சிறை ...
அளவில்லாத இயற்கை கற்பனை ....
மற்றவர் விரும்பும் சிறு சாகசங்கள் ....
மழைத்துளி வெட்டும் விரல்கள் .....
என்னை வெறுப்பவர்கள் ...
எதிர்பார்த்து நிற்கும் அடுத்த நிகழ்வு ...
ஏடறிவு தந்த ஆசிரியர் ..
குளிர் கால சூரிய உதயம் ..
வெயில் கால சந்திரா உதயம் ..
புற்கள் அணிந்த மலைசாயல் ...
மின்சாரம் இல்லாமல் ஒளிரும் விண்மீண்கள் ...!!!

இருட்டில் ஓட்டை வழி சூரிய ஒளி ...
நதியில் வருகைதரும் இலைப்பயணம் ...
வர்ணம் சேர்க்கும் வண்ணாத்தி பூச்சி ...
காலையில் பனித்துளி நனைந்த தாமரை ...
நறுமணம் வீசும் மல்லிகை ...
முற்கள் நிறைந்த ரோஜா ...!!!
கூட்டாக உணவு உண்ணும் தேனீ கூட்டம் ...!!!
உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!

எண்ணை தரும் சூரிய காந்தி ...
எண்ணிடும் நிமிடங்கள...
என்னை தோற்கவைக்கும் வர்ணங்கள் ..
எங்கும் பரவும் இயற்கை இசை ...

சத்தமற்ற ரயில் பயணம் ...
நெரிசல் நேர வேகவாகனப்பயணம்....
நெகிழ வைக்கும் திறப்படங்கள் ...
ஆயுளை கூடும் நகை சுவை ...
சிலிக்க வைக்கும் பாடல்கள் ...
விழி விருந்துதரும் நடனங்கள் ...

ஓடும் நீரில் காகித கப்பல் ..
வீசும் காற்றில் பறக்கும் பட்டம் ...
நான்கு சுவருக்குள் விளையாடும்
துடுப்பாட்டம் ...
கண் மயக்கும் காவியங்கள் ...
காதல் கூறும் கதைகள் ..
கண்கள் சொல்லும் கவிதை ...
உணர்வை உருக்கும் ஓவியம் ...
என்னை ரசிக்கும் நான் ....!!!

காதல் இன்றேல் ...? தொடர் கவிதை

அழகான
வார்த்தைகளை
சேர்த்து
வைத்திருக்கிறேன்
கவிதைகளால்
மாலை இட....!!!

உன் அழகுக்கு
எந்த வார்த்தையும்
அகராதியிலும்
அர்த்தம்  இல்லை

உன் நினைக்கின்ற
போதெல்லாம்
உன்னை பார்க்கின்ற
போதெல்லாம்

நீ மட்டுமல்ல என் முன்
எது நின்றாலும்
எல்லாம் நீயே
காட்சிப்பொருளாய் ...!!!

தொடரும்.... காதல் வரிகள்


தேனே உனக்காக தானே

ஒருமுறை உன்னை பார்த்-தேன் 
பலமுறை என்னை மறந்-தேன் 
தினமும் உன்னிடம் வந்-தேன்
உன்னிடம் காதல் புரிந்-தேன் 
உன் காதலை நான் சுவாசித்-தேன்
இன்பதுன்பத்தை பகிர்ந்-தேன்
நீ தந்த வலியை சுமர்ந்-தேன் 
நீ மதிக்காதபோதும் வந்திருந்-தேன் 
உன்னிடம் வாழ்க்கையை படித்-தேன் 
உன் நிராகரிப்பை புரிந்-தேன்
உன் நன்மைக்காக பிரிந்-தேன்

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...