Wednesday, January 29, 2014

காதல் வானில் பறப்போம்

உருவத்தால் வேறுபாடு
நிறத்தால் வேறுபாடு
எண்ணத்தால் வேறுபாடு
இருந்தாலும் காதல்
வேறுபடகூடாது....!!!
ஒருபக்கமாக இருந்து
பயனேது வா அன்பே
காதல் வானில் பறப்போம்
----------
எல்லாம் உனக்காத்தான் அன்பே 05

ஆயிரம் கண் கொண்டவள் -நீ

உயிரே - நீ
திடீரென என்னை பார்த்த
பார்வையில் விபத்துக்குள்
சிக்கி அவசர சிகிச்சையில்
இருக்கும் நோயாளி
போல் ஆகிவிட்டேன் ...!!!
குற்றுயிரும் குறை உயிருமாய்
இருக்கும் என்னை ஒருமுறை
மீண்டும் பார்த்து விடு
என்னை உயிர்ப்பித்துவிடு ...!!!
-------------

எல்லாம் உனக்குத்தான் அன்பே -03

உன் கண் மின்சாரத்தில் ...!!!

ஒற்றை கண்ணால் பார்த்ததில்
நான் பித்தன் ஆனேன் -இரட்டை
கண்ணால் பார்த்திருந்தால்
செத்தே போயிருப்பேன்
உன் கண் மின்சாரத்தில் ...!!!
இப்போ நான் ஒரு தலையாக
காதலிக்கலாம் -நிச்சயம்
நீ என்னை இரட்டை கண்ணால்
பார்ப்பாய் ....!!!

எல்லாம் உனக்கு தான் அன்பே

நீ காதலித்தாலும்
நீ காதலிக்கா விட்டாலும்
எனக்கு ஒன்றும் கவலையில்லை
என் உயிர் உள்ளவரை உன்னை
காதலிப்பேன் -இதயம் முழுக்க
நிறைந்திருக்கும் -நீ
உயிராய் துடிக்கிறாய்
என் மூச்சு நிற்கும் போது
என் காதல் நிற்கும் -இந்த
கவிதை எல்லாம் உனக்கு தான்
அன்பே - என் கவிதைகள் உன்னை
காயப்படுத்த கூடாது
என் இதயம் காயப்படட்டும் ...!!!

************************
குறிப்பு ; ஒருதலையாய் காதலிக்கும்
இதயங்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ..!!!
தொடரும் இந்த வலிகள் ............................

ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்

சமுதாயத்தில் வலு இழந்தோருக்கு
சமூக கண்ணோட்டத்துடன் பார்
சமூக பொறுப்பு நம்முடையது
சமூகத்தின் கூட்டு வாழ்க்கையில்
சரி சமனாய் வாழ்வது நம் கடமை ...!!!

இரங்கி கேட்பவர்களுக்கு -நீ
இரக்கத்துடன் பிச்சை போடாதே
யாருக்கு யார் பிச்சை போடுவது ..?
எல்லோரும் ஒருவகையில்
பிச்சை காரரே ....!!!

அனாதை இல்லத்தில் வாழும்
குழந்தைக்கு தாய் அன்பு பிச்சையே
முதியோர் இல்லத்தில் வாழும்
பெற்றோருக்கு பிள்ளை அன்பும்
பிச்சையே
உயிர் நட்பு பிரிந்தால் -நட்பும்
ஒருவகையில் பிச்சையே ...!!!

கண் இழந்தோர் .கால் இழந்தோர்
பிற அங்கவீனர் கூட உழைத்து வாழும்
இவ் உலகில் -நல்ல உடழுளைப்பும்
திடகார்த்தமான வலுவும் உள்ள நீ
பிச்சை எடுக்கிறாய் .....!!!

நீ பிச்சை எடுக்க தகுதியானவன்
பொருளாதார பிச்சை -அல்ல
தன்னம்பிக்கை பிச்சை -நிமிர்ந்து
நில் துணிந்து செல் - உடம்பை வருத்து
நீயும் ஒரு சாதனையாளனே
இரங்கி கேட்டவுடன் பிச்சை போடாதீர்
ஒரு சாதனையாளனை வீணாக்காதீர் 

நமக்கே காலம் மலரும்

பருவமடைந்த காலம் முதல்
பக்குவமாய் உன்னை
காதலிக்கிறேன்
பக்கத்தில் நீ வரும் போது
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
இதயம்....!!!

பயம் ஒரு பக்கம் ஆசை
ஒரு பக்கம் படாத பாடு
படுகிறது -மனசு
பட்டுப்புழுவாய் துடிக்கிறது
மனசு ....!!!

பண்பாக வாழவிரும்பும்
காதலை பெற்றோர்
பண்புடன்  ஏற்றுக்கொள்வர்
பொறுத்திரு அன்பே
நமக்கே காலம் மலரும் 

தூண்டில் போட்டு என்னை

தூரத்தில் நின்றே சிரித்தவளே
தூக்கத்தை என்னிடம் பறித்தவளே
தூண்டில் போட்டு என்னை கொள்கிறாய் ...!!!

தவுடு பொடியாக்கி விட்டது

காலமெல்லாம் காத்து வைத்திருந்தேன் 
காதலிப்பதே இல்லை என்ற இறுமாப்பை 
உன் கடைக்கண் பார்வை தவுடு பொடியாக்கி விட்டது 

காதலித்து பார் ....!!!

தூக்கத்தை வரவழைக்க
தூக்க மாத்திரை போடு
தூக்கத்தை தொலைக்க
காதலித்து பார் ....!!!

காய் தான் கிடைத்தது

காத்திருந்தால் காதல் கனியும் என்றார்கள்
காத்திருந்தேன் - காய் தான் கிடைத்தது
தாய் சொல்லை கேட்டுவிட்டாள்...!!!

நான் தந்தையானபின் உணர்கிறேன் ...!!!

என் தோளில் சுமை வந்த போது
உணர்ந்தேன் தந்தையே -என்
குடும்பத்தில் நீங்கள்  சுமந்த சுமையை
தனி மனிதனாய் உழைத்து -ஒரு
வேளை சாப்பாட்டுக்கு நீங்கள் சுமந்த
சுமையையும் பட்ட பாட்டையும்
நான் தந்தையானபின்  உணர்ந்தேன் ....!!!

அடிப்படை ஆதாரம் எதுவுமின்றி
ஆதரவு கொடுக்கும் உறவுகள் இருந்தும்
உதவ வராத உறவுகளும் ...
விழுந்தால் தூக்கி விட கரமும் இன்றி
எம்மை யாரும் விழுத்தி விட கூடாது
சொந்தகாலில் நிற்க கற்று தந்த தந்தையே
நான் தந்தையானபின் உணர்கிறேன் ...!!!

வசதி கொண்டவன் வாசல் மிதியாதே
சிறு வசதி செய்துவிட்டு உன்னை
அடிமையாக்கி விடுவான் ....!
உழைத்து உண்ணாத நண்பன் வேண்டாம்
உன்னை அவன் சோம்பேறி ஆக்கிடுவான் ...!
தலை குனிந்து பேசாதே -உன்
தன்மானத்தை இழக்காதே...!
இவற்றின் பலனை உணர்கிறேன்
நான் தந்தையானபின் உணர்கிறேன் ...!!!

தோல் சுருங்கி தலை நரைத்து
வீட்டில் என்னுடன் இருந்த போதும்
இறுமாப்பும் நெஞ்சு வைராக்கியமும்
சுருங்கவும் இல்லை நரைக்கவும் இல்லை
கணவன் மனையியின் வாழ்க்கையும்
எப்படி வாழவேண்டும் என்பதை
கற்று தந்து விட்டு கடவுளான தந்தையே
நீங்கள் எனக்கு பெரியார் தான் ...!!!

காதலால் காதல் செய்

காதல் ஒரு ஏக்க காற்று அடுத்து என்ன என்ன ..? என்று ஏங்க வைக்கும் உயிர் துடிப்பு இந்த நிலையில்
அவள் / அவன் திடீரென பார்த்தால் ...?

" உன் கண்ணும் என் கண்ணும் "
" பட்டு தெறித்த போது காதல் மின்னல் "
"பொறி பறந்தது -நீ என்னை பார்த்தாய் "
" நான் பறந்தேன் "

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...