Thursday, April 3, 2014

அதுதான் எங்கள் காதல் ...!!!

நான்
ஆவலுடன் அவளுடன்
பேசி  கொண்டிருந்தேன்
கைபேசி செயல்
இழந்துவிட்டதை
அவதானிக்காமல் ...!!!

என்றாலும் அவள்
அடுத்த நாள் சொன்னால்
நான் பேசியதை ...
அதுதான் எங்கள் காதல் ...!!!

தப்பாக நினைத்து விட்டேன்

நான்
தப்பாக நினைத்து விட்டேன்
காற்றடித்த போது கண்
சிமிட்டினாய் -நான்
காதலாக நினைத்து விட்டேன் ...!!!

காதலி வேண்டும்...!!!

எனக்கு
ஒரு காதலி வேண்டும்...!!!
என்னை விட அன்பு செலுத்த ...
என்னோடு ஆசையாய் பேச ...
இன்பத்தில் பங்கு கொண்டது
போல் துன்பத்தில் அதிகம்
பங்குபற்ற .....!!!

என் இளமையை மட்டும்
விரும்பாமல் முதுமையிலும்
காதல் செய்ய ....
இரவு துணைக்கு
மட்டும் இல்லாமல் ...
இறுதி மூச்சுவரை
தொடரும் காதலி தேவை ...!!!

காதல் நரம்பு துடிக்கிறது ....!!!

என் கவிதை
வெறும் கிறுக்கல்
தான்  - நானும் ஒரு கிறுக்கன்
உன்னை கண்டபடி
கிறுக்குகிறேன்
கவிதையின் ஒவ்வொரு
வரியிலும்
நமது காதல் நரம்பு
துடிக்கிறது ....!!!

ரசிக்கிறாய் ....!!!

தேன்
என்னும் மை கொண்டு
காகிதம்
என்னும் பூக்கொண்டு
எண்ணம்
என்னும் வரிகொண்டு
கவிதை
எழுதுவதால் தான்
நீ
என் கவிதையை இப்படி
ரசிக்கிறாய் ....!!!

உன்னை அதிகம் நினைப்பதற்கு ....!!!

ஒன்றை
நினைவில் வை
அன்பே.....!!!

உன்னோடு அடிக்கடி
சண்டை போடுவதும்
கோபித்து கொண்டு
செல்வதும் உன்னை
பிரிவதுகில்லை
உன்னை அதிகம்
நினைப்பதற்கு ....!!!

சிரித்து சிரித்து
பேசுவோரை நம்பாதே
வெறுத்து வெறுத்து
பேசுவோரை வெறுக்காதே ....!!!

உன்னை மறந்தே அழுவாய் .....!!!

உன்னை
நான் காதலிக்க
வைத்த கஸ்ரத்தை
மீட்டு பார்க்கிறேன் ....
வேடிக்கையாகவும்
சிரிப்பாகவும் இருக்கு ...!!!

நீ
ஒருமுறை
நினைத்து பார்
உன்னை மறந்தே
அழுவாய் .....!!!

மீட்டு பார்க்கிறேன் ...!!!

உன் நினைவுகளை
நீ அருகில் இல்லாதபோது
மீட்டு பார்க்கிறேன் ...!!!

இரண்டுமடங்கு
இன்பத்தையும்
பலமடங்கு
துன்பத்தையும்
தருகிறாய் .....!!!

காதல் காத்திருந்தால்
உயிருடன் இருந்து
இறக்கும் செயல் ...!!!


சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...