Monday, April 7, 2014

ஒட்டை ஏன் போட்டாய் ...?

நீ
கண்ணால் கவிதை
எழுதினாய் -நான்
இப்போ கண்ணீரால்
கவிதை எழுதுகிறேன் ...!!!

இதயத்தில் கோலம்
போட்ட நீ
இதயத்திலும் ஒட்டை
ஏன் போட்டாய் ...?

வலியை தாங்கி கொள்ள....!!!

உடற் பயிற்சிபோல்
உள பயிற்சிபோல்
இதய பயிற்சி
செய்கிறேன் ....!!!

அவள்
என்னை பிரிந்து
சென்றால்
உடல்  ரீதியாக
உள ரீதியாக
இதய ரீதிகாக
வலியை தாங்கி
கொள்ள....!!!

என்னால் உன்னை மறக்க ....?

என் இதயத்துக்குள்
புகுந்து இதயத்தில்
இருந்து
வெளியேறியிருந்தால்
தாங்கி இருப்பேன் ..!!!


நீயோ
என் உணர்வுக்குள்
புகுந்து வெளியேறி
விட்டாய் ...?
முடியவில்லை
என்னால் உன்னை
மறக்க ....?

காதல் தோற்கிறது ...!!!

ஒரு
காரணமும் இல்லாமல்
காதல் தோன்றி
ஒரு
காரணத்தால் காதல்
தோற்கிறது ...!!!

உணர்வால் வாழுவது ...!!!

காதலும் கவிதையும்
வார்த்தையால் தோன்றி
உணர்வால் வாழுவது ...!!!

இதய மயானத்தில் நிற்கிறான் ...!!!

அன்பே காதல்
ரத்துக்கு- நீ
தந்த பரிசுதான்
உன் திருமண
அழைப்பிதல் ...!!!

ஒவ்வொரு  ஆணும்
தன் காதலியை
திருமணத்தின் பின்
மீண்டும் பார்க்கும்
சந்தர்ப்பத்தில்
இதய மயானத்தில்
நிற்கிறான் ...!!!

என் விழிகளில் நீ…

கைக்கெட்டாமல் நீ,
காதல்
கரைசேராமல்
நான்,
கரையும் கண்களுக்கு,
உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில்,
என்
விழிகளில் நீ…

என்னவள் கண் இமைத்தாலே

மயில் தோகை அழகு
என்னவள்
கண் இமைத்தாலே
அழகுதான் !!!

மல்லிகை அழகில்லை
என்னவளின் கூந்தலில்
இருப்பதால் அழகு ...!!!

அவள் போட்ட கோலம்
அழகில்லை
கோலத்துக்கு அருகில்
அவள் நிற்பதால் கோலம்
அழகு ....!!!

நான் ரசித்த அந்த நிமிடங்கள் ..!!!

நான் ரசித்த அந்த நிமிடங்கள் ..!!!
-----------------------------------------------------

1) முதல் மாத சம்பளத்தை பத்திரமாக பெற்றோரிடம் கொடுக்கும் அந்த நிமிடம்

2) தோற்ற காதலையும், காதலியையும் எண்ணி கண் கலங்கும் சில நிமிடம்

3) பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் புகை படங்களை பார்த்து சிரிக்கும் நிமிடங்கள்

4) என்றும் பசுமையான நமது பள்ளி மற்றும் கல்லூரி கனா காலங்களை நினைவு கூறும் நிமிடங்கள்

5) நண்பர்களுடன், நம்மை மறந்து கலந்துரையாடும் இனிய நிமிடங்கள்

6) நாம் வேண்டும் பொழுது பழைய துணிகளில் கிடைக்கும் சில ரூபாய் நோட்டுகள்

7) காதலியின் கை கோர்த்து நடக்கும் நிமிடங்கள்

8) நம் நலன் கருதும் நண்பரிடமிருந்து கிடைக்கும் சின்ன கட்டி பிடி வைத்தியம்

9)என்னுடைய முதல் குழந்தைக்கு கொடுக்கும் முதல் முத்தம்

10) மனம் விட்டு சிரிக்கும் பொழுது கண்களில் ஒரம் தோன்றும் கண்ணீர் துளி.

11) தினமும் பார்க்கும் விஷயங்களை, திடீரென்று ரசித்து பார்க்கும் அந்த நிமிடம் !!!

விலகவும் முடியாது

காதல் என்பது
மனிதனின்
தலை எழுத்தில் இருக்கும்
எழுத்து பிழை
விலகவும் முடியாது
விளக்கவும் முடியாது .....

காதல் என்பது ...
தேன் போன்றது
அளவாக சுவைத்தால்
இனிக்கும் அதிகமாக
தெவிட்டும் ....!!!

பூ நீதான் உயிரே ...!!!

இதய சுவரிலே ...
இரத்தம் என்னும்
மை கொண்டு
எழுதிய உன் பெயரை
எவராலும்
அழிக்க முடியாது. ..!!!

சில வேளை நீ
அழிக்க முயற்சித்தால்
என் கல்லறையில்
பூக்கும் கல்லைறை
பூ  நீதான் உயிரே ...!!!

என் அன்பு உறவுகளே ....!!!

என் அன்பு உறவுகளே ....!!!

வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வு நம் தமிழ் உறவுகளின் உயிர் நட்பு ..ஆதராவும் ...!!!

அதேபோல் உங்களின் என் மீதான அன்பிற்கும்  கவிதைக்கும் நீங்க தரும் பேர் ஆதரவு என்னை மெய் சிலுக்க வைக்கிறது ,....!!!

என் உயிர் உறவுகளே ....!!!

கவிதை என்பது ஒரு ஆத்மாவான செயல் இதனை
ஒரு பொழுது போக்குக்குத்தான் எழுத ஆரம்பித்தேன் ஆனால் இன்று என் ஆத்மாவாக மாறி வருகிறது அதை உருவாக்கியது உலக என் ரசிகர் தரும் பேராதரவுதான் ....!!!

என்  உடன் பிறப்புக்கள் இருக்கும் தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் தரும் ஆதரவு ...புலம் பெயர்ந்தது இருக்கும் என் தாயக மக்கள் ...டென் மார்க் ..லண்டன் ..பிராஞ்ச் ...ஜெர்மனி ..அமேரிக்கா ...
அரபு நாடுகள் ...மலேசிய ..சிங்கப்பூர் ...இன்னும் சொல்லிக்கொண்டே போகும் பலநாட்டு ரசிகர்கள்
அனைவருக்கும் என் தலை சார்ந்த வணக்கங்கள் ..!!!

உங்களின் தனி பட்ட  மடல்கள் வந்து மலைபோல் குவிகிறது  அனைவருக்கும் என்னால் தனிப்பட்ட முறையில் மீள் பதில் வழங்க முடியாததற்கு மிக
வருத்தம் அடைகிறேன். அதனால் இந்த பொது
அறிவிப்பதை நான் எழுதும் தளங்களிலும் என் முக நூலிலும் பிரசுரிக்கிறேன் ....!!!

என் உயிர் உறவுகளே ...!!!

என் கவிதைகள் உங்களுக்கு ஆத்தம திருப்தியாக இருக்கிறது என்று பலர் கூறுகிறீர்கள் .உண்மைதான் நானும் ஆத்மா உணர்வொடு எழுதுகிறேன் ..என்னை பொறுத்தவை இலக்கண இலக்கிய பண்புகளை விட யதார்த்தத்தை விரும்புகிறேன் அதுவே நம் எல்லோரையும் கவர்கிறது ....!!!

அன்பு உறவுகளே
ஆதரவுக்கும் உதவுகின்ற  மனப்பாங்குக்கும் மிக்க‌ நன்றி

என்றும் உங்கள் நட்புக்கு ஏங்கும்
உங்கள் கவி
கே இனியவன்


சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...