Saturday, April 12, 2014

கே இனியவன் கஸல் 682

நீ காதல் சின்னமாக
தந்த உன் புகைப்படம்
புகை பிடித்து போகிறது
புகை இதயத்துக்கு கூடாது ...!!!

உன்னோடு சேர்ந்து
நடந்த பாதைகள் இப்போ
என்னை பார்த்து சிரிக்கிறது
நான் தனியே போவதால் ,,?

உன்னை நினைத்தால்
காயங்கள் நினைவு
வருகிதில்லை ...!!!
அவை தழும்பாகி விட்டது ...!!!

கஸல் 682

கே இனியவன் கஸல் 681

காதலில் கனவுதான்
ஆணி வேர்
நான் குதூகலத்தில்
காதல் கொப்பில்
நீ கோடரியுடன் என்
அருகில் ....!!!

நீ என்
அருகில் வரும் போது
இதயம் சிரிக்க வேண்டும்
இதயம் தூங்குகிறது ...!!!

உன்னை பார்த்த நாளில்
இருந்து நான் காதல்
கிரகதோஷம் அடைந்தேன்
காதல் செவ்வாய் குற்றமாம் ...!!!

கஸல் 681

காதலுக்கு ஏது இணை ...?

என்னவளே ..
நானும் நீயும் புற கண்ணை
இழந்தவர்கள் காதலிக்கிறோம்
எம் காதல் எந்த விதத்திலும்
குறைய வில்லை ...!!!

என் அகக்கண்
அழகாக உள்ளது
காதலின் சொத்து அது
தானே அன்பே ...!!!

புற கண்ணால் பார்க்கு
சக்தி நமக்கு இருந்தால்
நீ அழுவதை நான் பார்க்கும்
கொடூரத்தை விட நம் அககண்
காதலுக்கு ஏது இணை ...?

( என் நண்பர் ஒருவரின் வேண்டுதலுக்காக )

வலியும் இன்பமும்...!!!

நான் 
பயணம் அனுப்பும் 
போது சொன்ன வார்த்தை 
உனக்கு நினைவிருக்கும் 
நீ எனக்கு 
வலியும் இன்பமும்...!!!

கவிதை 
கொதிப்பதற்கு உன் 
வலிதானே அன்பே 
காரணம் ...!!!

நீ இதயம் உள்ளவளா ..?

உன்னோடு 
பேசியதை நான் 
மறக்கவே ஏழு
ஜென்மம் எடுக்கும் ...!!!

உன் உயிரோடு 
பழகியதை 
மறக்க சொல்கிறாய் 
உண்மை சொல் 
நீ இதயம் உள்ளவளா ..?

வார்த்தைக்கு கூட 
உன்னை மறப்பேன் 
என்று சொல்ல மாட்டேன் 
சொன்னால் நான் 
மனிதன் இல்லை ...!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...