Wednesday, April 16, 2014

துடிக்கும் இதயமாகிவிட்டாய்...!!!

சுவாசித்த இதயத்தை 
நீ வந்து நேசிக்கும் இதயமாக்கி இப்போ
வெந்து துடிக்கும் இதயமாகிவிட்டாய்...!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

கடுகுவரி பெரிய வலி 02

அவள் பேசாமல் இருந்த நாள் முதல்
சித்திர குப்தன் என் ஆயுள் கணக்கை
முடித்துகொளுகிறான் ...!!!

--
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

கடுகு வரி பெரிய வலி

காதலுக்கான தகுதி என்னிடம் இருந்தது -ஆனால்
காதலி எதிர்பார்த்ததகுதி என்னிடம் இருக்கவில்லை.!

--

உன் உதட்டில் இருந்து  காதல் பிறந்தது ..!!!
உதறி தள்ளி விடாதே காதலை ...!!!

--

நான் உன்னை மறக்கமாட்டேன் அன்பே -என்று
சொன்ன காதல் வென்றது இல்லை ...!!!

--

சொல்ல முடியாத உணர்வுதான் காதல்
சொன்னால் அது வெறும் வார்த்தை ...!!!

--

உடைந்த காதலை ஓட்ட வைக்க -புதிய காதல்
ஒன்றும் காதல் பசையில்லை....!!!

--

பனித்துளி அழகனது காதலைப்போல் -ஆனால்
நிலத்தடி ஊற்று போல் காதல் வேண்டும் ...!!!

--

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

என் உயிர் நண்பர்கள் ....!!

என் கோபத்தில் உள்ள அன்பை நியாயத்தை
யார் கண்டு பிடிக்கிறீர்களோ -அவர்கள் தான் என்
உயிர் நண்பர்கள் ....!!

கே இனியவன் தத்துவம்

நிறைவேற்றாமல் இருக்காதே ..!!!

அடுத்த ஆசைக்கு அவதிப்படாதே ...!!!

எடுத்த ஆசையை நிறைவேற்றாமல்
இருக்காதே ..!!!


கே இனியவன் தத்துவம்

உன் கையில் தான் ...!!!

திட்டமிடல் இல்லாதவன் வாழ்க்கை 
பூச்சியமாகவே இருக்கும் ...!!!

திட்டமிடலை பூச்சியமாக மாற்றியவன் 
வாழ்க்கையும் பூசியம் தான் ...!!!

திட்டமிடல் 
ஒரு நிச்சயத்தன்மை அற்றதுதான்...!!!
நிச்சயமாக்குவது உன் கையில் தான் ...!!! 


கே இனியவன் தத்துவம்

கவனமாகவும் இருந்துகொள் ..!!

ஆசைப்படு ஆனந்தத்தையும் அன்பையும்
அனுபவிப்பாய் - அதே ஆசை தான் உன்
ஆனந்தத்தையும் அன்பையும் அழிக்கும்
கவனமாகவும் இருந்துகொள் ..!!

கே இனியவன் தத்துவம்

கே இனியவன் தத்துவம்

வாழ்க்கையில்
துன்பங்கள் எல்லோருக்கும் உண்டு
வடிவங்கள் தான் வேறுபடுகின்றன

கே இனியவன் தத்துவம்

வெற்றி நாள்

உனக்கு வலியை வடுவை
தருபார்கள் உனக்கு இரண்டை
செய்கிறார்கள் ...!!!

1) தமது கர்மாவை கூட்டுகிறார்
2) உனது கர்மாவை கழிக்கிறார்

இதை புரிந்தவனுக்கு
  வெற்றி நாள்

கே இனியவனின்
இனிய
காலை வணக்கம்

நன்றாக கெஞ்சுகிறாய்

கோபம் வந்தால் நன்றாக திட்டுகிறாய்
கெஞ்சுகிறபோது நன்றாக கெஞ்சுகிறாய்
இரண்டுக்கும் சேர்த்து முத்தமிடுகிறேன் ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

உடல் உளம் முழுக்க வலிக்கிறது ...!!!

காதல் வரும்போது கண்ணால் வருகிறது
போகும்போது இதயத்த்ல் இருந்து செல்கிறது
அதுதான் உடல் உளம் முழுக்க வலிக்கிறது ...!!!

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

காட்சி தருகிறாய்

இறைவன் பல அவதார காட்சி கொடுத்தார்
நீயும் எனக்கு பலவடிவில்  காட்சி தருகிறாய்
ஒவ்வொரு உடையிலும் ஒவ்வொரு காட்சி

-------------------------------

உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

உயிர் வாழ்கிறேன் உன்னால் ....!!!

நீ
பேசும் ஒரு வார்த்தை
எனக்கு
ஓராயிரம் சொற்கள்
உன்
ஒருமுறை என் மீது
பார்வை பல்லாயிரம்
சக்தி மின் காந்தம்

*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

காத்திருக்கிறேன் ...!!!

நீ நிஜத்தில் தரும்
சுகம் நீர்க்குமிழி போல்
அழகாகவிருக்கிறது
விரைவாக இறக்கிறது ...!!!

நீ  தந்துவிட்டு போகும்
வலி சிற்பம் போன்றது
அசையாமல் இருக்கிறது
வலியோடும் விழிவைத்து
காத்திருக்கிறேன் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

தவிப்பில் தவிப்பவன்

உயிரே தூரத்தில்
நீ விடும் மூச்சு காற்று
தென்றலாய் என் மீது
தொட்டு செல்கிறது ...!!!

உன்
ஏக்கமான பார்வை
என் கண்ணில் கதிர்
வீச்சாய் பாய்கிறது ...!!!
தவிப்பில் தவிப்பவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

உன்னால் தான் அன்பே ....!!!!

காதல் எல்லோரையும்
வாழவைக்கும் -என்னை
கலைஞனாக்குது ...!!!

உன்னை நினைத்து
ஓவியம் வரைகிறேன்
கவிதை எழுதுகிறேன்
கதை எழுதுகிறேன்
எல்லாம் உன்னால் தான்
அன்பே ....!!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கனவில் வாழ்பவன்

உன்னை தவிர எந்த...
பெண்ணையும் பார்க்க ....
விரும்பாத நான்....
இப்போ உன்னையும்....
பார்க்க விரும்பவில்லை....
நீ நேரில் வருவதை விட ...
கனவில் அழகு ...
கனவில் வாழ்பவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

காதல் செய் கருணை வரும் ...!!!

காதல் செய் கருணை வரும் ...!!!
-------------------------------------------------

உயிரே

உன்மீது கொண்ட உயிர்
காதலால் உனக்கு ஒரு
பூவை பறித்து தரகூட
என் மனம் தயங்குகிறது ..!!!

தண்டுடன் காதல் செய்த
பூவை நான் பறித்தால்
பூவின் சாபத்தாலோ
தண்டின் சாபத்தாலோ
நம் காதலும் பறி போகிடுமோ ...?

ஏக்கத்தால் தடுக்கிறது மனம்
காதல் செய்தால் கருணையும்
வளரும் என்பது உண்மைதான்
உயிரே ....!!!

உன் உதடு பட்ட ..?

நீ கடற்கரையில்
தூதி விளையாடிய
இதய பலூன் -இப்பவும்
என்னிடம் அழகாக
இருக்கிறது .....!!!

உன் உதடு பட்ட
அந்த பலூனை
அடிக்கடி
தூதி பார்கிறேன்
மெதுவாக
உடைந்து விடும்
என்ற ஏக்கத்துடன் ...!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...