Monday, April 21, 2014

கணப்பொழுது வீணாகிறது ....!!!

என் இதயத்தில் குடி
கொண்டவளே - அடிக்கடி
ஏன் வெளியில் சென்று வலி
தருகிறாய் ...!!!
உன்னோடு இருக்கும்
கணப்பொழுது
வீணாகிறது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

ஒரு சுகம் தான்

உன்னுடன் பேசுவதே
போதும் நான் இன்பமாக
இருக்க ஆனால் -நீயோ
பேசாமல் கொல்கிறாய்
அதிலும் ஒரு சுகம் தான்
வலியுடன் இருக்க
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

தனியாக வாழ்வோம் ..!!!

என் உயிரையே உருக்கும்
உன் அழகு முடியவில்லை
என்னால் உன்னை இழக்க
வா அன்பே இருவரும்
இறைவனிடம்  சிறகு பெற்று
காதல் உலகத்தில் தனியாக
வாழ்வோம் ..!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

அவள் உனக்கு என்று விட்டார் ...!!!

நான் கேட்டதெல்லாம்
நீ செய்கிறாய் என்றால்
நீ எனக்கு
கடவுளைவிடமேல்
கடவுளிடம் கேட்டேன்
மறுபிறப்பிலும் நீதான்
காதலி என்று -முடியாது
இப்பிறப்பில் தான் அவள்
உனக்கு என்று விட்டார் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

உயிரை தருகிறேன் ..!!!

ஒரு
இரவில் என்னையே
மாற்றியவள் நீ
என்னிடம் இருந்த
அனைத்தையும்
இழக்க வைத்தவள் -நீ
இனி நான் இழப்பதற்கு
ஒன்றும் இல்லை ...!!!
வேண்டுமென்றால்
உயிரை தருகிறேன் ..!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

நிறையாக தெரிகிறது ...!!!

எனக்கு யாரும் அதிகம்
பேசினால் பிடிக்காது ....!!!
நீ அதிகம் பேசாமல்
இருந்தால் பிடிக்காது ...!!!
எல்லாவற்றிலும்
குறை கூறும் நான்
உன்னில் உள்ள
குறையும் நிறையாக
தெரிகிறது ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

மௌனத்தை விடு ...!!!

நீ ஒரு நிமிடம் தான்
என்னோடு பேசாமல்
இருந்தாய்  நான் ஒரு
ஜென்மம் உயிரற்று
இருந்தேன் ...!!!
போதும் உன்
திரு விளையாடல்
மௌனத்தை விடு ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

உன் குரலின் சத்தத்துக்கு ...!!!

உன்
உதட்டோரம் நான்
பேசாமல் பேசிய வார்த்தை
தான் முத்தம் - நித்தம் அதை
நினைத்தே தவிக்கிறேன்
முத்தத்துக்கல்ல -உன்
குரலின் சத்தத்துக்கு ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

காலம் எல்லாம் நிலைத்திருப்பாய் ...!!!

உன்
கரு விழி கண்டேன்
உன்
கருமுடி கண்டேன்
காத்திருக்கிறேன்
உன்
திருவாயால் மலரும்
அந்த சொல்லை -நீ
என்னை காதலிப்பாய்
காலம் எல்லாம்
நிலைத்திருப்பாய் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...