Thursday, May 1, 2014

உன் காதலை காதல் செய்யவேன்....!!!

என்
வாழ்க்கையில் அந்த
இரு நிமிடங்கள் ....?

முதல் முதல்
என்னை நீ பார்த்தது
காரணம் இல்லாமல்
நீ என்னை பிரிந்த
நிமிடம் ....!!!

என் உயிர் உள்ளவரை
உன் காதலை காதல்
செய்யவேன்....!!!

உயிர் போகும் வலி

நீ
என்னை விட்டு சென்ற
வலியை நான் இறந்த பின்
நீ உணரவேண்டும்
என்றில்லை ...!!!

நான் உன்னை நினைத்து
விடும் ஒரு துளி கண்ணீர்
உயிர் போகும் வலி
என்பதை உணர்வாய் ...!!!

நிச்சயம் கிடைக்க மாட்டான் ......!!!

இன்று
உனக்கு தெரியாது ...!!!
ஒரு வீறாப்புடன் விலத்துகிறாய் ..
நிச்சயம் கவலைப்படுவாய் ....!!!

உன்
சின்ன சின்ன இன்பத்தையும் ..
பெரிதாக ரசிக்கவும் ...
உன்
பெரிய பெரிய துன்பத்தை
சிறிதாகவும் ஆறுதல் சொல்ல
என்னை விட ஒரு காதலன்
உனக்கு நிச்சயம் கிடைக்க
மாட்டான் ......!!!

உன்னைவிட காதலை மதிக்கிறேன் ....!!!

நான்
உன்னை வெறுப்பதற்கு
பல காரணம் சொல்லலாம்
ஒரு காரணத்தை கூறி கூட
நான்
விலக விரும்பவில்லை
நான்
உன்னைவிட காதலை
மதிக்கிறேன் ....!!!

உயிரே காதலால் தவிக்கிறேன்

உயிர் போகும் போது ....
ஒரு வலி தோன்றும்....
என்பார்கள் -நான்.....
உயிரோடு இருக்கும் ....
போது உணர்ந்தேன்....!!!

உன்னை உயிரே என்று
அழைத்தேன் -நீ
என்னை பிரிந்தபோது ..
அந்த வலியையும்
உணர்ந்தேன் ...!!!

கவிதை தான் அறியும் ....!!!

நீ தந்த கண்ணின் வலியை காதல் அறியும் ...
உன் கண்ணும் காதலும் அறியும் -என்
இதயத்தின் வலியை கவிதை தான் அறியும் ....!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

கவிதை தான் அறியும் ....!!!

நீ தந்த கண்ணின் வலியை காதல் அறியும் ...
உன் கண்ணும் காதலும் அறியும் -என்
இதயத்தின் வலியை கவிதை தான் அறியும் ....!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

இரக்கத்தை காட்டுகிறாய் ...!!!

எனக்கு
தெரியும் உன்னை
காதலிப்பது இரும்பு
ஆணிகள் மேல்  
தூங்குவதற்கு சமன் ...!!!

உடலிலே காயங்களை
தருகின்ற போதும்
உள்ளத்தில் சிறுதுளி
இரக்கத்தை காட்டுகிறாய் ...!!!


கே இனியவன்
காதல் வலி கவிதை

தடுக்க முடியவில்லை ....!!!

நன்றாக பிரிந்து போ ...
உன்னை இனி தடுக்கவும்
திருத்தவும் இனி என்னால்
முடியாது ....!!!

என்
காதல் கண்ணீரால்
எழுதப்படும் கவிதை
என்பதை யாராலும் தடுக்க
முடியவில்லை ....!!!

கே இனியவன்
காதல் வலி கவிதை

துடிக்காமல் இருக்கிறாள் ...!!!

காதலின் தூண்டில் கண்
துடித்து கொண்டிருக்கும்
மீன் - ஆண் ...!!!
அவளுக்கென்ன
தூண்டிலை போட்டு விட்டு
மீன் அகப்பட்டபின்னும்
துடிக்காமல் இருக்கிறாள் ...!!!


கே இனியவன்
காதல் வலி கவிதை

உன் இதயத்துக்குள் மறைந்திருகிறேன்.....!!!

என் கவிதைகள் ...
நீ தந்த வலிகளின்....
வரிகள் என்றாலும் ...
உன்
காதல் காயங்களுக்கு
பயந்து உன் இதயத்துக்குள்
மறைந்திருகிறேன்.....!!!


கே இனியவன்
காதல் வலி கவிதை

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...