Saturday, May 10, 2014

காதலை கெடுத்து விடுமோ ..?

காதல் கிரிக்கட்டில்
துடுப்பெடுத்து ஆடும்
துடுப்பாட்டக்கரன் போல் ...!!!
எந்த நேரம் அவுட்
ஆகிடுவமோ -
என்ற ஏக்கம் போல் ...!!!
இடையிடையே மூன்றாம்
நபர் தலையீடும் நம்
காதலை கெடுத்து விடுமோ ..?
என்ற பயமும் வேறு....!!!

தலை விட நட்பு இரக்கம் மிகுந்தது ...!!!

சிறுவயதில் நான் தோற்று
விடுவது -கண்ணாம்பூச்சி
விளையாட்டில் ...!!!
யாரையும் நான் கண்டு
பிடிக்க மாட்டேன் -அழுவேன்
அவர்களாகவே வந்து
விடுவார்கள் ...!!!

இப்போ
என் இதயத்துக்குள்
கண்ணாம் பூச்சி
விளையாடுகிறாய்
உன்னை காணாமல் அழுகிறேன்
நீ வரவில்லை - இப்போதான்
புரிகிறது காதலை விட நட்பு
இரக்கம் மிகுந்தது ...!!!
+
+
+
காதல் உனக்கு ஒரு விளையாடு

காதல் உனக்கு ஒரு விளையாடு ...!!!

என் இதயத்தில்
உதைப்பந்து
விளையாடுபவள்
நீ - உன் உதைகள்
ஒவ்வொன்றும் இலக்கு
தவறி செய்ல்கிறதே தவிர
காதல் இலக்கை வரவே
இல்லை - தயவு செய்யது
ஒரு உதை என்றாலும்
காதலை நோக்கி உதை ...!!!

தினமும் வலிதருகிறாய் ...?

சூரியனில் இருந்து ஒளியை
பெற்று வாழும் நிலாவுக்கு
கூட சூரியன் ஒருநாள் தான்
தண்டனை கொடுக்கிறது
உன் நினைவில் இருந்து
வாழும் எனக்கு நீ ஏன்
தினமும் வலிதருகிறாய் ...?

நீ தூரத்தில் வரும் ...!!!

நீ தூரத்தில் வரும்
போது என் இதயமும்
உன் இதயமும் வெளியில்
வந்து கட்டி தழுவுகின்றன
நாம் மட்டும் முகத்தை
பார்க்காமல் எதிரியாய்
செல்கிறோம் .....!!!

நீ எப்போதும் என் ...?

நீ எப்போதும் என்
அருகில் தான் இருக்கிறாய்
உடலால் பிரிந்துள்ளோம்
உணர்வால் இணைந்துள்ளோம்
மண் தின்னும் உடல் தானே
இருந்தால் என்ன பிரிந்தால்
என்ன ?

நீ அனுப்பும் ஒரு ...?

நீ அனுப்பும் ஒரு
சின்ன ஹாய் என்ற
குறுந்தகவல் உனக்கு ஒரு
சொல் -எனக்கும் ஆயிரம்
வார்த்தை ....!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...