Sunday, June 8, 2014

நடிக்கிறாய் ....!!!

நீ வாயால் இப்போதான்
காதலை சொல்கிறாய்
நான் இதயத்தால்
அன்றே சொல்லிவிட்டேன்
புரியாதவள் போல்
நடிக்கிறாய் ....!!!

கவிதையால் அழுகிறேன் ...!!!

என்னிடம் இருந்த உன்
இதயத்தை நீ பறித்து
சென்றதால் -வேறு
வழியில்லாமல்
கவிதையால் அழுகிறேன் ...!!!

மரணவலி இதுதான் ...!!!

இமைக்கும் நொடியில்
கூட உன்னை நினைக்காமல்
இருந்ததில்லை
மறக்க சொல்கிறாயே ..
மரணவலி இதுதான் ...!!!

உனக்காக இதயத்தை

உனக்காக இதயத்தை
திறந்து வைத்திருக்கிறேன்
சிலவேளை நான் இதயத்தை
மூடிவிட  நேர்ந்தால் ..
அன்று மலரால்
அலங்கரிக்கப்படும் என்
இதயம் ....!!!

முடியவில்லை ...!!!

இருதய மாற்று
சத்திர சிகிச்சை கூட
செய்து பார்த்தேன் ..
அவளை மறப்பதற்கு..
முடியவில்லை ...!!!

மறக்குதில்லை இதயம் ...!!!

வாழ்க்கையில் பெண்
என்று நினைக்கும்
போதெல்லாம் -முதல்
வருவது முதல் காதலி
எத்தனை சமாதானம்
சொன்னாலும்
மறக்குதில்லை இதயம் ...!!!

பார்க்க துடிக்கிறது .....!!!

நீ ஒருமுறைதான்
என்னை பார்த்தாய்
என் இதயம் ஓராயிரம்
முறை பார்க்க
துடிக்கிறது .....!!!

வலிகள் இருந்தாலும் ....!!!

இருந்த
இதயத்தில் உள்ள
சுகத்தை விட -தொலைந்த
இதயத்தில் இருந்த சுகம்
தனி சுகம் வலிகள்
இருந்தாலும் ....!!!

நெஞ்சம் மறக்குதில்லை ....!

பிரிந்து சென்ற நம்
இதயத்துக்கு
மறந்து வாழ
தெரியவில்லை ...!!!

நெஞ்சம் மறக்குதில்லை ....!!!

உன்னை
பிரிந்து பல வருடங்கள்
ஆகி விட்டது ....
உன்னை மறந்த ஒரு
நொடிகூட என்னிடம்
இல்லை ....!!!

நினைவுகள்

நினைவுகள்
காயப்படுத்தினாலும்
கனவில் ஆறுதல் தருகிறாய்
என் உயிரினுள் உயிரானவளே
என் உயிர் வாழ்வதே
உன் உயிருக்காக தானடி ....!!!

www.kavithaithalam.com

எனக்கு தந்த வரம்

உன்னோடு வாழுவது
சொர்க்கம் என்றால்
உன்னோடு பேசுவது
அமிர்தம் -நீ கடவுள்
எனக்கு தந்த வரம்

உன் உயிருக்காக தானடி ....!!!

நினைவுகள்
காயப்படுத்தினாலும்
கனவில் ஆறுதல் தருகிறாய்
என் உயிரினுள் உயிரானவளே
என் உயிர் வாழ்வதே
உன் உயிருக்காக தானடி ....!!!

சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்

என் இதயத்தில்
உன்னை அடைகாக்கிறேன்
காதல் கிளிகள் சிறகடித்து
பறக்கின்றன

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...