Sunday, July 6, 2014

நாள் கிரகணம் நாள் ...!!!

பகலில் தோன்றும்
முழு நிலா நீ
இரவில்
அமாவாசையில்
வரும் முழு நிலாவும்
நீ தான் ....!!!
உன்னை காணாத
நாள் கிரகணம் நாள் ...!!!

சாகடிக்கவே காதலிக்கிறாய் ...!!!

நானோ உன்னை ....?
சாகும் வரை
காதலிக்கிறேன் ...
நீயோ என்னை ....?
சாகடிக்கவே
காதலிக்கிறாய் ...!!!

காட்சி தருகிறாய் ...!!!

நீ சுடிதாருடன் நீ தேவதை
தாவணியில்  நீ சிட்டு
சேலையுடன்  முழு நிலா
நீ தேவதைதான் ஒவ்வொரு
வண்ணமாய்
காட்சி தருகிறாய் ...!!!

இன்பமாய் காண்கிறேன் ....!!!

நான் கடவுளிடம் 
வாங்கிக் கொண்ட 
விலைமதிக்கா வரம்
கனவு ......!!!
அதனால் தான் 
நீ அருகில் இருக்காத 
போதும் இன்பமாய் 
காண்கிறேன் ....!!!

பேசும் போது ....!!!

காதுக்குள் பேசுவது
எனக்குப்பிடிக்காது
காதோரம் பேசுவதை
ரசிக்கிறேன்- நீ
தொலைபேசியில்
பேசும் போது ....!!!

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...