Wednesday, August 6, 2014

திருமணத்தின் பின்

திருமணத்தின் பின்
காதலித்தபோது அழுதவை 
சிரிப்பை தரும் -சிரித்தவை 
அழுகையை தரும் .....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

வாடியது என் காதல் பூ ....!!!

சொல்ல வந்த வார்த்தையை 
சொல்லாமல் செல்கிறாய் 
மலராத மொட்டுப்போல் 
வாடியது என் காதல் பூ ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

காலமெல்லாம் வாழ்வதே காதல் ......!!!

கண்ணால் காதலை பெற்று 
கண்ணை மூடி இன்பம் கண்டு 
காலமெல்லாம் வாழ்வதே 
காதல் ......!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

உன்னை நம்பியது ....!!!

காதலில் 
நான் விட்ட தவறு
காதலை நம்பாமல் 
உன்னை நம்பியது ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

காதலுக்கு விழிதான்

காதலுக்கு விழிதான் 
தாய் மொழி 
கண்ணீர்தான் அதற்கு 
வார்த்தைகள் ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

முத்தமிட்டு செல்கிறாய் ...!!!

முத்தம் 
கேட்டால் தட்டி விடுகிறாய் 
தள்ளிவிட்டு நான் போனால் 
முத்தமிட்டு செல்கிறாய் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

என் உயிரிலும் மேலானது .....!!!

காதலின் பின் தனியாக 
மூச்சு கூட விட்டதில்லை 
உன் மீது காதல் என் உயிரிலும் 
மேலானது .....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

வெற்றுடலுடன் இருக்கிறேன் ...!!!

உனக்காக துடிக்காத 
இதயம் இருந்தாலென்ன ...?
இறந்தாலென்ன ...?
வெற்றுடலுடன் இருக்கிறேன் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

காதலிக்கிறேன் ....!!!

நீ  விலகி விட்டாய் ....
பசுமையான நினைவுடன்
இன்னும் நெருக்கமாக
காதலிக்கிறேன் ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

கவிதை எழுதி எழுதி

உனக்கு 
கவிதை எழுதி எழுதி 
என் பேனாவும் காகிதமும் 
காதலிக்க தொடங்கிவிட்டன ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...