Thursday, August 13, 2015

வாழ்வும் இல்லை ;;

நிச்சயம் 
செய்த பெண் என்று தெரிந்தும் .. 
வீசினாய் என்மீது கண் வீச்சை .... 
என்மனமும் தடுமாறியது ..-
விளைவு ....?

நீயும் இல்லை
இருந்த வாழ்வும் இல்லை ;; 
நிறுத்து உன் கண் வீச்சை ... 
மற்ற பெண்கள் வாழட்டும் ..!!!

விதவையாகதான் இருக்கிறேன்.....!!!

பள்ளி பருவத்தில் உன்னைக்கண்டேன் .. 
பருவமகள் ஆனேன் அப்போது ... 
கண்டதும் காதல் கொண்டேன் 
கொண்டதே கோலம் என்றேன் .. 
பூ என்று நினைத்தாயோ என்னை .. 
பட்டம் பூச்சிபோல் பறந்து விட்டாய் .. .!!!

என் தோழிகளின் குழந்தைகள் ''' 
அத்தை என்று அழைக்கிறார்கள் .. 
உன்னால் என்னும் விதவையாகதான் 
இருக்கிறேன்.....!!!

தயங்கியவர் வென்றதில்லை....!!!

கண்களைத் திறந்து பார் 
அனைவரும் தெரிவார்கள். 
கண்களை மூடிப் பார். 
உனக்குப் பிடித்தவர்கள் 
மட்டும் தெரிவார்கள்.....!!!

தோல்வியின் அடையாளம் தயக்கம்! 
வெற்றியின் அடையாளம் துணிச்சல்! 
துணிந்தவர் தோற்றதில்லை 
தயங்கியவர் வென்றதில்லை....!!!

நீங்கள் பெறுங்கள்

நீங்கள் இன்னும் கொஞ்சம் .....
விட்டுக்கொடுங்கள் ... 
வாய்ப்பை கொடுங்கள் ... 
நம்பிக்கையை கொடுங்கள் ... 
நம்பிக்கையை நீங்கள் பெறுங்கள்

இதயக்காதல்

இதயக்காதல் 
உலகம் முழுவதும் வந்தால் 
உலகில் கற்பழிப்புக்கு இடமே இல்லை 
இதயகாதல் ஒன்றால் மட்டுமே வரமுடியும் 
கவிதை ..கவிதை..கவிதை.. !!!

கவிதை எழுதக் கற்றுக்கொள் 
இதய காதல் தோன்றும் 
மரண தண்டனையால் 
ஆயுள் தண்டனையால் 
கற்பழிப்பை குறைக்கலாம் தடுக்க முடியாது ...!!!

காரணம் வெளியில்  
வராத கற்பழிப்புகள் நிறைய உண்டு ....!!!

வானம் கூட வசமாகும் ...!

நீ குறிக்கோளுடன் சென்றால் 
தூர நோக்கங்கள் (கனவு ) நிஜமாகும் 
காலம் உனக்கு துணையாகும் ... 
வாழ்கை ஒருநாள் வளமாகும் 
வானம் கூட வசமாகும் ...!

விதவைக்கு வாழ்கை

அழகிழந்து 
முகமிழந்து 
பூ போட்டு இழந்து 
இருகிறாய் 
 

மூன்று பிள்ளைகளும் 
உன் புருசனும் 
நான் அறிவேன் 

உன் 
ஆசைகள் ஆரவாரங்கள் 
எல்லாம் 
அஸ்தமித்து விட்டன . 

என்றாலும் 
நான் இருக்கிறேன் 
என்னிடம் அழகு இல்லை .
ஓரளவு பணமுண்டு 
முழுமையாக இருக்கிறேன் 

விதவைக்கு வாழ்கை கொடுத்த 
பாக்கியம் என்றாலும் கிடைக்கட்டும்

இருதய நோயாளி ஆகிவிட்டேன்

அருகில்
வந்தால் முறைத்து பார்க்கிறாய் ...
எனக்கு இரத்தக்கொதிப்பு வருகிறது ..!

தூரத்தில் நின்று சிரித்துவிட்டு போவதால் ..
தூரப்பார்வை குறைகிறது ...

திடீரென ஒருநாள் கிட்ட வந்து சிரித்தாய் ...
தலையே சுற்றியது ..

ஒருவார்த்தை பேசினாய் -நான்
ஊமை யாகி விட்டேன் ...

உன்னை சுமந்து சுமந்து ...
இருதய நோயாளி ஆகிவிட்டேன்

என்ன ? தண்டனை கொடுப்பது ..?

உன்னை படைத்த கடவுளுக்கு -என்ன ?
மட்டும் இவ்வளவு அழகாக ;;
படைத்துவிட்டு.......
என்னை இவ்வளவு அசிங்கமாக ..
படைத்த கடவுளுக்கு
என்ன ?
தண்டனை கொடுப்பது ..?

கவிதை ஞானியானேன்

உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்

காதலிக்கிறாய் .

நானோ உன்னை ....?
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை ....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .

சந்திர கிரகணம்

இன்று
சந்திர கிரகணமாம்
மற்றவர்களுக்குத்தான்
சந்திர கிரகணம்
எனக்கு நீ வந்தால் பூரணை
வாராவிட்டால்
சந்திர கிரகணம்

மறுத்து விடாதே ..

என்னிடம் எது வேணும் என்றாலும் கேள்
தருவதற்க்கு தயாராக இருக்கிறேன்
உன்னிடம் ஒன்றே ஒன்றை கேட்பேன்
மறுத்து விடாதே ..
காதலை ...?

சரி போகட்டும் விடு ...

உன்னை 
தேவதையென நினைத்து காதலிக்கிறேன் ... 
நீ தினம் 
தோறும் கட்சிதருவாய் என்றுகாதலிக்கிறேன் 
 
நீயோ .. 
என்னைக்கண்டவுடன் பேசாமல் போகிறாய் 
தூரத்தில் நின்று திரும்பி பார்க்கிறாய்... 
தூரப்பார்வை குறைபாடு வந்தாலும் வரலாம் 
உன்பார்வையை வீச மறுக்கிறாய் 
ஒரு புன்னகை கூட தர மறுக்கிறாய் 
சரி போகட்டும் விடு ... 
 
ஒரு கல்லையாவது எடுத்து வீசி ஏறி 
அதுவாவது என்மீது வந்து படட்டும் 
நீ தரும் 
எதையும் ஏற்க தயாராக இருக்கிறேன்

அரசியல் தீர்வு வரப்போகிறதாம்......!!!

மீன்கள்
வானத்தில் நீந்துகின்றன ...!!!
நிலத்தில்
முழுநிலா உதிக்கிறது ...!!!
சிட்டுக்குருவிகள்
முகிலில் கூடுகட்டுகின்றன ....!!!
சாரைப்பாம்பு படமெடுக்கிறது ...!!!
காகம் வெள்ளையாகிறது ....!!!
கொக்கு கறுப்பாகிறது ...!!!
ஏன் இந்தமாற்றம் என்று
கேட்கிறேர்களா ?
இலங்கையில் அரசியல்
தீர்வு வரப்போகிறதாம்......!!!

கவலைப்படுகிறேன்

உன்
இதயம் இரும்பு குண்டுபோல்
பத்திரமாக வைத்திருக்கிறேன் ..
நீயோ என் இதயத்தை திருவிழாவில்
வாங்கிய பலூனைப்போல்
ஊதி..ஊதி விளையாடுகிறாய் ..
உடைத்துபோடுவாய்
என்று கவலைப்படவில்லை ..
உடைத்தபின்
அழப்போறாய் என்று
கவலைப்படுகிறேன்

இதயக்கதவை

இதயக்கதவை பூட்டி விட்டு
ஏன் இடுப்பில் இன்னும் துறப்பை
செருவி வைத்திருக்கிறாய் ..?

ஒவ்வொன்றாய் இருகிறாய் ....

நீ
சுடிதாருடன்  அழகோ அழகு
பாவாடை தாவணியில்மிக அழகு
சேலையுடன் அழகுக்கு தேவதை
ஒவ்வொரு உடையிலும் ....
ஒவ்வொன்றாய் இருகிறாய் ....
புடவையால் நீ அழகா ....?
உன்னால் புடவை அழகா ...?

"பேய்மரம்"

பசுமையான புளியமரம்
பரந்த நிழல்
வண்டு அரிக்காத பழங்கள்
ஊருக்குள்ளே பேச்சு
"பேய்மரம்"

நீ புதிய மலர் தேடுகிறாய்....!!!

என்றும் 
அம்மா தெய்வம் 
இன்று
நீயும் தெய்வம் ....
காட்சி தா ....!!!

நீ  
மீனாக  இருந்துவிடு ...
நான் தூண்டில் புழுவாக ...
இருக்கிறேன் ....
அப்போதென்றாலும்.....
என்னை தொடு....!!!

நான் 
வாடிவிழும் மலர் ....
நீ 
புதிய மலர் தேடுகிறாய்....!!!


+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;835

நாம் அழியவே முடியாது ....!!!

நீ 
ஐந்து முக தீபம் ....
அழகாக இருகிறாய் ...
அணைத்தால் சுடுகிறாய் .....!!!

என் 
காதலில் இலை....
உதிர்காலம் - நீ
மூச்சு விடுகிறாய் -நான் 
உதிர்கிறேன் ....!!!

காதல் தலைஎழுத்து ....
நமக்கு கல் எழுத்து ....
நாம் அழியவே முடியாது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
தொடர் பதிவு கஸல் 
கவிதை ;834

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...