Monday, March 21, 2016

சமூக அவலக்ஹைகூக்கள்

அருந்ததி பார்த்தவள்
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை

^^^

வயிற்றில் சுமந்தவளால்
கைகளால் சுமக்க முடியவில்லை
புத்தகப்பை

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள்
விதவை பூக்காரி

^^^

சமூக அவலக்ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன் 

அரசியல் ஹைகூக்கள்

தொண்டன் தீக்குளிப்பு
தலைவர் சோகத்தில் மூழ்கினார்
கட்சி ஒரு வாக்கினால் தோல்வி

^^^

காகித துண்டுக்கு
ஆயிரம் பொற்காசுகள்
வாக்கு சீட்டு விற்பனை

^^^

பொய்மையே வெல்லும்
உண்மை சிறையில் அடைக்கப்படும்
அரசியல்

^^^

அரசியல் ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்

உன்னை மறக்க சொல்லாதே ..

உன்னை ...
மறக்க சொல்லாதே ...
என்னை...
மடியச்சொல்...
மடிந்து விடுகிறேன் ....!!!

உன்
நினைவுகளில்
நான்
பாம்புவாயில்
சிக்கிய
தவளை ....!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்  

ஒரு வார்த்தை கவிதைகள்

காதல்
இருவழிப்பாதை
ஒருவழி ...
தடைப்பட்டால்....?

சிறகு
ஒன்றுடைந்த....
பறவை ....
நான் .....!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்  

தவிர்க்கும் நான்

உன்
எண்ணங்களை...
சுமந்து ...
தவிர்க்கும் ....
நான் .....!!!

வலையில்
சிக்கி
தவிக்கும்
மீன் .....!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்  

ஒரு வார்த்தை கவிதைகள்

நீ
இல்லாத ...
பொழுதில்  ...
நான் ....!!!

நீர்
இல்லாத
இடத்தில்
மீன் ....!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...