இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 நவம்பர், 2016

நண்பனே விழித்தெழு ...!

நண்பனே விழித்தெழு ...!
-----

நண்பனே விழித்தெழு ...!
நண்பனே விழித்தெழு ...
இதற்கு மேலும் பதுங்க்காதே ...
போராட்டத்தை -நீ
சந்தித்தால் தான் .......
உன் வெற்றி உறுதி...

போர்வைக்குள்
வாழ்ந்துகொண்டிருந்தால்
போடா நீயொரு மனிதனா என்று
உலகம் உன்னை உதறித்தள்ளும் ....!!!

சிந்திக்காமல் சிதறிக்கொண்டு
திறமையை சிதறடிக்கிறாய் நண்பா ..
அழுகிறது உன் திறமையை பார்த்து
திறனற்றுப்போன உன் திறமைகள்....!!!

நீ அதைக்கண்டு ....
கொள்ளவில்லை .உன்னிடம்இருக்கும் ....
திறமையை அறிந்தவன்-நான்...
உயிர் நண்பன் சொல்லுகிறேன் ....
வாழ்க்கையைஎதிர்த்து போராடு ....
வாழும் வரை தலைநிமிர்ந்து......
வாழ்ந்திடு ....!

&
கவிப்புயல் இனியவன்

நண்பனே விழித்தெழு ...!

 நண்பனே விழித்தெழு ...!

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 12, 2013 8:18 pm
நண்பனே விழித்தெழு ...! 
நண்பனே விழித்தெழு ...
இதற்கு மேலும் பதுங்க்காதே ...
போராட்டத்தை -நீ
சந்தித்தால் தான் உன் வெற்றி உறுதி...

போர்வைக்குள் வாழ்ந்துகொண்டிருந்தால்
போடா நீயொரு மனிதனா என்று
உலகம் உன்னை உதறித்தள்ளும் ....

சிந்திக்காமல் சிதறிக்கொண்டு
உன் திறமையை சிதறடிக்கிறாய் நண்பா ..
அழுகிறது உன் திறமையை பார்த்து
திறனற்றுப்போன உன் திறமைகள்....

நீ அதைக்கண்டு கொள்ளவில்லை .
உன்னிடம்இருக்கும் திறமையை அறிந்தவன்-நான்
உயிர் நண்பன் சொல்லுகிறேன் வாழ்க்கையை
எதிர்த்து போராடு வாழும் வரை தலைநிமிர்ந்து
வாழ்ந்திடு ....!

உன்னை அப்படி அழைப்பது

மனிதா ..?
நீ ஒரு வீடு கட்டுவதற்காக ......
எங்களின்பல நூறு .......
இருப்பிடங்களை அழிக்கிறாய்

நாங்கள் ....
பறந்த்திடுவோம் என்ற ....
நம்பிக்கைதான்...
சண்டையிடுவதற்கு .....
சக்தியில்லாதவர்கள் .....!!!

இனத்தை .....
அழிப்பவனை இனவாதி
என்றால் ......
நீ பிற இனத்தையல்லவா ...
அழிக்கிறாய் ...
உன்னை அப்படி அழைப்பது ..
தெரியவில்லை ...?

&
இயற்கை வள கவிதை
கவிப்புயல் இனியவன்

இயற்கை வள கவிதை

மனிதன் காட்டுக்குள் .....
நுழையும் போது...!
குரங்குகள் தாவும் ...!
நரிகள் ஊளையிடும் ...!
குருவிகள் ஓலமிடும் ..!
இத்தனையும் அவை
சந்தோசத்தால் ..
பயத்தால் செய்யவில்லை....
மரங்களுக்கு அவை ....
கொடுக்கும் -சமிஞ்சை...
மனிதர்கள் வருகிறார்கள்...
மரங்களே விழிப்பாக .....
இருங்கள்  எச்சரிக்கின்றன ....!!!

&
இயற்கை வள கவிதை
கவிப்புயல் இனியவன் 

ஒன்றை நினைவில் வைத்துக்கொள் ...

உனக்கு ......
நல்ல வாழ்க்கை கிடைக்கும்
என நீ  கருதினால் ....
உன் நிழலைக்கூட
நான் நினைக்க மாட்டேன் .....
ஒன்றை நினைவில் வைத்துக்கொள் ...
நீ திரும்பி ......
வரவேண்டிய நிலைவந்தால் ....
*
*
*
*
*
*
*
*
*
*
கவலைப்படாமல் வந்துவிடு ....!
உன் உடலையோ உறவையோ
நான் விரும்பவில்லை ..
நான் வாழ்ந்த காதல் ...
வாழ்க்கை எனக்கு தேவை ..!

&
கவிப்புயல் இனியவன் 

குழிக்குள் நின்று நீ சிரிக்கிறாய் ...!!!

மறப்பதற்காக .....
முயற்சிக்கிறேன் ....
நீயோ கவிதையாக
வந்து விடுகிறாய் ....!!!

மதுவை அருந்தி .....
மறக்க நினைக்கிறேன்...
நீயோ போதையாக ......
வந்து விடுகிறாய் ...

விஷத்தை எடுத்து ....
குடிக்க முயற்சித்தேன் ...
உயிராக வந்து தடுக்கிறாய் ...

எனக்கு நானே .....
கல்லறைக்குழி வெட்டினேன் ..
குழிக்குள் நின்று நீ சிரிக்கிறாய் ...!!!

&
கவிப்புயல் இனியவன் 

இழக்க நான் தயாரில்லை ...!!!

ஓரமாக.......
 இருந்து பேனா ஓலமிடிகிறது ...
காகித தாள் வீட்டை விட்டு....
வெளியேறியே விட்டது ....
உன்னை நான் ....
இழப்பதில் கவலையில்லை ...
என் குழந்தைகளை ....
இழக்க நான் தயாரில்லை ...!!!

&
கவிப்புயல் இனியவன்

திரும்பி பார்க்கிறேன் ..

எமனின் .....
பாசக்கயிற்றில் தப்பினார் ...
மார்க்கண்டேயர் ....!!!

எந்தப்பெண்ணின் காதல் கயிற்றில்...
தப்பமுடியாது மார்-கண்டேயர்கள் ...!!!

யாரவது ஒருவர் காதலில் விழாதவர் ..
யாரும் இருந்தால் தயவுசெய்து ..
தொடர்புகொள்ளுங்கள் ...
அதிசயமனிதனை பார்க்கவிரும்புகிறேன்...?
நானிருக்கிறேன் என்றது ஒரு அசதி ...?

திரும்பி பார்க்கிறேன் ......!!!!!!!!!
*
*
*
*
*
இறந்த உடலொன்று ....!

&
நகைசுவை கவிதை
(கானா கவிதை )
கவிப்புயல் இனியவன்

கானா கவிதை

சிரித்துக்கொண்டு ......
விளையாடினேன் ..
சிறுவயதில் உள்ளே வெளியே ...
இப்போ ஏக்கத்தோடு .......
பார்க்கிறேன் ...
என் இதயத்துக்குள் ....
உள்ளே - வரப்போகிறாயா ...?
வெளியே- செல்லப்போகிறாயா ...?

&
நகைசுவை கவிதை
(கானா கவிதை )
கவிப்புயல் இனியவன்

நகைசுவை கவிதை

இடது இதய அறையில் இருந்த ...
காதலியை காணவில்லை ...
வலது இதய அறையில் தனியாக இருந்து ..
அழுதுகொண்டிருக்கிறேன் ....!!!

காதலியை கண்டுபிடித்து தாருங்கள் ..
என்று கேட்கமாட்டேன் ...
அப்படிப்பட்ட காதல் தேவையில்லை ...
அவள்வரும் வரை அறை காலியாகவே ...
இருக்கும் என்று சொல்லி விடுங்கள் ....

தயவு செய்து காலியாகத்தானே ...
இருக்கிறது என்று யாரும் வாடகைக்கு ...
வரவேண்டாம் ...!
அது அவளின் அறை மட்டுமே ....!

&
நகைசுவை கவிதை
(கானா கவிதை )
கவிப்புயல் இனியவன் 

என்னை நீ பிரிந்ததால்...

வானத்தில்.....
அமாவாசையன்று ..
நட்சத்திரங்கள் அகதிகள்

வனத்தில் .....
காடுகள் அழிந்தால்
மிருகங்கள் அகதிகள்

பூக்கள் ......
வாடி விட்டால்...
தேனிக்கள் அகதிகள்

என் .....
காதல் தேசத்தில்....
என்னை நீ பிரிந்ததால்...
நானும் ஓர் அகதி தான்...!!!

&
கவிப்புயல் இனியவன் 

சனி, 26 நவம்பர், 2016

நமக்கிடையில் பிரிவு ???

உன் உயிரில் நானும் ...
என் உயிரில் நீயும் ...
உன் நினைவில் நானும்...
என் நினைவில் நீயும்...
உன் மூச்சில் நானும் .....
என் மூச்சில் நீயும் ...
நம் காதல் இருப்பதால் ...
நம் உறவை யாராலும் ...
அணுகவே இயலாது...
அப்படி இருக்கையில்...
எப்படி வரும் .......
நமக்கிடையில் பிரிவு ???

நமக்கிடையில் பிரிவு ???

உன் உயிரில் நானும் ...
என் உயிரில் நீயும் ...
உன் நினைவில் நானும்...
என் நினைவில் நீயும்...
உன் மூச்சில் நானும் .....
என் மூச்சில் நீயும் ...
நம் காதல் இருப்பதால் ...
நம் உறவை யாராலும் ...
அணுகவே இயலாது...
அப்படி இருக்கையில்...
எப்படி வரும் .......
நமக்கிடையில் பிரிவு ???

&
KAVIPUYAL INIYAVAN

எங்குமே எப்பவும் பிரிந்ததில்லை....!!!

நான்
தொலைந்து போகும்
தருணங்கள் எல்லாம்
என்னை தேடுகிறேன்
உடல் மட்டும் இருக்கிறது ...
உயிரைக்காணவில்லை...!!!

இதெல்லாம்
உன் வரவின் பின் தானே...?
மற்றபடி என்னை விட்டு நான் ....
என்றுமே புரிந்ததில்லை ....
என் உயிரும் உடலும்
எங்குமே எப்பவும் பிரிந்ததில்லை....!!!

&
கவிப்புயல் இனியவன் 

மறக்கமுடியவில்லை .....!

மறக்கமுடியவில்லை .....!
கவிப்புயல் இனியவன்
--------------
காற்றை நேசித்தேன் ...
உணர முடிந்தது ...
பார்க்க முவியவில்லை ...

கடலை நேசித்தேன் ...
பார்க்கமுடிந்தது ...
கடக்க முடியவில்லை ...

கடவுளை நேசித்தேன் ...
நம்பிக்கை வந்தது
நிரூபிக்க முடியவில்லை

உன்னை நேசித்தேன் ..
நினைவுகள் வந்ததால் ..
மறக்கமுடியவில்லை .....!

நீ என்னுள் நுழைந்த பின்

என் 
கனவுகளும் இனித்தன..... 
கற்பனைகள் சுவைத்தன....
நினைவுகள் மலர்ந்தன 
கவிதைகளும் காட்டாறாய் வந்தன ...
அத்தனையும் நிகழ்ந்தது ....
நீ என்னுள் நுழைந்த பின்.....!!!

&
KAVIPUYAL INIYAVAN

அன்னையும் சென்னையும் ...!


 அன்னையும் சென்னையும் ...!


கவிப்புயல் இனியவன் on Tue Apr 09, 2013 8:31 pm
உப்பிட்டவரை உள்ளலவுவரை நினை சொன்னாள்
என் -அன்னை ....!
வந்தாரை வாழவை என்கிறது உங்கள் -சென்னை

உங்களைப் பெற்றது -அன்னை
உங்களை வளர்ப்பது -சென்னை ...!

கையோரம் வைத்து வளர்க்கிறாள் -அன்னை
கைத்தொழிலால் வளர்க்கிறாள் -சென்னை ...!

அன்பால் வளர்க்கிறாள் -அன்னை
ஆவின்பால் தருகிறாள் -சென்னை ...!

(நான் அறிந்த சென்னையை கொண்டு சில வரிகள் )

என்ன‌ பயன் ..?

என்ன‌ பயன் ..?

கவிப்புயல் இனியவன் on Mon Apr 08, 2013 2:59 pm
நண்டுக்கு ......
எட்டுக்கால் ‍..இருந்தும்......
என்ன‌ பயன்..? 
அது நேராக‌ நடக்காதே...?

உனக்கு .....
எட்டு குணமிருந்தும் ..
என்ன‌ பயன் ..?

உன்னால் .....
நேர்மையான‌ காதலை......
தரமுடியவில்லையே...!

கல்லூரிக்கு வராமல் ....


கல்லூரிக்கு வராமல் ....

கவிப்புயல் இனியவன் on Mon Apr 08, 2013 5:32 pm
நீ இப்படி 
என்னை ஏமாற்றுவாய் 
என்று தெரிந்திருந்தால் ......
கல்லூரிக்கு வராமல் ....!!!

கல்வாரிக்கு 
போயிருப்பேன் ...
கற்சிப்பாச்சாரியாரிடம் .......
போயிருப்பேன் ..
இதயத்தை எப்படி ......
கல்லாக்குவதென்று ..
கற்பதற்கு ...!
இபோதுதான் விளங்குகிறது ....
மாவல்லபுரம் வர ......
நீ மறுத்தாய் என்று ...?

குடும்பத்துடன் போசுவதே ........

இன்று ......
குடும்பங்களின் நிலைமை....
குடும்பத்துடன் போசுவதே ........
கிடையாது ......!!!

இருந்தால் .......
போல் தனியே இருந்து ....
சிரிக்கிறார்கள் ...
மௌனமாக ஓரக்கண்ணீர் .....
வடிக்கிறார்கள் .........!!!

உரத்த குரலில்
திடீரென கத்துகிறார்கள் ....
உறவினரை கண்டால் ....
வாய்க்குள் ஒரு சிரிப்பு ...........!!!

இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது ....
தொலைக்காட்சி .....!!!

&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எங்கள் வருங்கால சந்ததி ...!!!

முட்டை ....
கூடை சுமப்பவனே ..!
கவனம் நீ சுமப்பது ....
வெறும் முட்டை அல்ல....
எங்கள் வருங்கால சந்ததி ...!!!

&
சின்ன கவிதை
கவிப்புயல் இனியவன் 

மனைவியின்விருப்பத்தை கண்டறிவோர்

ஒரு கல்லை எடுத்தேன் ..!
நண்பன் சொன்னான் ....
மரத்துக்குஎறியப்போகிறான் ..
என்றான் .....!!!

நண்பி  சொன்னால் ....
அருகில்குட்டைக்குள் ...
எறியப்போகிறான் ......!!!

கையில் இருந்த கல் ...
கெஞ்சியது என்னை ....
ஒருமுறை வானத்தை நோக்கி ....
எறிந்து விடு .........
எனக்கும் உயரபோக .....
விருப்பம் இருகிறது ..............!!!

நாம் ....
பிறர் விருப்பத்தையும் .....
நம் விருப்பத்தையும் ......
நிறைவேற்றுகிறோம் ......
நம்மோடு இருப்பவர்களின் .....
விருப்பத்தை நிறைவேற்ற....
தவறுகிறோம் ...............!!!

கணவனின் விருப்தத்தை .....
உறவினர் விருப்பத்தை .....
நிறைவேற்றும் மனைவியின் .....
விருப்பத்தை கண்டறிவோர் சிலரே .......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

வெள்ளி, 25 நவம்பர், 2016

கச்சிதமாய் மறைந்து விட்டன .....!!!

கடலளவு ....
கற்பனையுடன் ...
காட்டாற்று ...
வெள்ளமாய்க்கரை...
புரண்டு ...
வந்த வார்த்தைகள் ...
எல்லாம் கன்னியவள்....
கன்னக்குழிக்குள் ...
கச்சிதமாய் மறைந்து விட்டன .....!!!

சொல்ல நினைத்துத் ...
துடித்தவை தொண்டைக்...
குழிவறை வந்து ...
இருதலைக்கொள்ளிபோல் ...
திணறிக்கொண்டு ...
தடுமாறுகிறது ....!

ஒத்திகை பார்த்து
வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு
முன்னே ஓடியேவிடுகின்றன.
கண்டவுடன்
எப்படி மறைந்து கொள்ளலாம்
என வெட்கப்படும் உன்னால்
என் பாடு சொல்ல வழியில்லையே?

இப்போது சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?
&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

நான் பறித்த கடைசி பூ

நான் பறித்த கடைசி பூ
கவிப்புயல் இனியவன் 2013
-----------
சாமிக்கு பூ பறித்து ..
வைப்பதை பழக்கமாக கொண்டவன் ..
சட்டென்று ஒருநாள்-பூவை
பறித்த என்மனதில் ஒரு -சஞ்சலம்
மரத்தை பார்த்தேன் -அதன் அழுகையை
மலரை பார்த்தேன் -அதன் ஏக்கத்தை
தாயையும் பிள்ளையையும் பிரித்த சோகம்
இதுதான் நான் பறித்த கடைசி பூ

அழுவதற்காக பிறந்தவன்

உன் .....
மடியில் உறங்க ....
அனுமதி கொடு ....
இதயத்தின் சுமையை ....
உன்னோடு பகிர்ந்து ....
கொள்கிறேன் ......
எனக்காக நீ .....
அழுதுவிடாதே.......
அழுவதற்காக......
பிறந்தவன் நானாகவே ....
இருந்து விடுகிறேன் .......!!!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

எங்கு கற்றுக்கொண்டாய் ......

நீ என் இதயத்துக்குள் ....
புகுந்தபோதும் ....
விலகிய போதும் ...
மெதுவாக வந்து .......
மெதுவாக விலகிவிட்டாயே ....
எந்த வித வலியுமில்லாமல்....
எங்கு கற்றுக்கொண்டாய் ......
இந்த கலையை ..?

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை 

காதல் கொலைகாரன்

காதல் பைத்தியம்
-------
காதலரின் பெயரை சுவரில்
மற்றும் கையில் எழுதுபவர்கள் ..!

காதல் முட்டாள்கள்
-------
காதலருடன் சண்டையிட்டபின்
காயங்களை ஏற்படுத்துபவர்கள்
தனக்கு தானே கையை வெட்டுதல்
.மற்றும் சூடு வைத்தல்..!

காதல் கோழைகள்
--------
காதலில் தோற்றதும்
தற்கொலை செய்பவர்கள் ...!

காதல் வெறியன்
--------
காதலின் பெயரில் ஏமாற்றி
கற்பை சூரையாடுபவன் ...!

காதல் கொலைகாரன்
--------
காதல் நிறைவேற்றவில்லை
என்றவுடன் பழிவாங்க துடிப்பவன் ...!

காதல் பயங்கரவாதி
---------
காதலியின் முகத்தில்
அசிட் வீசுபவனும்
கொலைசெய்பவனும்...!

&
கவிப்புயல் இனியவன் 

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!

தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!
கவிப்புயல் இனியவன் 2013
---------
தனிமை...
எல்லோருக்கும் கிடைக்காத தவம்...!
அதுவே ஒரு சிலருக்கு வரம்..!
கவிதைகளின் ....
கதைகளின் பிறப்பிடம்...!
கனவுகளின் உறைவிடம்..!
கடந்தகாலத்தை மீள்படிக்க
உதவும் நாற்குறிப்பேடு..!
என்னை நானே உற்றுப்பார்த்திட
வழி செய்யும் கண்ணாடி...!
மெளனத்தின் வழி
பலநூறு கதை சொல்லும் கருவூலம்..!
காதடைக்கும் இரைச்சல்விடுத்து
இதம் சேர்க்கும் தியானபீடம்...!
இது……….
எல்லாம் இருந்தும்….
இளைப்பாற சில பொழுதுகள்
தனிமை சேர்பவன் மனநிலை....!!
தனிமை கொடுமையல்ல இனிமை ...!!!
&
கவிப்புயல் இனியவன்

வியாழன், 24 நவம்பர், 2016

கடலுக்குள் செல்ல ஆசை.....!!!

கடலில் சுதந்திரமாக ..
தூண்டிலிலும் வலையிலும் ...
சிக்காத கடல் மீனுக்கு -வீட்டில்
உள்ள கண்ணாடி பளிங்கு தொட்டிக்குள்
குமிழியுடன் வரும் கற்றை
சுவாசிக்க ஆசை ........!!!

கண்ணாடி
தொட்டிக்குள் இருக்கும் மீனுக்கோ
சொகுசு சிறையில் இருந்து வெளியேறி
சுதந்திரமாக திரியும்
கடலுக்குள் செல்ல ஆசை.....!!!

&
முரண் பட்ட ஆசைகள்
கவிப்புயல் இனியவன் 

தனிமை கொடுமையிலும் கொடுமை ...

தனிமை...
அது ஒரு பெரும் வலி...!
ஒரு கிடைக்கக்கூடாத சாபம்..!
தவறுகளின் பிறப்பிடம்...!
தண்டனையின் உறைவிடம்..!
பிரிவுத்துயர் சொல்லித்தரும்
கலாசாலை..!

கவலைகளுக்கு தூபமிடும் பலிபீடம்..!
வெறுமையின் வாசிகசாலை..!
பசிப்பவனின் வெற்றுக்கோப்பை..!
வாய் இருந்தும் நாவறுந்ததாய்..
கேள்செவியிருந்தும் செவிடானதாய்...
எண்ணத்தோன்றும்  கொடிய நிலை ....!!!

உறவுகள் பிரிந்து....
தனிமையின் பிடியில்.......
கோரமாய் சிக்கிக்கொண்டவன் ......
மனநிலை…!!
தனிமை கொடுமையிலும் கொடுமை ...

&
கவிப்புயல் இனியவன்
சமுதாய கவிதை 

பிணக்கு இல்லாமல் பிரிவதே ...!

நானோ .....
பூவின் மென்மையில் ..
இருக்கிறேன் ....!
நீயோ ......
வண்டின் குணத்தில் .......
இருக்கிறாய் ...!
காதல் என்றால் ......
ஒன்று பட்டு வாழவேண்டும் ..!
இல்லையேல் ....?
நல்ல காதலுக்கு அழகு ...!
பிணக்கு இல்லாமல் பிரிவதே ...!

&
கவிப்புயல் இனியவன்
சின்ன சின்ன கிறுக்கள்

எத்தனை ஜென்மாவும் பிறப்பெடுப்பேன் ..........!!!

உன்னை காதலிக்கும் .....
பாக்கியத்தை நான் இந்த ....
ஜென்மத்தில் பெறவில்லையடா ....
எனக்காக அடுத்த ஜென்மம் ....
பிறந்துவிடு உன்னை ....
காதல் செய்தே ஆகவேண்டும் .....!!!
உன் கவிதைக்காக ....
எத்தனை ஜென்மாவும்
பிறப்பெடுப்பேன் ..........!!!

&
கவிப்புயல் இனியவன்
சின்ன சின்ன கிறுக்கள்


இறந்து விடு என்று சொல்...!!

இறந்து விடு என்று சொல்...!!
மறுபடியும் பிறந்து வருவேன்..
மறந்து விடு என்று...!!!
சொல்லாதே ஒரு நொடி கூட
இருந்துவிடமாட்டேன் ...!!!

&
கவிப்புயல் இனியவன்
சின்ன சின்ன கிறுக்கள்

நட்பும் காதலும் கவிதை

இறைவா
எனக்கு ஒரு வரம் தா ..?
காதல் உணர்வை என்னில் இருந்து
தயவு செய்து எடுத்துவிடு ....!
நான் அவனை உயிர் நண்பனாகவோ
உயிர் காலம் வரை நினைக்க ..........
விரும்புகிறேன்

இடைக்கிடையே பாழாய்ப்போன
மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....!
நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்......
அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை
இறைவா .......
என் காதல் நரம்பை துண்டித்து விடு ...!

&
கவிப்புயல் இனியவன்
நட்பும் காதலும் கவிதை

புதன், 23 நவம்பர், 2016

அவள் கண்ணீரில் ......!!!

ஆழம் ....
அதிகமில்லைதான் ....
என்றாலும் ....
விழுந்துவிட்டேன் .....
அவள் கன்னக்குழியில் ...!!!
தண்ணீர் .....
அதிகம் இல்லைத்தான்....
என்றாலும்...
நனைந்துவிட்டேன்......
அவள் கண்ணீரில் ......!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்

தனியே இருந்து சிரிக்கிறேன் ...

இனியவன் .......!!!
----------------
அது எப்படி நீ மட்டும் ..
சாதாரணமாக வந்துபோகிறாய் ....?
நானோ உன்னை கண்டவுடன் ...
காற்றில் பறக்கிறேன் ...
கனவில் மிதக்கிறேன் ...
தனியே இருந்து சிரிக்கிறேன் ...

இனியவளே .......!!!
-----------------
போடா அம்மு .......
நீ வேதனை மட்டும் ......
படுகிறாய் ...நானோ ..
உன்னை கண்டவுடனேயே
செத்து செத்து பிழைப்பதை
யாரறிவார் ...?

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்

செவ்வாய், 22 நவம்பர், 2016

என்னை எடுத்து விடு ....!!!

நீ
கானல் நீர் ....
உன்னை துரத்தும் ....
கலை மான் நான் ....!!!

என்னை
இதயத்தில் வைத்து
மூச்சு திணறுகிறாய் ....
முடியாவிட்டால் ....
என்னை எடுத்து விடு ....!!!

கருத்தை பிரித்த .....
எழுத்தைப்போல் ....
சடப்பொருளாய் ....
நான் வாழ்கிறேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1060
கவிப்புயல் இனியவன்

கண்ணீர் விட்டு வளர்க்கிறேன் .....!!!

நீ
தந்த காதல் மலரை
கண்ணீர் விட்டு ....
வளர்க்கிறேன் .....!!!

நீ
என் இதய தேன்....
கூட்டில் ராணி தேனீ ....
உனக்கும் சேர்த்து ....
தேன் தருகிறேன் ....
போதையில் மயங்கி ....
என்னை மறந்து விடாதே ....!!!

உன்னால் இறந்த .....
காலத்தில் வாழ்கிறேன் .....
நிகழ் கால இன்பத்தை .....
தொலைத்து விட்டேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1059
கவிப்புயல் இனியவன்

விரைவாக சொல் ....!!!

நீ
தீ பந்தமா ....?
தீபமா .....?
விரைவாக சொல் ....!!!

வாடி விழுத்த ....
பூவின் காம்பில் ....
மீண்டும் பூப்பதில்லை ....
காம்புக்கு பூவினால்
காதல் தோல்வி .......!!!

காதல் பாதையில் ......
நீ
குறுக்கு பாதையா ...?
நீண்ட பாதையா ....?

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1058
கவிப்புயல் இனியவன்

திங்கள், 21 நவம்பர், 2016

நிமிர்ந்து நிற்க பழகிக்கொள் ..!

 நிமிர்ந்து நிற்க பழகிக்கொள் ..!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 4:36 pm
மரத்தில் இருந்து
உதிர்ந்திடும் இலைகளை
நினைத்து மரங்கள்
வாடுவதில்லை
தான் உரமாகிறேன் என்று பெருமைபடுகிறது

மேகங்கள் மழையாய்
மாறுவதால் வானங்கள்
அழுவதில்லை
ஆறாகிறேன் என்று கர்வம் கொள்கிறது

சூரியன் ஓரு
பொழுது மறைவதால்
பூமி சுற்றுவதை
நிறுத்துவதில்லை
நாளாகிறேன் என்று தொழில்படுகிறது

ஆனால் ஏனோ - மனிதா ..?
நீ மட்டும் எதையும் இழந்தால்
இடிந்துபோய் இருக்கிறாயே ...?
இயற்கையில் இருந்து கற்றுக்கொள் ..!
நிமிர்ந்து நிற்க பழகிக்கொள் ..!

வருத்தினாலேவெற்றி...!

 வருத்தினாலேவெற்றி...!
----------------
மாணவன்
தன்னை வருத்தினாலே
சிறந்த பெறுபேறு

விளையாட்டு வீரன்
தன்னை வருத்தினாலே-
வெற்றிக்கிண்ணம்

முயற்சியாளன் தன்னை
வருத்தினாலே-
கோடீஸ்வரன்

இறைவனை
காண வேண்டுமாயின் ஞானி
தன்னை வருத்த வேண்டும்

உலகில் வெற்றிகண்ட மனிதர்களில்
யாராவது ஒருவர் தன்னை
வருத்தாமல் வெற்றி பெற்று
இருந்தால் கூறுங்கள் பார்க்கலாம் ..?

&
வாழ்க்கை கவிதை
கவிப்புயல் இனியவன் 

ஒன்றிருந்தால் மற்றையதும் இருக்கும் ..!

ஒன்றிருந்தால் மற்றையதும் இருக்கும் ..!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 4:30 pm
எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் வரை
ஏமாற்றம் இருக்கும் !
இதில் நட்பென்ன காதலென்ன ..?

நம்பிக்கை அதிகமாக இருக்கும் வரை ..!
துரோகமும் இருக்கும் ..!
இதில் நல்லவனென்ன கேட்டவனென்ன ..?

காதல் இருக்கும் வரை
எதிர்ப்பு ஒன்று இருக்கும்
இதில் அப்பாவென்ன அம்மாவென்ன ..?

வாழ்க்கை ஒன்று இருக்கும் வரை
இன்பம் துன்பம் இருக்கும்
இதில் பணக்காரான் என்ன ..? ஏழையென்ன ..?

ஏன் ஒப்படைக்கவில்லை ....?

உன்னை உன்னிடத்தில் ...
ஒப்படைத்து விட்டாய் .....
என்னை என்னிடத்தில் .....
ஏன் ஒப்படைக்கவில்லை ....?

உன்னை உன்னிடத்தில் ....
ஒப்படைக்க வந்த துணிவு ..
என்னை என்னிடத்தில் ......
ஒப்படைக்க வரவில்லை ..?

உன்னை என்னிடத்திலும் ....
என்னை உன்னிடத்திலும் ....
ஒப்படைத்தமைக்கு ........
காதல் என்றே அர்த்தம் ....!

என்னை என்னிடத்தில் ......
ஒப்படைக்காமல் ...
உன்னை உன்னிடத்தில்
ஒப்படைத்ததை எப்படி ..?
சொல்லுவது ...?
நிச்சயமாக இது பிரிவு இல்லை..!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதைகள்

புன்னகைத்துக்கொண்டு

நீ கை அசைத்து ....
தூர செல்ல செல்ல....
என் தூரப்பார்வை .......
குறைந்து வருகிறது ....!

நீ ...............
புன்னகைத்துக்கொண்டு ..................
அருகில் வர வர ...............
கிட்டியபார்வை
குறைந்து வருகிறது ....!

நீ ஒரு நாள் ...............
வராத போது ................
என் கண்ணுக்கு ............
அமாவாசைதான் ...!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே 

ஞாயிறு, 20 நவம்பர், 2016

நெருக்கமாகிறது ...!

 நெருக்கமாகிறது ...!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 3:36 pm
கவிதையை நீட்டுகிறேன் 
வாங்க மறுக்கிறாய்.
கடிதத்தை நீட்டுகிறேன் 
வாங்க மறுக்கிறாய்.
உன்னை என்னவளாக்கா 
உனக்குஏதேதோபரிசளிக்க 
நினைக்கிறேன் ஆனால், 
அவற்றையெல்லாம் ஒதுக்குகிறாய்.
"உன்னை விடவும் வேறெந்த 
பரிசும் தேவையில்லை" 
என்றுசொல்கிறாய்....
ஆனால் ஒன்று உனக்கு தெரியுமா ...?

ஆசை ஆசையாய் சின்ன சின்ன 
பொருட்களை வாங்கி தருவதில்
தான் காதல் இன்பம் கண்டு 
நெருக்கமாகிறது ...!

ஒரு கேள்வியை கேட்டிருக்கலாம்...

 ஒரு கேள்வியை கேட்டிருக்கலாம்...?

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 4:03 pm
உன்னிடம் நான் சொல்ல....
மறந்த வார்த்தைஆயிரம் ஆயிரம்
உன்னிடம் கேட்க‌ இருந்த‌ கேள்விகளும்..
ஆயிரம் ஆயிரம் ...ஆனால் 
ஒரு வார்த்தையை...
ஒரு கேள்வியை கேட்டிருக்கலாம்...
."நீ என்னை விரும்புகிறாயா...? என்று...!

என் கைத்தொலைபேசியில் ...?

என் கைத்தொலைபேசியில் ...?

 கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 4:05 pm
என் கைத்தொலைபேசியில் ...
உன் படத்தை அசையும் படமாக ..
வைத்திருக்கிறேன் ....

விரும்பும் போது சிரிப்பாய்....!
கண்ணடிப்பாய் ....!
முத்தமிடுகிறாய் ...!

நீ என்னை விட்டு சென்றவுடன் ...!
அதுதான் என் காதலி ........!

கவிதை ஞானி ...!!!!!!!!!!!!


 கவிதை ஞானி ...!!!!!!!!!!!!

  கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 3:44 pm
கவிதைகளை 
அழகாக்குவது பொய்கள் தான் ,,
அதை உணர்ந்து படிப்பவன் ரசிகன்..
அதை ஏற்று கொண்டவன் பித்தன் ..
அதை உணர்ந்து கொண்டவன் ஜித்தன்

கவிதை எப்போதும் 
உண்மையாக இருக்க வேண்டும் 
என எதிர்பார்பவர்கள் 
கற்பனைவளம் அற்றவர்கள் .....!

கவிதை தனக்கு 
பொருந்தவில்லை என 
நிராகரிப்பவர்கள் சுயநலவாதிகள் ... !

கவிதைகள் 
பொய்யாகவும் கற்பனையாகவும்
இருக்கலாம் அதில் உண்மைகள் 
இல்லாமல் இருக்கவும் முடியாது .. 
எப்போதும் உண்மையாக இருக்க இருக்கவேண்டுமென்றுமில்லை ....!

கவிதை ஒரு சமூகக்கருவி 
சமூக மாற்றத்துக்கேற்ப 
மாறும் மாறவேண்டும்
தனிபார்வையை விட்டு 
சமூகப்பார்வையால்
பார்ப்பவன் மட்டுமே ..
கவிதை ஞானி ...!!!!!!!!!!!!

காதல் மழை எல்லோர் மீதும் ..?

 காதல் மழை எல்லோர் மீதும் ..?

  கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:42 pm
காதல் மழை எல்லோர் மீதும் ..
பொழிகிறது ....

வெளியே போனால் சுரம்
பிடிக்கும் என்று இருந்தால்
ஒருதலைக்காதல்.....!

முழுக்க நனைந்தால் ...
காமக்காதல்...!

மழையை பொருட்படுத்தாமல்...
நனைந்து சென்றால்...
உண்மைக்காதல் ....!

பட்ட மரம் மகிழ்கிறது

 பட்ட மரம் மகிழ்கிறது

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:05 pm
உடளும் பட்டுவிட்டது ...!
உயிரும் பட்டுவிட்டது...!
பூமிதாயின் துணையுடன் நிமிர்ந்து..
நிற்கிறேன் 
அவ்வளவுதான் என் நிலை..

பட்டாலும் என்மீது வண்ணவண்ண‌...
பறவைகள் இளைப்பாறுவதை...
பார்க்கும் போது துள்ளிக்குதிக்குது மனசு...
மரம் கொத்திப்பறவை என்மீது..
இசையமைப்பது .....
இன்பமாகத்தான் இருக்கிறது ...!

என்மீது பொந்தென்னும் வீட்டைக்கட்டி...
குடித்தனம் நடார்த்தும் சோடிக்கிளிகாலுக்கு..
இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன‌...
பூமித்தாயே இறுக்கமாக‌ என்னைபிடி...

இளங்குடும்பத்தை பிரித்த‌ பாவம் ..
உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்..
பூமிக்குள் போகும்வரை 
மகிழ்வாக‌ இருப்போமே...!

பட்ட மரம் மகிழ்கிறது

 பட்ட மரம் மகிழ்கிறது

 கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:05 pm
உடளும் பட்டுவிட்டது ...!
உயிரும் பட்டுவிட்டது...!
பூமிதாயின் துணையுடன் நிமிர்ந்து..
நிற்கிறேன் .அவ்வளவுதான் என் நிலை..

பட்டாலும் என்மீது வண்ணவண்ண‌...
பறவைகள் இளைப்பாறுவதை...
பார்க்கும் போது துள்ளிக்குதிக்குது மனசு...
மரம் கொத்திப்பறவை என்மீது..
இசையமைப்பது 
இன்பமாகத்தான் இருக்கிறது ...!

என்மீது பொந்தென்னும் வீட்டைக்கட்டி...
குடித்தனம் நடார்த்தும் சோடிக்கிளிகாலுக்கு..
இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன‌...
பூமித்தாயே இறுக்கமாக‌ என்னைபிடி...

இளங்குடும்பத்தை பிரித்த‌ பாவம் ..
உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்..
பூமிக்குள் போகும்வரை 
மகிழ்வாக‌ இருப்போமே...!

புது வீடு ...!

 புது வீடு ...!

கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:01 pm
கருங்கல் மலையை உடைத்து ....
கற்துகள் கொண்டு கட்டுகிறாய் ..
அழகான வீடு - அப்பாப்பா என்ன ..?
வலிமை மனிதா உனக்கு ...?

கருங்காலி மரத்தை வெட்டி ...
அழகழகான கதவு ஜன்னல் செய்து ...
அழகான வீடு கட்டும் மனிதா ..
என்ன வலிமையப்பா உனக்கு ...?

நதிகொண்டு நீர் வந்து ....
நயனங்கள் பலகொண்டு...
கலைனயங்களோடு....
அழகான வீடு கட்டும் மனிதா ..
என்ன கலைநயமப்பா உனக்கு ...?

குடியிருக்காப்போகும் ...
குடியிருப்பில் நிம்மதியை
எங்கிருந்து கொண்டுவரப்போகிறாய் ...?

சனி, 19 நவம்பர், 2016

இயந்திர உலகில் ...?

இயந்திர உலகில் ...?

 by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:36 pm
இயந்திர உலகில் ...........!!!
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!-நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்
சிறியமுள் -உன் உயர்வு
வினாடி முள் -உன் முயற்சி
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது உன் 
முன்னோர் சொன்னது ..!

இதுதான் வேறுபாடு ...!


இதுதான் வேறுபாடு ...!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:10 pm
இதயத்தை கிள்ளிப்பார்த்துவிட்டு ..
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!

இதயத்தை கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!

எப்படி அழுகிறாய் மெழுகுதிரியே..?

எப்படி அழுகிறாய் மெழுகுதிரியே..?

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:34 pm
இருட்டை விலக்க
ஏற்றப்பட்ட நீ
ஏன் அழுகிறாய் ..?
இருட்டுகள் எல்லாம் உன்னை
மிரட்டுகின்றவனோ...?
எப்படி உன்னால் மட்டும்
அழுதுகொண்டே பிரகாசமாக
சிரிக்கவும் முடிகிறது ...?

மனம் திறந்து பேசுகிறாய் நண்பா ....!

மனம் திறந்து பேசுகிறாய் நண்பா ....!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:26 pm
நண்பா ....
நீ எப்போதும் மனம் திறந்து பேசுகிறாய் ...
எதிரிகளைக்கூட நண்பனாக்க விரும்புகிறாய் ..
நீ எனக்கு கிடைத்த நிலையான சொத்து ...
ஒரு அறிவுரை கேட்பாயா ...?
மனம் திறந்து பேசு ....
ஆனால் மனதில் பட்டதெல்லாம் ..
பேசாதே ....
சிலர் புரிந்து கொள்வார்கள் ...
சிலர் பிரிந்து செல்வார்கள் ....
இரண்டிலும் நன்மைகளும் உண்டு ..
தீமைகளும் உண்டு .....

காதலிக்க முன் தெரிந்து கொள் ...!

 காதலிக்க முன் தெரிந்து கொள் ...!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:21 pm
காதலிக்கப் போறவர்களே 
காதலிக்க முன் தெரிந்து கொள் ...!

காதல் ஒரு காவியம்;
காவியகதைகளில்
சோகங்கள் உண்டு 
சோகத்தை தாங்க தயாராக இரு ...!

காதல் ஒரு சமுத்திரம்; 
விழுந்தால் மூழ்குவாய்
மூழ்காமல் இருக்க கற்றுக்கொள் ...!

காதல் ஒரு கத்தரிக்காய்; 
சிலவேளை புரியும் சில 
வேளை ருசிக்கும் சில வேளை கருகும் ..!

காதல் ஒரு கானல் நீர்; 
உண்மைபோல் சில விடையங்கள் 
தெரியும் ஆனால் அது முழுப்பொய்

காதல் ஒரு கண்ணாடி ; 
உன்னையே நீ பார்த்து சிரிப்பாய் அழுவாய் ...!

காதல் ஒரு கற்பூரம்; 
காதல் வெற்றியோ தோல்வியோ 
அடைந்தால் இறுதியில் ஒன்றுமே 
இல்லை என்று உணரப்பண்ணும்...!

காதல் ஒரு காற்று;
தென்றலும் உண்டு புயலும் உண்டு ...!

காதல் ஒரு நட்பு ;
தியாகம் செய்யத்தயாராக 
இரு நட்புதான் கலங்காமல் 
தியாகம் செய்யும்...!

காதல் ஒரு கற்பு ; 
உடலும் உணர்வும் தண்டவாளம்
போன்றது காதலிக்கும் போது 
இவை இணையக்கூடாது ..!

காதல் ஒரு கலாச்சாரம் ;
காதலின் பண்பாடும் பழக்கங்கலும் 
மரபு வழியாக கடத்தும் பண்போடு
காதலிக்கவும் ..!

காதல் ஒரு ஆசான் : 
வலியாலும் வெற்றியாலும்
வாழ்க்கை வரும் அதனால் 
உனக்கு கவிதையும் வரும்
தமிழ் தாய் வளர்தெடுப்பாள்...!

காதல் தான் உலக வாழ்க்கை 
காதலில்லாமல் வாழ்ந்திடாதே 
வாழவும் முடியாது ..!

என் உயிர் நண்பனாக ...!

 என் உயிர் நண்பனாக ...!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:13 pm
மரணம் வரை மறக்காத 
இதயம் வேண்டும்.....
மீண்டும் ஜனனம் 
இருந்தால் நீயே வேண்டும்...
உறவாகவோ உடன் பிறப்பாகவோ 
அல்ல...
என் உயிர் நண்பனாக ...!

கனவு கண்டமரம் ....?

கனவு கண்டமரம் ....?

கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:07 pm
மரம் ஒன்று தோப்பாவேன் என்று ..
காத்திருந்தது .......

கோடாரிப்பிடிகள் தயாராகின ..
இலை உதிர்காலம் நீண்டது மறுபுறம் ...

பட்டுப்போன கிளைகள் முறியத்தொடங்க்கின ...
ஆறுதலாக இருந்த பறவைகளும் -தம் வீட்டை
மாற்றின ....

தனிமரமானது..... கனவு கண்டமரம் ....
மரங்கொத்திகக்ள் இசைமீட்க தொடங்கின ....

எல்லாப்பருவத்திலும் நட்பு...!

 எல்லாப்பருவத்திலும் நட்பு...!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:17 pm
காதல் ஒரு பருவத்தில் 
தான் வரும் ஆனால் நட்போ 
எல்லாப்பருவத்திலும் வரும் அவை ...

மழலைப் பருவத்தில் நட்பு : 

உனக்கு என்னைத்தெரியாது 
என்னை உனக்கு தெரியாது
நீயும் கையசைத்தாய் நானும் 
கையசைத்தேன் ..
அவ்வளவுதான் ..ஆனாலும் 
அதில் புரியாத சுகம்
உண்டு ...........!!!!

குழந்தைப் பருவத்தில் நட்பு : 

நீயும் நானும் விளையாடுவோம் 
கிடைத்தவற்றால் அடிபடுவோம் 
மீண்டும் சந்திப்போம் ..
பகமையென்றால் என்ன 
என்றே தெரியாத நட்பு ..!

காளைப் பருவத்தில் நட்பு :

சுற்றுவதற்கு நட்புத்தேவை 
வீண் சண்டைக்கு நட்புத்தேவை ..
இளங்கன்று பயமறியாத நட்பு ...!

வாலிபப் பருவத்தில் நட்பு : 
என் வலியையும் சுகத்தையும் 
சொல்லவும் கேட்கவும் ஆறுதல் 
தரவும் நட்புத்தேவை ....!

முதிர்ந்த பின் நட்பு :
வாழ்க்கையின் துன்பங்கள் 
துயரங்கள் இழப்புக்களை 
அனுபவங்களைப்பகிர்ந்து 
கொள்ளஒரு நட்பு தேவை ..!

நட்புக்கு எல்லையே இல்லை .......!

அன்புத்தோழியே ...!


அன்புத்தோழியே ...!

 கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:24 pm
என்னையே யார் ....
என்று நானே கேட்ட காலமுண்டு ...
என்னை எவரும் விரும்பும் அளவுக்கு ..
மாற்றியவள் நீ ...
ஆனால் நாம் காதலர்கள் -அல்ல ..

அன்புத்தோழியே மறு பிறப்பு இருந்தால் ..
நீ கருவுறும் வயிற்றில் நானும்
கருவாக வேண்டும் ...
இல்லையேல் உன் கருவறையில்
ஒரு இடம் கொடு உனக்கு குழந்தையாக
பிறக்க .....!

பசியில் வேறுபாடு ...!

பசியில் வேறுபாடு ...!

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 11:58 am
ஏழையின் வீட்டில் ...
பசி வயிற்றில் பிறக்கிறது ...
செல்வந்தன் வீட்டில் ...
பசி கண்ணில் பிறக்குறது ...

ஏழையின் வீட்டில் ...
வயிறுதான் அடுப்பாக எரியும் ...
செல்வந்தன் வீட்டில் ...
விதவிதமான அடுப்புக்கள் எரியும் ..

ஏழையின் வீட்டில் ...
பசிதான் நோய்க்கு காரணி ..
செல்வந்தன் வீட்டில் ...
நோய்நீக்கும் காரணி பசி ...!

கல்லறையாகி விடுவேன் ...

கல்லறையாகி விடுவேன் ...

Post by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 8:52 am
நீ என்று என்னை பார்த்தாயோ ...
அன்று முதல் குருடனாகி விட்டேன் ...
நீ என்று என்னுடன் பேசினாயோ ...
அன்று முதல் ஊமையாகி விட்டேன் ...
நீ என்று என்னை தொட்டாயோ ...
அன்று முதல் சிலையாகி விட்டேன் ...
நீ எப்போது பேசாமல் விடுகிறாயோ ...?
அன்று கல்லறையாகி விடுவேன் ...

புத்தகமூடை ...!


புத்தகமூடை ...!

கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 8:43 am
கள்ளம் கபடமற்ற 
திறந்த புத்தகங்கள்தான் ...
நம் குழந்தைகள் ..
அதனால் தான் 
அயலவரையே
பார்க்காமல் திறந்த 
புத்தகமாக பேசுகிறது ....

வேதனை 
குழந்தையின் முதுகில் ...
சுமக்க முடியாத புத்தகமூடை ...
கூனியின் கதையை படிப்பதற்காக ..
கூனிப்போனார்கள் 
நம் குழந்தைகள் ...!