இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 மே, 2017

உணவை விரயமாக்காதீர்........

யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
-------------------------------------------------

அதிகாலையில் துயில் எழுந்து ...
தூரத்துபார்வை தெரியாத பொழுதில் ...
தலையிலே கம்பீர தலைப்பாகை ...
கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ...
தோளிலே மண்வெட்டி - உழைப்பையே
காட்டும் விவசாய பாரதி -நீ
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

கொட்டும் மழையில் ....
உடல்விறைக்க.உழைப்பாய்  .......
வாட்டும் வெயிலில் ...
குருதியே வியர்வையாய் .......
வெளிவர உழைப்பாய் .............
நட்டுநடு ராத்திரியில் ...
காவல் செய்யவும் புறப்படுவாய் ..
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

பட்ட விவசாய கடனை அடைக்க
பட்டையாய் உடல் கருகி ....
விற்று வந்த வருவாயை ..
கடனுக்கே கொடுத்துவிட்டு ...
அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!
அதுவரையும் காத்திருக்கும் -துணிவு
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

உச்ச அறுவடை பொழுதினிலே ...
உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே ..
நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்...
பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான ....
விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் .....
அப்போதும் சிரித்தமுகத்துடன் ....
அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் .....
இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட.....
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

நச்சுபொருளுடன் ..........
நாளாந்தம் விளையாடுவாய் ...
இத்தனை துன்பம் வந்தாலும் .....
நச்சு பொருளை உண்டு மடியாத ....
உன் மனதைரியம்...!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

காதலில் தோற்றால் நஞ்சு .....
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....
இத்தனை துன்பம் வந்தபோதும்.....
நஞ்சை அருந்தாதவிவசாய தோழனை .........
நான் உணவு தரும் ......
கண்கண்ட கடவுள் என்பேன் ......
வணங்குகிறேன்.....................!

உணவை விரயமாக்காதீர்........
சிதறிகிடக்கும் சோறு ஒவ்வொரும்......
இறந்து கிடக்கும் விவசாயியின்......
உடல் என்பதுபோல் கற்பனை செய்.....
உன்னை அறியாமல் கண்ணீர் வரும்.......
அரியும் சிவனும் சேர்ந்ததே "அரிசி"....
ஒவ்வொரு சோறும் இறைவன்.............!

&&&
கவிப்புயல் இனியவன்
( இந்த கவிதையை விவசாயிகளுக்கு சமர்பிக்கிறேன் )

சின்ன கிறுக்கல்

இன்று என்னை
........பிரிந்தாலும்..!
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும் ....!
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!

&
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்

^^^

எனக்கொரு ஆசை ...
நீ ....
ஒருநிமிடமாவது ....
எனக்காக வாழ்வதை ....
நான் பார்க்கணும் ....!

&
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்

^^^

ஞாயிறு, 28 மே, 2017

நான் எழுதுவது கவிதை இல்லை

நான் எழுதுவது கவிதை இல்லை
-----------------------------------------------

கண்டதையும் கேட்டதையும்....
கண்டபடி கிறுக்குகிறேன்.......
யார் சொன்னது நான்...............
எழுதுவது கவிதை என்று ....?

பயணம் பல செல்கிறேன்.....
பயணத்தில் பல பார்க்கிறேன்.....
பட்டதை  பார்த்த அனுபவத்தை.......
வாழ்க்கை கவிதை  தலைப்பில்.....
கண்டபடி கிறுக்குகிறேன்......
யார் சொன்னது நான்........
எழுதுவது கவிதை என்று ....?


மரம் வெட்டும் போது......
மனதில் இரத்தம் வடியும்.......
எழும் என் உணர்வை......
சமுதாய கவிதை  தலைப்பில்......
கண்டபடி கிறுக்குகிறேன்.......
யார் சொன்னது நான்
எழுதுவது கவிதை என்று ....?


அடிமாடாக அடித்து.....
அடுத்த வேளை உணவுக்கு......
அல்லல் படும் குடும்பங்களை.......
பார்ப்பேன் மனம் வருந்தும்....
பொருளாதார கவிதை தலைப்பில்.....
கண்டபடி கிறுக்குகிறேன்....
யார் சொன்னது நான்........
எழுதுவது கவிதை என்று ....?


காதோரம் கைபேசியை வைத்து.....
கண்ணாலும் சைகையாலும்......
தன்னை மறந்து கதைக்கும்.....
காதலரை பார்க்கிறேன்.......
காதல் கவிதை  தலைப்பில்....
கண்டபடி கிறுக்குகிறேன்.....
யார் சொன்னது நான்.......
எழுதுவது கவிதை என்று ....?

சின்ன வயதில் எல்லோருக்கும்.....
காதல் தோல்வி வரும் -அதை.....
மீட்டு பார்க்கும் போது உயிரே.....
வலிக்கும் .வந்த வலியை கொண்டு....
காதல் தோல்வி கவிதை  தலைப்பில்.....
கண்டபடி கிறுக்குகிறேன்.....
யார் சொன்னது நான்......
எழுதுவது கவிதை என்று ....?

நண்பர்களுடன் சிரிப்பேன்....
நலினமாக பேசுவார்கள்.....
நையாண்டியாக பேசுவர்.......
எடுத்த தொகுத்த வரிகளை கொண்டு.....
நகைசுவை கவிதை தலைப்பில்......
கண்டபடி கிறுக்குகிறேன்....
யார் சொன்னது நான்......
எழுதுவது கவிதை என்று ....?

கஸல் என்பேன் .ஹைக்கூ என்பேன்...
கடுகு கவிதை என்பேன் திருக்குறள்....
ஹைக்கூ என்பேன் காதல் தத்துவம்....
என்பேன் இப்படியேல்லாம் பிசத்துவேன்....
யார் சொன்னது நான்.....
எழுதுவது கவிதை என்று ....?

சினிமாக்களில் மசாலாப்படம்....
சிலவேலைகளில் கருத்து படம்....
என் கவிதையும் இப்படித்தான்.....
மசாலாப்படம் கூடாததுமில்லை.....
கருத்துபடத்தால் சமூகம் வெற்றி ...
பெற்றுவிட்டது என்றும் இல்லை.....
படைப்புகள் மன இன்பத்துக்கே......
எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்
சமூக ஒழுக்கத்தோடு .....!

நான் எழுதும் கவிதையே....
சிறந்தது என்று நினைப்பவன்....
நான் இல்லை - நான் அறிந்ததை....
அவன் அப்படி கேள்வி படுகிறான்....
என்று உணர்பவன் நான் என்பதால்....
கண்டபடி கிறுக்குகிறேன்....
யார் சொன்னது நான்....
எழுதுவது கவிதை என்று ....?

^^^
கவிப்புயல் இனியவன்
இக் கவிதை என் மீள் பதிவு

சனி, 27 மே, 2017

சின்ன சின்ன காதல் வரிகள்

சின்ன சின்ன காதல் வரிகள்
--------------

என்ன கொடுமை
பார்த்தாயா ......?
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு .......
பிரிந்து விட்டோம்
என்கிறோம்........!

^^^

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!

^^^

கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!

^^^

நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
 ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!

^^^

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!

^^^

கவிப்புயல் இனியவன்

அனைத்தையும் காதல் செய்கிறேன்

அனைத்தையும் காதல் செய்கிறேன்
----------------------------------------------

கோபப்படாமல் இருப்பதற்கு....!
வெறுப்பில்லாமல் வாழ்வதற்கு....!

பொறாமைப்படாமல் இருப்பதற்கு...!
மனக் கவலையின்றி வாழ்வதற்கு ...!

உடல் நலத்தோடு இருப்பதற்கு...!
அமைதியோடு வாழ்வதற்கு...!

மகிழ்வோடு வாழ்வதற்கு...!
உழைத்து கொண்டே இருப்பதற்கு...!

அறிவை தேடிக்கொண்டே இருப்பதற்கு...!
தியானித்துக்கொண்டு இருப்பதற்கு...!

எல்லாவற்றையும்காதலித்து கொண்டு .......
வாழ்வோமாக.......................!
காதல் தனித்து பால்கவர்ச்சியல்ல.......!

^^^
கவிப்புயல் இனியவன்
அனைத்தையும் காதல் செய்கிறேன்

வியாழன், 25 மே, 2017

நொடிதான் பார்த்தாள்....

கண்ணால் பேசி....
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!

சில ......
நொடிதான் பார்த்தாள்....
பல நொடிகள் பதறவைத்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!

^^^
கவிப்புயல் இனியவன் 

புதன், 17 மே, 2017

காதல் தோல்வி

எதற்காக என்னை ....
காதல் செய்ய தூண்டினாய் ...?

எதற்காக என்னை உனக்காய் ...
ஏங்க வைத்தாய் .....?

எதற்காக என் நிம்மதியை ....
தொலைத்தாய் .....?

எதற்காக என்னை பிரிந்தாய் ...?

எதற்காக உன் வலியையும் ....
நான் சுமக்கிறேன் ....?

இதற்கெல்லாம் காரணம் ...
காதல் என்றால் அதுவும் ....
எதற்காக என்றே தெரியவில்லை ...?

^^^^^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் "மன்னித்து"விடுவேன்
மறந்தால் "மரணித்து" விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்

சனி, 13 மே, 2017

மந்திரமில்லை

தினமும் அர்சனை ...!
முகம் பார்த்து ......
பேச மாட்டார் ....!
ஒரு சில நேரங்களில் .....
உரத்த குரல் ஆனால் ......
ஒருநாளும் சிறு அடிகூட .....
அடித்த தில்லை ...!
நீங்கள் சொன்ன
அர்ச்சனைதான் எதிர்
கால வாழ்க்கை தத்துவம்
இன்று உணர்ந்தேன்
தந்தையே ....!
-----
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்

புதன், 10 மே, 2017

நம்பி விட்டேன் ....!

எதற்காக.....
இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!

$$$$$

என் ......
காதல் நினைவு ....
உன் காதல் வலி...
எப்படி தாங்கும்
என் இதயம் ....!

$$$$$

நீ
வார்த்தையால் ....
காதல் செய்ததை ....
நான் இதயக்காதல் ....
காதல் செய்கிறாய்........
என்று நம்பி விட்டேன் ....!

^^^^^^
கவிப்புயல் இனியவன்

சிறுதுளி கண்ணீர் ....!

கண்களால் சித்திரம் ....
வரைந்தவள் .....
கண்ணீரால் சித்திரம் ....
வரைய வைக்கிறாள் ....!

$$$$$

மூச்சை நிறுத்தினால்..
மட்டுமே மரணம் இல்லை.
நீ பேச்சை நிறுத்தினாலும்.
மரணம் தான்......!

$$$$$

உயிர் விட்டு போகும் .....
உடலுக்காக விடும் ....
கண்ணீரை விட கொடுமை ...
உயிராய் காதலித்தவர் ,,,,
விட்டுப்பிரியும்போது ....
ஓரக்கண்ணில் வடியும் ...
சிறுதுளி கண்ணீர் ....!

^^^^^^
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 9 மே, 2017

நீ ஆயிரம் முறை நிராகரி ....

நீ ஆயிரம் முறை நிராகரி ....
பல்லாயிரம் முறை முயற்சிப்பேன் ....
உண்மை காதல் எளிதில் கிடைக்காது ....!

^^^
நீ காதல் செய்ய முனைகிறாய் ....
என்னசெய்வது உனக்கு வரவில்லை .....
காதல் இறைவனின் கொடை.....!

^^^
உன்னால் காயப்படும் கூட‌.....
ஆறுதல் சொல்ல‌ நீவருவாய் .....
ஏங்குதுசொற‌ணை கெட்ட‌இதயம்....!

^^^
காதலித்து உள்ளத்தை சுத்தமாக்கு....
கவிதை எழுதி உணர்வை சுத்தமாக்கு...
இரண்டையும் செய்பவன் காதல் ஞானி....!

^^^
கவிப்புயல் இனியவன்
ஏங்கும் காதல் இதயம்

சனி, 6 மே, 2017

நினைவுகள் காதலிக்க தொடங்கிவிட்டன

கண்களால் தோன்றிய........
காதலை கவிதையால்......
வடிக்கிறேன்.........
நீ கண்ணீரால் .......
எழுதச்சொல்கிறாயா........
ஒருமுறை என்னோடு......
பேசிவிடு..........................!

காதல் .....
என்ன உடல் நலத்துக்கு.........
கேடானதா.......?
இப்படி ஜோசிக்கிறாய்........
காதல் செய்ய....?

நீ ................
என்னை காதலிப்பாயோ.....
இல்லையோ தெரியாது......
உன் நினைவுகள் என்னை......
காதலிக்க தொடங்கிவிட்டன......!

&
கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய் 09

நீ இல்லையேல் கவிதையில்லை 02

கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!

என்
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!

நீ தூங்கிவிட்டு எழுந்த .....
போர்வை கசங்கியிருக்கும் ....
வடிவத்தை பார் ......
இதய வடிவத்திலேயே ....
சுருண்டு கிடக்கிறது .....
அத்தனை நினைவகளுடன் ....
கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!

++
கவிப்புயல் இனியவன்
நீ இல்லையேல் கவிதையில்லை 02 

வியாழன், 4 மே, 2017

நீ இல்லையேல் கவிதையில்லை

நீ இல்லையேல் கவிதையில்லை
-------------------------------
ஆயிரம் கவிதைகள் ....
ஆயிரம் பின்னூடல்கள் ....
ஆயிரம் கவிரசிகர்கள்.....
பலநூறு சிறப்புகவிதை ....!

அத்தனையையும் ....
தாண்டிய சிறப்புகவிதை .....
என்னவள் சொன்ன வார்த்தையே.....!

என் கவிதையை ...
ரசித்து விட்டு சொன்னாள்.....
இத்தனை கவிதையை......
எழுதிய உன் கையில்.......
முத்தமிட்ட ஆசை......!

அவளுக்கு புரியவில்லை.....
அவள் இல்லையேல் எனக்கு......
கவிதையே இல்லை............!

++
கவிப்புயல் இனியவன்
நீ இல்லையேல் கவிதையில்லை

ஆன்மீக கவிதை

ஒரு ஜீவன் .....
வதைக்கபடும் போது .....
உன் உயிரும் வதை படனும் ......
அப்போதான் நீ ஜீவன் .....
வதைக்கப்படும் ஜீவனை....
பார்த்து பதபதக்கும் ஜீவன்....
ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!

படைப்புகள் எல்லாம் ஒன்றே......
வடிவங்களே வேறுபடுகின்றன......
உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!

எல்லவற்றையும் விரும்பு .......
அளவோடு  விரும்பு ......
எல்லா வற்றிலும் சமனாக...
பற்றுவை‍ _ எதில் அளவு .....
அதிகமாகிறதோ அதுவே.....
உனக்கு மரணத்தின்......
நுழைவாயில்............................!

அன்பு ..பாசம்.. கருணை...
இரக்கம்..பற்று..காதல்....
தியாகம்....எல்லமே அளவாக....
இருக்கவேண்டும் அளவுக்கு.....
மீறும் போது நீ மட்டுமல்ல.....
அவர்களும் துன்ப படுகிறார்கள்......!

&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன் 

புதன், 3 மே, 2017

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 2 மே, 2017

அம்மா

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................அம்மா........................!!!

எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
^^^

அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!
^^^

உலகின் தியாகி யார் என்று கேட்டேன்.......
அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........!

^^^
பிசைந்த சோற்றை அருவருக்காமல் .........
சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........!

^^^
எப்போது நினைத்தாலும் கண்ணீர்......
அன்னையை தவிர யாரும் இல்லை.....!


@@@

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்