Saturday, April 29, 2017

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................மழை.........................!!!

வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!

|||||||

வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை
வானம் கதறி அழுதாள் - அடைமழை

||||||||

பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம்
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம்

|||||||

விவசாயியின் நண்பன் - மழை
வியாபாரியின் எதிரி -மழை

||||||

மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழையில் நனைந்ததும் மறையாது

IIIIII

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்

சரிபாதியாக்கி விடாதே

........காட்சிகள்
........கனவாகும்
........நீ
........காட்சியானாய்
........நான்
!........கனவில் வாழ்கிறேன்

........நீ
........கனவாய் போனல்
........கண்ணீராய்
.!.......மாறிவிடுவேன்

........கண்ணுக்குள்
........விழுந்த நீ
........காட்சியாவவே.
........இருந்துவிடு
!........தூசியாக மாறிவிடாதே

.........உன்னை
.........சரிபாதியாக
.........பார்க்கிறேன்
.........நீ என்னை
!.........சரிபாதியாக்கி விடாதே


கவிப்புயல் இனியவன்
ஏனடி காதலால் கொல்லுகிறாய்

கண்ணீர் துளிகளால்.....

கண்ணீர் துளிகளால்..... அழகாக்கியவளே..... கரைந்தது கண்களே..... காதல் இல்லை...........! சோகமும் கண்ணீரும்..... காதலை கரைக்காது........ காலமெல்லாம் காத்திருக்கவைக்கும்.......! உன்னை நினைப்பதற்காகவே...... இறைவன் என்னை .... படைத்துவிட்டானே ...... நான் என்ன செய்வது....? ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சோகக் கவிதை 02 29 .04.2017

Friday, April 28, 2017

காதல் சோகத்திலும் சுகம் தரும்

ஒரு நாளில் ஒரு .......
வார்த்தையாவது பேசிவிடு........
இல்லையேல் என்னை ........
கொன்ற பாவத்துக்கு......
ஆளாகிவிடுவாய்.....................!

நீ
பேசாமல் இருக்கும்.....
ஒவ்வொரு நொடியும்.....
நான் பேச்சை இழக்கும்.....
நொடிகள் என்பதை.....
மறந்துவிடாதே.........!

^^^
கவிப்புயல் இனியவன்
காதல் சோகக் கவிதை
29 .04.2017

Tuesday, April 25, 2017

ஆன்மீக கவிதை

ஆன்மீக கவிதை
-----------------------
பல்வகை கவிதை
-----------------------

ஐம் பொறியை அடக்கி ....
ஐயங்களை தெளிவுபடுத்தி ....
ஐம்பூதத்தை வசப்படுத்தி .....
ஐந்து வகை நிலத்தை ஆழும் ...
ஐயன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

ஐயங்களை தூக்கி எறிந்து விடு ....
ஐக்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
ஐயக்காட்சிக்கு இடமளிக்காதே .....
ஐயமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
ஐயங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

ஐசுவரியத்தை  நேர்மையாய் உழை ....
ஐக்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
ஐயிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
ஐயிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ஐம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

ஐயா என்று பணிபோடு முதியோரை அழை ....
ஐயர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ஐம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
ஐவாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
ஐயனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்  

கவிப்புயல் இனியவன் 1000 கஸல்

இனியவன் கஸல் கவிதைகள்
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^
கவிப்புயல் இனியவன்
இது எனது 1000 கஸல் 

Monday, April 24, 2017

பல்சுவைக்கவிதைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------
என் ........
காதலின் வலிமை ......
உனக்கு புரியவில்லை .....
என்றோ என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!

உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?

^^^^^
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^
200 கவிதைக்கு மேல் இந்த தலைப்பில்
கவிதை உள்ளது

ஒரு காதல் ஒரு ஓசை........!

ஒரு காதல் ஒரு ஓசை........!
---------------------------
இதயத்தில் இதமாய் வந்- தாய்
காதலை சுகமாய் தந்- தாய்
நினைவில் இன்பமாய் இருந்- தாய்
சொல்லடி என்ன செய்- தாய்............?

உன்னில் என்னை மறந் -தேன்
உயிராய் உன்னை நினைத் -தேன்
உறவுகளோடு உன்னிடம் வந் -தேன்
உன் சம்மதத்தால் மெய்மறந் -தேன்

^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^

Sunday, April 23, 2017

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

----------------------------------
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
----------------------------------
சின்ன சண்டையிட்டு .....
சின்ன கோபத்துடன் ....
சின்னனாய் விலகியிருப்பது ...
ஊடல் எனப்படும் ....!!!

ஊடலின் அதிக இன்னமே ....
கூடலின் அதிக இன்பமாகும் ....
கூடலின் ஒரு செயலே ....
ஊடல் ஆகும் ......!!!

+
குறள் 1330
+
ஊடலுவகை
+
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 250

^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^
திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன்

சிறப்பு இடுகை

முதல் காதல் அழிவதில்லை

இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரல...