இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 மார்ச், 2014

என் கைரேகை சோதிடர்

என்
கைரேகை சோதிடர்
நீ தான்  ஆயுள் ரேகையை
தீர்மானிப்பவளும் - நீ
என் சந்தான பாக்கியத்தை
உறுதிப்படுத்துபவளும் -நீ
நீ தான் என் காதல்
தனரேகையும் ..
எல்லாம் நீ நீ நீ

சிறைக்கைதியாகி விடுவேன்

என்
இதயத்தை திருடிவிட்டு -போ
உன்னை
கைது செய்ய மாட்டேன்
திருப்பி
தருவாயானால்
காதல்
கைதியாகிவிடும்
மனதில் ...
உன்னை விட யாரையும்
நினைக்காது - மனது
காதல்
சிறைக்கைதியாகி
விடுவேன் 

உயிர் மூன்றெழுத்து 05

நெற்றி கண் திறந்தபோது நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்த போது நான் எரிந்தேன்
முதலாவதில் மீட்சி இருந்தது உன்னில் ...?

------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

உயிர் மூன்றெழுத்து 04

உலக போதையிலேயே கொடூரம்
உன் போதை கண் தான் -இன்னும்
போதையில் இருந்து மீளவில்லை

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

உயிர் மூன்றெழுத்து 03

காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும் 
கவிதை எழுது உலகம் சுத்தமாகும் 
இரண்டையும் செய்பவன் ஞானி 

-------------------------------
உயிர் மூன்றெழுத்து 
கவிதை மூன்று வரி